கங்கை நதிக்கடியில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் நீருக்கடியிலான சுரங்க வழிப்பாதை. சுவராஸ்ய தகவல்கள்

Written By:

இந்தியாவின் முதல் நீருக்கடியிலான சுரங்கப்பாதை இரண்டு கிலோ மீட்டர் நீளத்தில் கொல்கத்தாவின் கங்கை நதிக்கடியில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா மெட்ரோவின் இரண்டாம் கட்ட விரிவாக்க பணிகளில் கங்கை நதிக்கடியில் ரயில் வழித்தடம் அமைத்திட முடிவுசெய்யப்பட்டது.

கங்கை நதிக்கடியில் இந்தியாவின் முதல் மெட்ரோ சுரங்கப் பாதை

அதற்காக மத்திய அரசு 25 சதவீதமும், மேற்கு வங்க மாநில அரசு 30 சதவீதமும், ஜப்பானின் சர்வதேச கூட்டமைப்பு 45 சதவீதமும் நிதி ஒதுக்கீடு செய்தன.

இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகளின் கூட்டு நிறுவனமான அஃப்கான்ஸ் டிரான்ஸ்ட்டோனல்ஸ்டோரி மிகவும் சவாலான இந்த பணியை கட்டமைக்க தொடங்கியது.

கங்கை நதிக்கடியில் இந்தியாவின் முதல் மெட்ரோ சுரங்கப் பாதை!

கங்கை நதிக்கடியில் சுரங்க வழித்தடத்தை அமைத்திட ஜெர்மனியில் இருந்து 'ஹெர்ரென்கெனச்ட் ஏ.ஜி' என்ற டனல் போரிங் இயந்திரம் கொல்கத்தாவிற்கு வரவழைக்கப்பட்டது.

கங்கை நதிக்கடியில் இந்தியாவின் முதல் மெட்ரோ சுரங்கப் பாதை!

கொல்கத்தாவின் 2ம் கட்ட மெட்ரோ பணிகள் 16.6 கிலோ மீட்டர் நீளம் கொண்டவை. அதில் 502 மீட்டர் நீளத்தில் கங்கை நதிக்கடியில் இந்த சுரங்க வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்க மெட்ரோ வழித்தடம் கொல்கத்தாவின் மேற்கு பகுதியான ஹவுராவில் தொடங்கி கிழக்கு பகுதியில் அமைந்துள்ளன சால்ட் லேக் சிட்டி என்ற பகுதியை இணைக்கிறது.

கங்கை நதிக்கடியில் இந்தியாவின் முதல் மெட்ரோ சுரங்கப் பாதை!

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட இதற்கான பணிகள், வரும் ஜூலையில் முடிக்கப்பட்டும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில்,

அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே, அனைத்து பணிகளும் 50 நாட்களுக்குள் வெற்றிக்கரமாக கட்டி முடிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன.

கங்கை நதிக்கடியில் இந்தியாவின் முதல் மெட்ரோ சுரங்கப் பாதை

கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி கங்கை நதிக்கடியில் மெட்ரோ வழிப்பாதைக்கான சுரங்க வழித்தடம் அமைத்திடும் பணிகள் தொடங்கின.

இதற்கான பொறியாளர்கள், வேலையாட்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என மொத்தம் 250 பேர் இரவுப் பகலுமாக பணியாற்றினர்.

கங்கை நதிக்கடியில் இந்தியாவின் முதல் மெட்ரோ சுரங்கப் பாதை

கங்கைக்கு அடியில் டனல் போரிங் இயந்திரத்தை வைத்து சுமார் 35 முதல் 40 மீட்டர் வரை தினமும் மெட்ரோ வழித்தடத்திற்கான சுரங்கம் தோண்டப்பட்டு வந்தது.

கங்கை நதிக்கடியில் இந்தியாவின் முதல் மெட்ரோ சுரங்கப் பாதை

இதில் பணியமர்த்தப்பட்ட அனைத்து வேலையாட்களும் கடுமையாக உழைத்ததால், குறுகிய காலத்திலேயே சவாலான இந்த பணி முடிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பணியாற்றிய அனைவருக்கும் மேற்கு வங்க அரசும் மற்றும் கொல்கத்தா நகர மக்கள் பாராட்டுதலை தெரிவித்து வருகின்றனர்.

கங்கை நதிக்கடியில் இந்தியாவின் முதல் மெட்ரோ சுரங்கப் பாதை

கொல்கத்தாவின் 2வது மெட்ரோ வழித்தடம் மொத்தம் 16.6 கிலோ மீட்டர் நீளம் கொண்டவை. இதில் 6 சுரங்க இரயில் நிலையங்களும், 6 உயர்மட்ட ரயில் நிலையங்களும் அடங்கும்.

கங்கை நதிக்கடியில் அமைக்கப்பட்டுள்ள வழித்தடத்தில் இரண்டு மெட்ரோ ரயில்நிலையங்கள் அமையவுள்ளன.

கங்கை நதிக்கடியில் இந்தியாவின் முதல் மெட்ரோ சுரங்கப் பாதை

பலகட்ட இடையூறுகளுக்கு பிறகு கொல்கத்தாவின் 2வது மெட்ரோ வழித்தடத்தின் பாதி பணிகள் சுமார் 5000 கோடி செலவில் வெற்றிக்கரமாக முடிந்துள்ளது.

கங்கை நதிக்கடியில் அமைந்துள்ள 502 நீளம் கொண்ட சுரங்க வழித்தடத்திற்கு மட்டும் சுமார் ரூ.2000கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கங்கை நதிக்கடியில் இந்தியாவின் முதல் மெட்ரோ சுரங்கப் பாதை

கொல்கத்தாவின் 2வது மெட்ரோ ரயில் விரிவாக்கப்ப பணிகள் அனைத்தும் 2019ம் ஆண்டு மே மாதத்திற்குள் முடிக்கப்பட்டு அதே ஆண்டு டிசம்பரில் மெட்ரோ ரயில்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படும் என கொல்கத்தா மெட்ரோ ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் அறிவித்துள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
India's first underwater rail tunnel a stretch of 2km long tunnel, progressing in Kolkata. Click for details...
Story first published: Thursday, May 25, 2017, 12:28 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark