சென்ட்ரல்-அரக்கோணம், பீச்-செங்கல்பட்டு இடையே ஓட இருக்கும் வந்தே மெட்ரோ ரயிலா இது? ஃபுல்லா ஏசி மட்டும்தான்!

வந்தே பாரத் ரயிலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் வந்தே மெட்ரோ ரயிலின் வீடியோ மற்றும் படங்கள் முதல் முறையாக வெளியிட்டு உள்ளது. தினசரி ரயில் பயணத்தை மேற்கொள்வோருக்கு உதவும் விதமாக மிக சிறப்பாக இந்த ரயிலை இந்தியன் ரயில்வேஸ் உருவாக்கி இருக்கின்றது. வாங்க புதிய வந்தே மெட்ரோ ரயில் பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்திய ரயில் பயணிகளின் ஃபேவரிட் ரயிலாக வந்தே பாரத் ரயில் மாறி இருக்கின்றது. இந்த நிலையிலேயே இந்த ரயிலை தழுவி இந்தியன் ரயில்வேஸ் நிர்வாகம் வந்தே மெட்ரோ ரயில்களை உருவாக்கும் முயற்சியில் களமிறங்கியது. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் வந்தே மெட்ரோ ரயிலின் வீடியோவே தற்போது வெளியாகி இருக்கின்றது.

Vande bharat metro

இதுவே நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் வந்தே மெட்ரோ ரயில் ஆகும். இது பஞ்சாப் மாநிலம், கபுர்லா பகுதியில் அமைந்துள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையிலேயே தயாரிக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. லோக்கல் ரயில்களான எலெக்ட்ரிக் பயணிகள் ரயிலைப் போல தினசரி பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டதே வந்தே மெட்ரோ ரயில்கள் ஆகும்.

வெகுவிரைவில் இந்த ரயில்கள் நாட்டில் உள்ள சில முக்கிய வழித்தடங்களில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இந்த நிலையிலேயே முதலாவதாக தயார் செய்யப்பட்ட வந்தே மெட்ரோ ரயில் முழுமையாக கட்டியமைக்கப்பட்டநிலையில் வெளியேற்றப்பட்டு இருக்கின்றது. மிகவும் பிரீமியமான லுக்கில் இந்த வந்தே மெட்ரோ ரயில் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

இதன் வெளிப்பக்கம் வந்தே பாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இருந்தாலும், உட்பக்கம் தினசரி போக்குவரத்துக்கான ரயில் இது என்பது தெளிவாக தெரிகின்றது. இரண்டு பக்கமும் மூன்று பேர் வரை அமர்கின்ற வகையில் பெஞ்ச் வகை இருக்கைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், வந்தே பாரத் ரயிலில் கேப்டைன் ரக இருக்கைகள் வழங்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

புதிய வந்தே மெட்ரோ ரயிலில் உட்பக்கமும் அதிக பிரீமியமான தோற்றம் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. செல்போன்களை சார்ஜ் செய்வதற்கான போர்ட்டுகள், அவசர தொடர்புக்கான வசதிகள், சிசிடிவி கேமிராக்கள் நின்றுக் கொண்டு பயணிப்பவர்கள் பாதுகாப்பாக நிற்பதற்கு ஏதுவாக கைப் பிடிகள் மற்றும் மோட்டாரால் இயங்கும் கதவுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

Vande bharat metro cctv

இத்துடன் பயணிகளுக்காக கழிவறை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளும் இந்த ரயிலில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், இந்த ரயிலில் ஃபேன்கள் வழங்கப்படவில்லை. இது ஓர் ஏசி வசதிக் கொண்ட ரயில் என்பதால் அதற்கான அவசியம் இந்த ரயிலில் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

தற்போது இந்த ரயில் சோதனையோட்டத்திற்கு உட்படுத்தப்பட இருக்கின்றது. இந்த சோதனையோட்டத்தைத் தொடர்ந்து விரைவில் அது மக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றது. இப்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி முதலில் இந்த வந்தே மெட்ரோ ரயில் லக்னோ-கான்பூர், ஆக்ரா-மதுரா மற்றும் சென்னை - திருப்பதி ஆகிய வழித்தடங்களில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன.

Vande bharat metro seat

இதுதவிர, சென்னையின் முக்கிய வழித்தடமான சென்னை - அரக்கோணம் மற்றும் சென்னை பீச் - செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களிலும் வந்தே மெட்ரோ ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இதற்கான ஆய்வு பணிகளை தெற்கு ரயில்வே ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மணிக்கு 100 கிமீ முதல் 250 கிமீ வரையிலான வேகத்தில் இயங்கும் திறன் கொண்டதே வந்தே மெட்ரோ ரயில்கள் ஆகும். மிக சிறந்த பிக்-அப் மற்றும் பிரக்கிங் சிஸ்டத்தையும் இது கொண்டிருப்பதாக இந்தியன் ரயில்வேஸைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் சிலர் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

Vande bharat metro door

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ரயில் அதிக வேகத்தில் பயணிக்கும் மற்றும் உடனே வேகத்தைக் குறத்து நிற்கும் திறனைக் கொண்டிருப்பதால் உள்ளூர் போக்குவரத்தை நேர சிக்கல் இன்றி வந்தே மெட்ரோ ரயில் சிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 12 கோச்சுகளைக் கொண்டதே வந்தே மெட்ரோ ரயில்கள் ஆகும். தேவைக்கு ஏற்ப இதன் கோச்சுகளை 16 வரை உயர்த்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, May 3, 2024, 5:00 [IST]
English summary
India s first vande metro rail video
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X