இந்தியாவிலேயே முதல் முறையாக வாட்டர் மெட்ரோ சேவை தொடக்கம்! சூப்பர்... இதுக்காகவே அந்த ஊருக்கு டூர் போலாம்!
இந்தியாவிலேயே முதல் முறையாக வாட்டர் மெட்ரோ சேவை (Water Metro Service) எனும் படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது. எங்கு தொடங்கப்பட்டுள்ளது?, படகின் சிறப்புகள் என்ன? என்பது பற்றிய முக்கிய விபரங்களையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த தகவலை விரிவாகக் காணலாம்.

அண்டர் கிரவுண்ட் (பூமிக்கு அடியில்) மற்றும் பாலங்களில் செல்லும் மெட்ரோ ரயில்களைதான் நாம் நம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் பார்த்திருப்போம். இந்த நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக தண்ணீரில் பயணிக்கக் கூடிய மெட்ரோ சேவை (Metro Service Starts) கேரளாவில் தொடங்கப்பட்டுள்ளது. மிக நீண்ட தூர பயணத்தை தண்ணீரில் பயணிக்க விரும்புவோர்களை இந்த மெட்ரோ சேவை நிச்சயம் கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கேரளாவின் கொச்சின் நகரத்திலேயே வாட்டர் மெட்ரோ சேவை பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள தீவுகளில் வசிக்கும் மக்களின் பயன்பாட்டை மையப்படுத்தி படகு மெட்ரோ சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதுதவிர, இந்த சேவை சுற்றுலாவாசிகளையும் அதிகளவில் கவரும் என நம்பப்படுகின்றது.

ஹைபிரிட் ரயில் போன்ற உருவத்தில் வாட்டர் மெட்ரோ படகு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தோற்றமே அதனை படகு என்று அழைப்பதற்கு பதிலாக மெட்ரோ ரயில் என பலரை அழைக்கச் செய்திருக்கின்றது. வெள்ளை மற்றும் நீல நிற பூச்சால் படகு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது படகிற்கு வேற லெவல் தோற்றத்தைச் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

சுமார் 10 தீவுகளை இணைக்கும் வகையில் இந்த மெட்ரோ படகு சேவை இயங்கும். 38 முனையங்களை இணைக்கும் வகையிலும் அது இயங்கும். இதுமட்டுமின்றி, ஒரே நேரத்தில் சுமார் 100 பயணிகள் வரை அதில் பயணிக்க முடியும். இது பெரிய மெட்ரோ படகின் இட வசதி ஆகும்.

சிறிய படகு ஒன்றும் மெட்ரோ சேவை திட்டத்தில் உள்ளது. அது, ஒரே சமயத்தில் 50 பயணிகளை அழைத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு தண்ணீர் மெட்ரோ படகுகளின் உட்பகுதியும் தற்போது பயன்பாட்டில் உள்ள மெட்ரோ ரயில்களைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் கேபினும் மெட்ரோ ரயில் கேபினை போலவே காட்சியளிக்கின்றது.

ஒட்டுமொத்தமாக 78 தண்ணீர் மெட்ரோ ரயில்கள் பயன்பாட்டில் இணைய இருக்கின்றன. இதில், முதலாவதாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பணியில் களமிறங்கியிருக்கும் படகு குறித்த வீடியோவே தற்போது வெளியாகியுள்ளது. அதனை நீங்கள் கீழே காணலாம். இன்னும் பல படகுகள் அடுத்தடுத்து பயன்பாட்டிற்கு வர உள்ளன.
அவற்றைக் கட்டமைக்கும் பணியில் கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் (Cochin Shipyard Limited) ஈடுபட்டு வருகின்றது. இது கணிசமான படகுகளை அடுத்தடுத்த மாதங்களில் பயன்பாட்டிற்கு களமிறக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படகின் நிறுத்துமிடங்களும் தற்போது பயன்பாட்டில் உள்ள மெட்ரோல் ரயில் நிலையங்களை போலவே காட்சியளிக்கின்றன.

இதனை வீடியோ வாயிலாக உங்களால் காண முடியும். மேலும், ஏற்கனவே பயணிகள் பயணிக்க தொடங்கியிருப்பதையும் உங்களால் காண முடியும். தற்போது பயன்பாட்டில் இருக்கும் நிறுத்துமிடங்களுடன் மேலும் ஐந்து புதிய முனையங்கள் விரைவில் இணைய இருக்கின்றன. இவற்றின் கட்டுமான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இப்பணிகள் நடப்பு வருட ஜூன் மாதத்திற்குள்ளாகவே நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மெட்ரோ படகு சேவை கொச்சி மெட்ரோ ரயில் லிமிடெட் (Kochi Metro Rail Limited) அல்லது கேஎம்ஆர்எல் (KMRL) என்ற பெயரில் இயங்கும். தற்போது, வைபீன்-போல்கட்டி-ஹைகோர்ட் வழித்தடமே பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

விரைவில் இன்னும் சில முனையங்கள் வழித்தடத்தில் சேர்க்கப்பட உள்ளன. மேலும், இன்னும் சில மெட்ரோ படகுகள் சேர்க்கப்பட்ட பின் இன்னும் முழுமையான உத்வேகத்தில் இந்த சேவை பயன்பாட்டிற்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications








