இந்தியாவின் மிக நீளமான சஸ்பென்ஷன் மேம்பாலம் திறப்பு... இத கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகளானது தெரியுமா?

இந்தியாவின் மிக நீளமான சஸ்பென்ஷன் வசதிக் கொண்ட மோட்டாரபிள் மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவின் மிக நீளமான சஸ்பெஷன் மேம்பாலம் திறப்பு... இதை கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகளானது தெரியுமா..?

இந்திய வரலாற்றில் இடம் பிடிக்கும் வகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள டோப்ரா-சந்தி சஸ்பென்ஷன் மேம்பாலம் உள்ளது. ஏனெனில், தற்போது நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் ஒற்றை வழிக் கொண்ட மேம்பாலங்களிலேயே மிகவும் நீளமான மேம்பலாமாக இது இருக்கின்றது. மேலும், இது ஓர் மோட்டரபிள் சஸ்பென்ஷன் மேம்பாலம் ஆகும்.

இந்தியாவின் மிக நீளமான சஸ்பெஷன் மேம்பாலம் திறப்பு... இதை கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகளானது தெரியுமா..?

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தெஹ்ரி கர்வால் எனும் மாவட்டத்திலேயே இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இதனை உத்தரகாண்ட் மாநிலத்தின் முதலமைச்சர் திரிவேந்திர சிங் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இந்தியாவின் மிக நீளமான சஸ்பெஷன் மேம்பாலம் திறப்பு... இதை கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகளானது தெரியுமா..?

வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த மேம்பாலம் அமைந்துள்ளது. குறிப்பாக, பிரதாப் நகர் மற்றும் தெஹ்ரி கர்வால் இடையிலான பயண நேரத்தை குறைக்கும் வகையில் இந்த மேம்பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. 725 மீட்டர் நீளம் கொண்ட இந்த மேம்பாலத்திற்கு டோப்ரா-சண்டி எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிக நீளமான சஸ்பெஷன் மேம்பாலம் திறப்பு... இதை கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகளானது தெரியுமா..?

இந்த மேம்பாலமே முன்பிருந்த அதிகபட்ச நேரத்தை மிக மிக குறைந்த நேரமாக மாற்றியுள்ளது. மேம்பாலம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னதாக, தெஹ்ரியில் இருந்து பிரதாப் நகரை சென்றடைய சுமார் 5 மணி நேரங்கள் எடுத்துக்கொள்ளும். 85 கிமீட்டர்கள் கொண்ட மலைப் பாதையைக் கடந்தே அடுத்த முனையில் இருக்கும் பகுதியை அடைய முடியும்.

இந்தியாவின் மிக நீளமான சஸ்பெஷன் மேம்பாலம் திறப்பு... இதை கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகளானது தெரியுமா..?

எக்கச்சக்கமான வளைவுகள், உயரம் ஆகியவற்றை இந்த மலைப் பாதைக் கொண்டிருக்கின்றது. எனவேதான் அதிகபட்ச நேரமாக ஐந்து மணி நேரங்களை மலைப் பாதை எடுத்துக் கொள்கின்றது. இதனையே புதிய டோப்ரா-சண்டி மேம்பாலாம் 90 நிமிடங்களாக குறைத்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு தொடங்கப்பட்ட மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் 2008ம் ஆண்டே முடிவடைந்துவிடும் என கூறப்பட்டது.

இந்தியாவின் மிக நீளமான சஸ்பெஷன் மேம்பாலம் திறப்பு... இதை கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகளானது தெரியுமா..?

ஆனால், கூடுதலாக 12 ஆண்டுகளுக்கு மேல் எடுக்கப்பட்டிருக்கின்றது. ஆம், நிர்ணயிக்கப்பட்ட காலத்தைக் காட்டிலும் கூடுதலாக 12 ஆண்டுகள் மேம்பாலத்தைக் கட்டி முடிக்க எடுக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு, அப்பகுதியில் காணப்பட்ட மிகச் சாவலான சூழ்நிலையேக் காரணம் என மேம்பாலக் கட்டுமானப் பொறியியலாளர்கள் கூறுகின்றனர். இந்த காலக் கெடுவால் கூடுதலாக கட்டுமான செலவும் ஏற்பட்டிருக்கின்றது.

இந்தியாவின் மிக நீளமான சஸ்பெஷன் மேம்பாலம் திறப்பு... இதை கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகளானது தெரியுமா..?

ஒட்டுமொத்தமாக ரூ. 2.95 கோடிகள் வகை மேம்பாலம் கட்டமைக்க செலவாகி இருப்பதாகக் கூறப்படுகின்றது. "மேம்பாலம் திறப்பு நிகழ்வு மாநிலத்திற்கு ஓர் குறிப்பிடத்தக்க வரலாற்று தருணம். இது பிரதாப் நகர மக்களை மாவட்ட தலைமையகத்துடன் இணைப்பது மட்டுமல்லாமல், வளர்ச்சிக்கான வழிவகைகளையும் திறக்கும்" என்று அம்மாநில முதலமைச்சர் கூறினார்.

இந்தியாவின் மிக நீளமான சஸ்பெஷன் மேம்பாலம் திறப்பு... இதை கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகளானது தெரியுமா..?

கடந்த சில வாரங்களுக்கு முன்பு லடாக் பகுதியில் உலகின் மிக நீளமான இரு வழி கொண்ட சுரங்க வழிப் பாதை பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த நிலையிலேயே தற்போது நாட்டின் மிக நீளமான சஸ்பென்ஷன் மேம்பாலம் உத்தரகாண்ட் மாநிலத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

Image Creidt: Sahil Pednekar

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
India's Longest Single-Lane Motorable Suspension Bridge Inaugurated In Uttarakhand. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X