சென்னையில் உற்பத்தியாகும் இந்தியாவின் சூப்பர் ஹிட் கார்கள்!

Written By:

ஆசியாவின் 'டெட்ராய்ட்' என்ற போற்றப்படும் சென்னையில் பல முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களும், வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் உற்பத்தியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் இந்தியாவின் சூப்பர் ஹிட் கார் மாடல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் களமிறக்கப்பட்ட முதல் எஸ்யூவி மாடல் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட். 2013ல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த எஸ்யூவி அன்று முதல் இன்று வரை சூப்பர் ஹிட் மாடலாக வலம் வருகிறது.

நம்ம சென்னையில் உற்பத்தியாகும் இந்தியாவின் சூப்பர் ஹிட் கார்கள்!

அழகிய வடிவமைப்பு, சிறப்பான வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள், தோதுவாான விலை என்று பல்வேறு சாதக விஷயங்களை பெற்றிருக்கிறது. மாதத்திற்கு 4,000 முதல் 5,000 வரை விற்பனையாகிறது.

ரெனோ க்விட்

ரெனோ க்விட்

ரெனோ நிறுவனத்திற்கு வர்த்தக ஸ்திரத்தன்மையை கொடுத்த மாடால் ரெனோ க்விட். எஸ்யூவி போன்ற அசத்தலான டிசைன், நவீன சிறப்பம்சங்கள் மற்றும் பட்ஜெட் விலை போன்றவை இந்த காருக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்துள்ளது.

நம்ம சென்னையில் உற்பத்தியாகும் இந்தியாவின் சூப்பர் ஹிட் கார்கள்!

2015ல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பபட்ட போது 800சிசி எஞ்சின் ஆப்ஷனிலும், பின்னர் 1.0 லிட்டர் எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வந்தது. மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் இதற்கு வலு சேர்க்கிறது. மாதத்திற்கு சராசரியாக 7,000 கார்கள் விற்பனையாகிறது. கிட்டத்தட்ட 98 சதவீத உதிரிபாகங்கள் உள்நாட்டிலேயே பெறப்படுகிறது.

ஹூண்டாய் க்ரெட்டா

ஹூண்டாய் க்ரெட்டா

சொகுசு காருக்கு இணையான டிசைனில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பபட்ட ஹூண்டாய் க்ரெட்டா இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி மாடல்களில் ஒன்று. மாதத்திற்கு சராசரியாக 7,000 க்ரெட்டா கார்கள் என்ற அளவில் விற்பனை செல்கிறது. 2015ல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பபட்டது முதல் விற்பனையில் தொடர்ந்து கலக்கி வருகிறது.

நம்ம சென்னையில் உற்பத்தியாகும் இந்தியாவின் சூப்பர் ஹிட் கார்கள்!

சிறப்பான எஞ்சின் தேர்வுகள் மற்றும் வசதிகள் மூலமாக வாடிக்கையாளர்களின் தேர்வில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. சென்னையில் உற்பத்தி செய்யப்படும் சூப்பர் டூப்பர் ஹிட் மாடல்களில் ஹூண்டாய் க்ரெட்டா முக்கியமான மாடலாக குறிப்பிடலாம்.

 டட்சன் ரெடிகோ

டட்சன் ரெடிகோ

ரெனோ க்விட் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த க்ராஸ்ஓவர் ரக மாடலும் இந்திய பட்ஜெட் வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. 2016ல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் வித்தியாசமான வடிவமைப்பு, அதிக க்ரவுண்ட் க்ளியரன்ஸ், குறைவான விலை போன்றவற்றால் வாடிக்கையாளர்களை கவர்ந்தது. ரெனோ க்விட் காரில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

நம்ம சென்னையில் உற்பத்தியாகும் இந்தியாவின் சூப்பர் ஹிட் கார்கள்!

டட்சன் ரெடிகோ காரின் விற்பனை மாதத்திற்கு 2,000 முதல் 3,000 வரை என்ற அளவில் இருந்து வருகிறது. நிஸான் மற்றும் டட்சன் பிராண்டுகளின் இந்திய வர்த்தகத்தில் மிக முக்கியமான மாடலாக இருக்கிறது.

ஹூண்டாய் எலைட் ஐ20

ஹூண்டாய் எலைட் ஐ20

ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டின் ஆணழகன் என்று கூறும் அளவுக்கு மிகச் சிறப்பான டிசைனில் விற்பனைக்கு கிடைக்கும் மாடல். இந்த காரின் தோற்றத்திற்கு இணையாக சிறப்பம்சங்களிலும் கலக்கலாக இருக்கிறது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை மிகச் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

நம்ம சென்னையில் உற்பத்தியாகும் இந்தியாவின் சூப்பர் ஹிட் கார்கள்!

பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கும் ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் மேம்படுத்தப்பட்ட அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மாடல் விற்பனையில் கூடுதல் எண்ணிக்கையை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர்

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய மாடல் ரெனோ டஸ்ட்டர். எஸ்யூவி கார்களுக்கு ஏற்ற மிரட்டலான டிசைன் இந்த காருக்கு வலு சேர்க்கிறது. எவ்வளவு போட்டி வந்தாலும், டஸ்ட்டர் எஸ்யூவிக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் இருந்து வருகிறது.

நம்ம சென்னையில் உற்பத்தியாகும் இந்தியாவின் சூப்பர் ஹிட் கார்கள்!

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவிக்கான உள்நாட்டு உதிரிபாகங்களின் அளவு வெகுவாக அதிகரிக்கப்பட்டு இருப்பதால், விலை ரூ.1 லட்சம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. எனவே, விற்பனை எண்ணிக்கை வரும் மாதங்களில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் விற்பனையில் மாருதியின் பட்ஜெட் கார்களுக்கு கடும் போட்டியை தந்து வருகிறது. பட்ஜெட் மார்க்கெட்டில் பிரிமியம் அம்சங்கள் கொண்ட மாடல் என்ற பெருமையும் இந்த காருக்கு உண்டு.

நம்ம சென்னையில் உற்பத்தியாகும் இந்தியாவின் சூப்பர் ஹிட் கார்கள்!

பெட்ரோல், டீசல் மாடல்களில் கிடைக்கும் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் குறைவான விலையில் பிரிமியம் ஹேட்ச்பேக் மாடலை விரும்புவோருக்கு சரியான தேர்வாக இருக்கிறது. இந்த கார் மாதத்திற்கு 12,000 என்ற சராசரி எண்ணிக்கையில் விற்பனையாகிறது.

 ஃபோர்டு எண்டெவர்

ஃபோர்டு எண்டெவர்

பிரிமியம் எஸ்யூவி மார்க்கெட்டில் ஃபோர்டு எண்டெவர் மிகச் சிறப்பான தேர்வாக இருக்கிறது. டொயாோட்டா ஃபார்ச்சூனருக்கு நேர் போட்டியாக இருந்து வரும் ஃபோர்டு எண்டெவர் டிசைனிலும், ஆஃப்ரோடு செயல்திறனிலும் மிகச் சிறப்பான தேர்வாக இருக்கிறது.

நம்ம சென்னையில் உற்பத்தியாகும் இந்தியாவின் சூப்பர் ஹிட் கார்கள்!

மிரட்டலான டிசைன், அதற்கு வலு சேர்க்கும் விதத்தில் சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷன்கள் ஆகியவை இந்த எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள். மாதத்திற்கு 500 முதல் 600 ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவிகள் இந்தியாவில் விற்பனையாகிறது.

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்

இந்தியாவின் மிக விலை உயர்ந்த சொகுசு கார் மாடல்களில் சிறப்பான தேர்வாக விளங்கும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் சென்னையில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் முதன்மையான தேர்வுகளில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரும் ஒன்று.

நம்ம சென்னையில் உற்பத்தியாகும் இந்தியாவின் சூப்பர் ஹிட் கார்கள்!

பிஎம்டபிள்யூ 7 சீரீஸ் கார் மட்டுமின்றி, 3 சீரிஸ் மற்றும் மினி கார்களும் இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன. கடந்த ஆண்டு பிஎம்டபிள்யூ குழுமம் இந்தியாவில் 9,800 கார்களை விற்று இரண்டாவது பெரிய சொகுசு கார் நிறுவனம் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறது.

நம்ம சென்னையில் உற்பத்தியாகும் இந்தியாவின் சூப்பர் ஹிட் கார்கள்!

இங்கே பார்த்த சில கார் மாடல்கள் இந்தியாவிற்கு மட்டுமில்லாமல், பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. வெளிநாடுகளிலும் இந்த கார்கள் சூப்பர் ஹிட் மாடலாகவே வலம் வருகின்றன.

மோசமான ரீ- சேல் மதிப்புடைய கார் மாடல்கள்!

மோசமான ரீ- சேல் மதிப்புடைய கார் மாடல்கள்!

சில புதிய கார் மாடல்கள் வாங்கிய ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே மிக மோசமான ரீசேல் மதிப்பை பெற்றுவிடுகின்றன. அந்த கார் மாடல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஃபியட் புன்ட்டோ

ஃபியட் புன்ட்டோ

கட்டுமானம், பாதுகாப்பில் சிறந்த கார் ஃபியட் புன்ட்டோ. ஆனால், இந்த காரின் விற்பனை மிக மோசமான நிலையை எட்டி இருக்கிறது. அத்துடன் ஃபியட் நிறுவனத்தின் வர்த்தகமும் நிச்சயமற்ற நிலையில் இருப்பதால் இந்த கார் வாங்குவதை தவிர்க்கலாம்.

ஃபியட் லீனியா

ஃபியட் லீனியா

ஃபியட் லீனியா காரும் விற்பனையில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. தரமான கட்டமைப்பு கொண்ட கார் மாடல் என்று கார் பிரியர்கள் மத்தியில் பெயர் எடுத்தாலும், ஃபியட் நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவை திருப்திகரமாக இல்லாததே, இந்த காரின் மதிப்பு குறைவதற்கு காரணமாகி விட்டது.

டாடா நானோ

டாடா நானோ

அடுத்து நமது பட்டியலில் நிச்சயமற்ற எதிர்காலத்துடன் விற்பனையில் இருக்கும் மாடல் டாடா நானோ ஜென்எக்ஸ். அசிங்கமான தோற்றம், திராணி இல்லாத எஞ்சின் போன்றவை இந்த காரின் தோல்விக்கு காரணங்கள். மேலும், ஒரு லட்ச ரூபாய் கார் என்று கூறி வந்த இந்த கார் தற்போது விலையிலும் மதிப்பு வாய்ந்ததாக இல்லை.

டாடா போல்ட்

டாடா போல்ட்

பெரும் எதிர்பார்ப்புடன் வந்த டாடா போல்ட் காருக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. இதனால், இந்த காரின் விற்பனை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. எனவே, இந்த காருக்கு ரீசேல் மதிப்பு நிச்சயம் குறைவாக கிடைக்கும். எனவே, இந்த காரையும் தவிர்ப்பது உத்தமம்.

டாடா சஃபாரி ஸ்ட்ராம்

டாடா சஃபாரி ஸ்ட்ராம்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவியும் மறுவிற்பனை மதிப்பில் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இந்த காரை பலர் விரும்பி வாங்கி நீண்ட கால அடிப்படையில் பயன்படுத்தினாலும், மீண்டும் விற்பனை செய்ய நினைக்கும்போது போதிய மதிப்பை பெற்றுத் தருவதில்லை.

மஹிந்திரா நூவோஸ்போர்ட்

மஹிந்திரா நூவோஸ்போர்ட்

மஹிந்திரா குவான்ட்டோ என்ற பெயரில் அறிமுகமாகி, தோல்வி கண்ட மாடலை புதுப்பித்து நூவோஸ்போர்ட் என்ற பெயரில் மஹிந்திரா களமிறக்கியது. ஆனால், அப்போதும் கூட இந்த கார் எதிர்பார்த்த அளவு விற்பனையில் சோபிக்கவில்லை. மேலும், இந்த காருக்கான மறுவிற்பனை மதிப்பும் குறைவாக உள்ளது.

மஹிந்திரா வெரிட்டோ வைப்

மஹிந்திரா வெரிட்டோ வைப்

ரெனோ கார் நிறுவனம் பிரிந்தபோது, அந்த நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட லோகன் காரை வெரிட்டோ என்ற பெயரிலும், அந்த காரில் மாற்றங்களை செய்து ஹேட்ச்பேக் ரகத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வெரிட்டோ வைப் காரையும் தவிர்ப்பது நல்லது. வெரிட்டோ வைப் காருக்கு மிக மோசமான ரீசேல் மதிப்பு இருக்கிறது.

ஹோண்டா பிரியோ

ஹோண்டா பிரியோ

ஹோண்டா பிரியோ காரின் விற்பனையும் வெறும் 500க்கும் கீழாக இருக்கிறது. இந்த காருக்கும் போதிய வரவேற்பு இல்லை. இதனால், இந்த காரின் மதிப்பு வெகுவாக குறைத்து கேட்கப்படுகிறது. இந்த காரின் டிசைன்தான் இதற்கு எதிரியாக இருக்கிறது.

நிஸான் டெரானோ

நிஸான் டெரானோ

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியில் சிறிய மாற்றங்களை செய்து நிஸான் நிறுவனம் டெரானோ என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது. இந்த எஸ்யூவியின் விற்பனையும் மிக மோசமான நிலையிலேயே இருக்கிறது. மேலும், டஸ்ட்டரைவிட அதிக விலை கொண்ட இந்த எஸ்யூவிக்கு ரீசேல் மதிப்பு குறைவாகவே இருக்கிறது.

ரெனோ லாட்ஜி

ரெனோ லாட்ஜி

மாருதி எர்டிகாவைவிட சற்று இடவசதி கூடுதலாகவும், டொயோட்டா இன்னோவா காரைவிட விலை குறைவாகவும் களமிறக்கப்பட்ட ரெனோ லாட்ஜி காருக்கும் வரவேற்பு எதிர்பார்த்த அளவு இல்லை. இந்த காரின் விற்பனை மதிப்பும் குறைவாகவே இருக்கிறது.

டட்சன் கோ

டட்சன் கோ

மிக மோசமான கட்டுமானத் தரம், குறைவான பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருப்பதால், வாடிக்கையாளர்களிடம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.

டட்சன் கோ ப்ளஸ்

டட்சன் கோ ப்ளஸ்

மினி எம்பிவி கார் என்ற விளம்பரத்துடன் வந்தாலும், மூன்றாவது வரிசை ஒப்புக்கு கொடுக்கப்பட்டதும், போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததும் இந்த டட்சன் கோ ப்ளஸ் காருக்கும் வரவேற்பு இல்லை. இந்த காரின் ரீசேல் மதிப்பும் மிக குறைவாகவே இருக்கிறது.

மோசமான ரீ- சேல் மதிப்புடைய கார் மாடல்கள்!

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் சில மாடல்கள் தரத்தில் சிறப்பானவையாக இருந்தாலும், விற்பனைக்கு பிந்தைய சேவையில் பின்தங்கி இருப்பதே, யூஸ்டு மார்க்கெட்டில் வரவேற்பு இல்லாத நிலை இருக்கிறது. அதேபோன்று, ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட நிறுவனங்களின் சில கார் மாடல்களுக்கும் போதிய ரீசேல் மதிப்பு கிடைப்பதில்லை என்பது துரதிருஷ்டவசதமானதே.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
India's Super Hit Cars That Are Made in Chennai.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark