டெஸ்லா இந்தியாவில் வந்தா சோலி முடிஞ்சுடும்! சீனா மிரட்டியதால் பயந்தாரா எலான் மஸ்க்? டாடாக்கு ஜாக்பாட்!

டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வரும் விவகாரத்தில் எலான் மஸ்க்கின் குழு இந்திய அதிகாரிகளுடனான தொடர்பை நிறுத்திவிட்டதால், டெஸ்லாவின் முதலீட்டை இந்தியா இனி எதிர்பார்க்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எலெக்ட்ரிக் வாகனம் (EV) உற்பத்தியில் உள்ளூர் வாகன உற்பத்தியாளர்கள் பக்கம் கவனம் திரும்பியுள்ளது. இதனால் இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு இருந்த மிகப்பெரிய பயம் தற்போது போயுள்ளது என்றே சொல்லலாம் இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.

டெஸ்லாநிறுவனத்தின் நிர்வாகிகள் தற்போது இந்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வததை நிறுத்தியதால், இந்திய அதிகாரிகள் டெஸ்லா உற்பத்தி அலை பற்றிய எதிர்பார்ப்புகளைத் குறைத்துள்ளனர். டில்லி அதிகாரிகளுடனான கலந்துரையாடல்கள் பற்றி எலான் மஸ்க் குழுவிலிருந்து எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது என்பதே நிலைமை என நன்கு அறிந்த வட்டாரங்கள் வெளிப்படுத்தின.

Tesla India

EV உற்பத்தியை அதிகரிக்க இந்திய அரசாங்கம் இப்போது மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற உள்நாட்டு நிறுவனங்களை நோக்கிப் திரும்பியுள்ளது என்று நம்பதகுந்த வட்டாரங்கள் மூலம் தகவல் கிடைக்கிறது. மஸ்க் மீண்டும் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்தால், புதிய இறக்குமதி வரிக் கொள்கையின் கீழ் டெஸ்லா நிறுவனத்திற்கு இன்னும் சலுகைகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனையான மொத்த வாகனங்களில் பேட்டரி மூலம் இயங்கும் கார்கள் 1.3% மட்டுமே. இந்தியாவின் EV சந்தை இன்னும் வளர்ந்து வருகிறது. அதிகமான வாகன விலை மற்றும் சார்ஜிங் உள்கட்டமைப்பின் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சனைகள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதிலிருந்து சிலரை தடுக்கிறது.

Tesla India

டெஸ்லா இந்த காலாண்டில் உலகளாவிய டெலிவரிகளில் அதன் இரண்டாவது தொடர்ச்சியான சரிவு ஏற்பட்டுள்ளது. சீனாவில் கடுமையான போட்டியை எதிர்கொண்டதால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏப்ரலில், மஸ்க் வேலையாட்களை குறைக்கும் நடவடிக்கையை அறிவித்தார், சைபர்டிரக் விற்பனையை நிறுத்தினார் மற்றும் அதன் மெக்ஸிகோ ஆலையில் கட்டுமானத்தை மெதுவாக்கினார்.

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவிருந்த ஏப்ரல் மாத இந்தியா பயணத்தையும் எலான் மஸ்க் ரத்து செய்தார். அவர் வேலையில் அதிகம் பிரஷர் இப்பதாக இந்திய பயண ரத்திற்கு காரணம் சொன்னார், ஆனால் பின்னர் சில வாரங்களுக்குப் பிறகு வியட்நாமிற்கு சென்றார். இதனால் அவர் சொன்னது உண்மையான காரணமாக இருக்க வாய்பில்லை என பேசப்பட்டது.

Tesla India

டெஸ்லாவின் நிதிச் சிக்கல்கள் குறித்து இந்திய அரசாங்கத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது, EV தயாரிப்பாளரிடம் இந்தியாவில் புதிய முதலீடுகளுக்கு எந்தத் திட்டமும் இல்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் காரணமாக கூட டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யும் திட்டத்தை கைவிட்டிருக்கலாம் அல்லது காலதாமதப்படுத்தியிருகு்கலாம் என கூறப்படுகிறது.

இந்த பின்னடைவுகள் இருந்தபோதிலும், மஸ்க் இந்தியாவிற்கான தனது திட்டங்களை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்தால், புதிய இறக்குமதி வரியின் கீழ் டெஸ்லாவிற்கு இந்திய அரசின் கதவு திறந்தே இருக்கும். இருப்பினும், இப்போதைக்கு, இந்தியாவின் கவனம் உள்நாட்டு EV உற்பத்தி திறன்களை மேம்படுத்துவதை நோக்கி திரும்பியுள்ளது.

டெஸ்லா போன்ற சர்வதேச நிறுவனங்கள் எதிர்கொள்ளும் உலகளாவிய ஸ்டேபிள் இல்லாத சூழ்நிலைகளுக்கு மத்தியில், உள்ளூர் உற்பத்தியாளர்களை நோக்கிய மாற்றம், அதன் சொந்த EV தொழிற்துறையை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.டெஸ்லா இந்தியா வருவதை தடுப்பதற்கு சீனாவும் சில அழுத்தங்களை டெஸ்லா நிறுவனத்திற்கு வழங்கியிருக்கலாம் என கருத்தும் பேசப்பட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா நிறுவனம் உலகின் மிக முக்கியமான கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவிற்கு வந்தால் இந்தயாவில் மிகப்பெரிய வாகன புரட்சி ஏற்படும் என்பது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் உள்ளூர் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு இது அச்சுறுத்தலாக இருந்தாதது. இந்த பிரச்சனைக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. டெஸ்லா இந்தியாவிற்கு வரும் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, July 7, 2024, 23:00 [IST]
English summary
As Tesla halts communication with Indian officials, the focus shifts to domestic automakers like Mahindra & Mahindra and Tata Motors for EV production, amidst Tesla's global delivery declines and financial struggles.
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X