இஸ்ரோ- நாசா இணைந்து 2024ல் பெரிய சம்பவத்தை பண்ண போறாங்க! பிரதமர் மோடி பயணத்திற்கு இதான் காரணமா?
பிரதமர் மோடியின் அமெரிக்கா பயணத்தின் போது ஆர்டிமிஸ் ஆர்காட்டில் இந்தியா இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன் பிறகு விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோவுடன் இணைந்து நாசாவும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ல் இதற்கான பெரும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார். அங்கு அவர் பல்வேறு சந்திப்புகளை நிகழ்த்துகிறார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ-பைடன் உடனான சந்திப்பின்போது அவர் ஆர்டிமிஸ் ஆர்காட்ஸ் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இது இந்தியாவின் விண்வெளி ஆய்வு குறித்த ஒப்பந்தமாகும்.

இந்த ஒப்பந்தத்தின் படி அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையமும் இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையமும் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை கட்டமைக்கும் முயற்சியில் இறங்க உள்ளது உறுதியாகி உள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றவுள்ளனர். இதற்கான திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தியா மற்றும் அமெரிக்காவின் கூட்டு முயற்சியில் சர்வதேச விண்வெளி மையம் 2024 ம் ஆண்டு உருவாக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த ஆர்ட்டிமிஸ் அக்கார்டு என்ற ஒப்பந்தத்தின் படி இந்தியா மற்றும் அமெரிக்கா ஒரே விதமான கொள்கையை விண்வெளி ஆய்வில் கடைபிடிக்க வேண்டும் என்பதற்கான ஒப்பந்தமாகும்.

கடந்த 1967 ஆம் ஆண்டு அமெரிக்காவில் விண்வெளி ஆய்வு குறித்த சில கொள்கைகள் உருவாக்கப்பட்டது. அதன்படி விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது குறித்தும், விண்வெளி ஆய்வு குறித்தும் சில விதிமுறைகளை வகுத்தது. தற்போது இதே விதிமுறைகளை நாசாவும் வகுத்து பின்பற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நாசாவும் இஸ்ரோவும் சேர்ந்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் கூட்டு முயற்சியில் இறங்க உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் வரும் 2024 ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளி மையத்தை கூட்டாக சேர்ந்து அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதை இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து நிர்வாகிக்கும்.

மனித இனத்தின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ட்டிமிஸ் அக்கார்டு ஒப்பந்தத்தில் மற்ற நாடுகளை இணைக்கும் முயற்சி கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் தேதி துவங்கியது. முதலில் முக்கியமான சில நாடுகள் மட்டும் இணைந்தன.
முதற்கட்டமாக ஆஸ்திரேலியா, கனடா, இத்தாலி, ஜப்பான்,லக்ஸம்பர்க், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய எட்டு நாடுகள் இதில் முதலில் இணைந்தன. கடைசியாக ஈக்குவேடார் நாடு 26வது நாடாக கடந்த 21-ம் தேதி கையெழுத்திட்ட நிலையில் தற்போது இந்தியா 27வது நாடாக இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
உலக நாடுகள் மத்தியில் ஒரே விதமான விண்வெளிக் கொள்கை மற்றும் விண்வெளி குறித்த பார்வை இருந்தால்தான் விண்வெளியில் எந்த விதமான பிரச்சினையும் இருக்காது என்பதால் இந்த ஒப்பந்தம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த ஒப்பந்தம் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது மட்டுமல்ல விண்வெளியில் ஏற்படும் ஏதாவது அவசரகால உதவிக்கு ஒரு நாடு சக நாட்டுக்கு உதவ இந்த ஒப்பந்தம் மிக முக்கியமான பங்கை வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் பூமியில் சேகரிக்கப்படும் அறிவியல் பூர்வமான தகவல்களை பகிரும் அதிகாரமும் இந்த ஒப்பந்தம் மூலம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
முதலில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சிக்கும் இரண்டாவதாக செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் நேசிக்கும் இந்த ஒப்பந்தம் மிக முக்கிய பங்கு வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து வேலை செய்வதில் வரும் 2024 ஆம் ஆண்டு நிசார் என்ற செயற்கைக்கோளை உருவாக்கி விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இஸ்ரோ மற்றும் நாசா இணைவது இந்தியாவிற்கு முக்கியம். இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்தகட்டத்திற்கு நகர்வதற்கு இது முக்கியமான படிக்கல். பிரதமர் மோடியின் இந்த பயணம் இந்தியாவை ஒரு படி மேலே எடுத்து சென்றுள்ளது என்றால் அது மிகை அல்ல .


Click it and Unblock the Notifications









