ஜெய் ஸ்ரீ ராம்! உலகையே திரும்பி பார்க்க வைக்க போகும் பாலத்தை கட்டும் இந்தியா! யார் நெனச்சாலும் தடுக்க முடியாது
தமிழ்நாட்டில் (Tamil Nadu) அமைந்துள்ள ராமேஸ்வரம் (Rameswaram) மற்றும் தனுஷ்கோடி (Dhanushkodi) ஆகியவை இந்துக்களின் புனித தலங்களில் மிகவும் முக்கியமானவையாக உள்ளன. இந்த ஊர்கள் எல்லாம் மிகவும் பிரபலமானவைதான் என்றாலும் கூட, கடந்த ஒரு சில நாட்களாக இந்தியா முழுவதும் பேசப்பட்டு வருகின்றன.
அயோத்தி (Ayodhya) நகரில் பல்வேறு சர்ச்சைகள் மற்றும் பிரச்னைகளை கடந்து ராமர் கோயில் (Ram Mandir) கும்பாபிஷேகம் கோலாகமாக நடைபெற்று முடிந்திருப்பதுதான் இதற்கு காரணம். ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி ஆகியவை, அயோத்தி ராமர் கோயிலுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஊர்கள் ஆகும்.

இதன் காரணமாகவே அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக, ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி ஆகிய இடங்களுக்கு எல்லாம் பிரதமர் மோடி (PM Modi) சென்று வந்தார். கூடவே அரிச்சல் முனைக்கும் (Arichal Munai) மோடி சென்றதை நாம் பார்த்தோம். இது தனுஷ்கோடிக்கு மிக அருகில் உள்ளது.
இந்த அரிச்சல் முனைதான், ராமர் பாலத்தின் (Ram Setu) தொடக்க புள்ளியாக கருதப்படுகிறது. இந்த சூழலில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சிகள் எல்லாம் கோலாகலமாக நடைபெற்று முடிந்த பின்னரும் கூட, இந்த ஊர்கள் எல்லாம் மீண்டும் செய்திகளில் இடம்பிடிக்க தொடங்கியுள்ளன. மத்திய அரசின் ஒரு அதிரடி திட்டம்தான் இதற்கு காரணம்.

ஆம், இந்தியா (India) மற்றும் இலங்கை (Sri Lanka) ஆகிய நாடுகளுக்கு இடையே பிரம்மாண்டமான கடல் பாலம் (Sea Bridge) ஒன்றை கட்டுவதற்கு இந்தியாவின் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனுஷ்கோடி மற்றும் இலங்கையின் தலைமன்னார் (Talaimannar) ஆகிய ஊர்களை இணைக்கும் வகையில், கடலுக்கு மேலே இந்த பாலத்தை கட்ட மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
இந்த பாலத்தின் நீளம் 23 கிலோ மீட்டர்களாக இருக்கும் என கூறப்படுகிறது. தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் ஆகிய ஊர்களுக்கு இடையேயான தொலைவும் மிகவும் குறைவுதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எனினும் கடலுக்கு மேலே பாலம் கட்டுவதால், இது மிகவும் சவாலான காரியமாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்த பிரம்மாண்ட பாலமானது, சாலை மட்டுமல்லாது, ரயில் தண்டவாளங்களையும் கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே வாகனங்கள் மூலமாக மட்டுமல்லாது, ரயில் மூலமாகவும் பயணம் செய்யலாம். எனவே இந்த பாலத்தை கட்டி முடிப்பதற்கு அதிக பொருட்செலவு ஏற்படலாம். இதன் காரணமாக இந்த பிரம்மாண்ட பாலத்தை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வை மத்திய அரசு விரைவில் நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இது மிக நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் ஒரு திட்டம் ஆகும். தற்போது அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற்று முடிந்துள்ளதையடுத்து, இது தொடர்பான பேச்சுக்கள் அதிகரித்துள்ளன. இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டால், இந்தியா-இலங்கை இடையே, சுற்றுலா மற்றும் பொருளாதாரம் ஆகியவை வலுவடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அத்துடன் இந்தியா மற்றும் இலங்கை இடையேயான பயண நேரம் மற்றும் பயண செலவுகளையும் இந்த பாலம் குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாலம் பயன்பாட்டிற்கு வந்தால், அது இன்றைய அதிநவீன யுகத்தின் ராமர் பாலமாக இருக்கலாம். ஏனெனில் இந்த பாலத்திற்கு ராமர் பெயரே சூட்டப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளன.


Click it and Unblock the Notifications








