தொழில்நுட்ப கோளாறால் பாதியில் நின்ற பீரங்கிகள்! சர்வதேச போட்டியில் வெளியேறிய இந்தியா..!

Written By:

ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச பீரங்கி டாங்குகளுக்கான போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற இரண்டு பீரங்கிகளும் நடுவழியில் நின்றதால், அவை இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தன.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
சர்வதேச பீரங்கி போட்டியில் அரையிறுதியில் வெளியேறிய இந்தியா!

உலகளவில் 19 நாடுகள் பங்கேற்ற சர்வதேச டாங்க் பையலத்தான் என்ற பீரங்கி போட்டி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது.

சர்வதேச பீரங்கி போட்டியில் அரையிறுதியில் வெளியேறிய இந்தியா!

ரஷ்யாவில் நடப்பதால் இந்தியா அந்நாட்டிடமிருந்து வாங்கிய இரண்டு டி-90 பீரங்கிகளை போட்டியில் களமிறக்கியது.

Recommended Video
Tata Nexon Review: Specs
சர்வதேச பீரங்கி போட்டியில் அரையிறுதியில் வெளியேறிய இந்தியா!

போட்டியின் ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கிய இந்த ரஷ்ய தயாரிப்புகள், திடீரென நடுவழியில் பழுதடைந்து நின்றன.

சர்வதேச பீரங்கி போட்டியில் அரையிறுதியில் வெளியேறிய இந்தியா!

ராணுவ அதிகாரி ஒருவர் இதுக்குறித்து கூறும்போது, போட்டியில் கலந்துக்கொண்ட இரண்டு டி-90 பீரங்கி டாங்குகளில் ஒன்றில் ஃபேன் சுழற்சி பாதியிலேயே பழுத்தடைந்தது.

சர்வதேச பீரங்கி போட்டியில் அரையிறுதியில் வெளியேறிய இந்தியா!

இரண்டாவது டாங்கில் எஞ்சின் ஆயில் லீக் ஏற்பட்டது. இதனால் போட்டியில் பாதியில் இருக்கும்போதே பழுதடைந்து நின்றது என்று தகவல் தெரிவித்தார்.

சர்வதேச பீரங்கி போட்டியில் அரையிறுதியில் வெளியேறிய இந்தியா!

தட்பவெட்ப சூழ்நிலை மாற்றத்தின் காரணமாக, பீரங்கியில் ரேடியார் பழுதடைந்துள்ளதாகவும், அதனால் போட்டியில் பாதி வழியிலேயே பீரங்கி டாங்குகள் நின்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சர்வதேச பீரங்கி போட்டியில் அரையிறுதியில் வெளியேறிய இந்தியா!

டி90 வகையான பீரங்கிகளை ரஷ்யா தரைப்படை, கடற்படை போன்றவற்றில் பெருமளவு பயன்படுத்தி வருகிறது.

சர்வதேச பீரங்கி போட்டியில் அரையிறுதியில் வெளியேறிய இந்தியா!

டி90 ரஷ்யாவின் 3ம் தலைமுறைக்கான பிரதான போர்கவச வாகனமாக கருதப்படுகிறது.

சர்வதேச பீரங்கி போட்டியில் அரையிறுதியில் வெளியேறிய இந்தியா!

டி-72, டி-50 போன்ற பீரங்கி மாடல்களில் மேம்படுத்தப்பட்ட வடிவமாகத்தான் டி90 பீரங்கிகள் இந்தியாவிற்கு வந்தன. போர் கவச பாதுகாப்பு மற்றும் எதிராளியின் நடவடிக்கையை தடுக்கும் விதத்தில் இவை செயலாற்றும்.

சர்வதேச பீரங்கி போட்டியில் அரையிறுதியில் வெளியேறிய இந்தியா!

டி90 பீரங்கி டாங்குகளில் பொருத்தப்பட்டுள்ள அதிக செயல்திறன் கூட்டு எஞ்சின் 1200 பிஎச்பி முதல் 1500 பிஎச்பி பவரை வழங்க வல்லது.

சர்வதேச பீரங்கி போட்டியில் அரையிறுதியில் வெளியேறிய இந்தியா!

இந்த எஞ்சின் திறனுடன் இந்திய ராணுவ கட்டுமானத்தை மேம்படுத்தப்டுத்த சுமார் 2011 பீரங்கி வாகனங்கள் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச பீரங்கி போட்டியில் அரையிறுதியில் வெளியேறிய இந்தியா!

ஒவ்வொரு வாகனமும் ரூ.5 கோடி செலவில் தயாரிக்கப்படும் என்றும், இந்தியாவிற்கு மேலும் தேவைப்படும் செயல்திறன் மற்றும்

சர்வதேச பீரங்கி போட்டியில் அரையிறுதியில் வெளியேறிய இந்தியா!

தாக்கும் திறன் கொண்ட பீரங்கிகளை தயாரிக்க சுமார் ரூ.2500 கோடி தேவைப்படும் என அணுமானிக்கப்படுகிறது.

சர்வதேச பீரங்கி போட்டியில் அரையிறுதியில் வெளியேறிய இந்தியா!

2013ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் ராணுவ வலிமையை நிரூபிக்கும் வகையில் இதுபோன்ற போட்டிகள் நடந்து வருகின்றன

சர்வதேச பீரங்கி போட்டியில் அரையிறுதியில் வெளியேறிய இந்தியா!

இந்தாண்டுக்கான சர்வதேச பீரங்கி போட்டியில் ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், பெலாரஸ் ஆகிய நாடுகள் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: India T90 Tanks Snags at World Tank Content held on Russia, India Knocked out before Finals. Click for Details...
Story first published: Monday, August 14, 2017, 11:44 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos