பாகிஸ்தான், சீனாவின் ஈரக்குலைய நடுங்க வைத்த இந்தியா! யார் கண்லயும் சிக்காத ஹைப்பர்சோனிக் ஏவுகணைய எறக்கீட்டாங்க
உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. ஆனால் எல்லையில் பாகிஸ்தான் (Pakistan) மற்றும் சீனா (China) ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு குடைச்சல் கொடுத்து கொண்டுள்ளன. இந்த 2 நாடுகளின் தீவிரவாத மற்றும் ராணுவ தாக்குதல்களை எல்லாம் கடந்து, இந்தியா வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறது.
கூடவே ராணுவ பலத்தையும் இந்தியா பல மடங்கு அதிகரித்து கொண்டுள்ளது. இந்த வரிசையில் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை (Hypersonic Missile) ஒன்றை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்துள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

இந்தியாவின் முப்படைகள் பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை, டிஆர்டிஓ என சுருக்கமாக அழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO - Defence Research And Development Organisation) தயாரித்து வருகிறது. இந்த வரிசையில் ப்ராஜெக்ட் விஷ்ணு (Project Vishnu) திட்டத்தின் கீழ், புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒன்றை டிஆர்டிஓ உருவாக்கியுள்ளது.
ET-LDHCM (Extended Trajectory Long Duration Hypersonic Cruise Missile) என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை, தற்போது இந்தியாவிடம் உள்ள பிரம்மோஸ் ஏவுகணையை (BrahMos Missile) விட பல மடங்கு அதிக சக்தி வாய்ந்தது. உதாரணத்திற்கு பிரம்மோஸ் ஏவுகணை மேக் 3 (Mach 3) வேகத்தில் செல்லும்.

அதாவது மணிக்கு 3,675 கிலோ மீட்டர்கள். ஆனால் இந்தியாவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒலியை விட 8 மடங்கு அதிக வேகத்தில் செல்லும். இதை மேக் 8 (Mach 8) என குறிப்பிடுகின்றனர். இந்த ஏவுகணை மணிக்கு 11 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்.
மறுபக்கம் பிரம்மோஸ் ஏவுகணையின் ஆபரேஷனல் ரேஞ்ச் (Operational Range) 800-900 கிலோ மீட்டர்கள் மட்டுமே. ஆனால் இந்தியாவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் ஆபரேஷனல் ரேஞ்ச் 1,500 கிலோ மீட்டர்கள் ஆகும். ஆபரேஷனல் ரேஞ்ச் என்பது எவ்வளவு தூரத்திற்கு அப்பால் உள்ள எதிரிகளின் இலக்குகளை ஏவுகணை அழிக்கும் என்பதாகும்.
அதாவது இந்தியாவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை, 1,500 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள எதிரிகளின் இலக்குகளையும் வெற்றிகரமாக தாக்கி அழிக்க கூடியது. பிரம்மோஸ் ஏவுகணையை விட வேகம் மற்றும் ரேஞ்ச் ஆகிய 2 முக்கியமான விஷயங்களில், இந்தியாவின் புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை தலைசிறந்து விளங்குகிறது.
எனவே இது இந்தியாவின் ராணுவ பலத்தை உயர்த்துவதில் மிக முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. இந்த புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை, நிலம், நீர் மற்றும் ஆகாயம் என எங்கிருந்து வேண்டுமானாலும், எதிரிகளை நோக்கி ஏவ முடியும். அத்துடன் இது தாழ்வான உயரத்திலும் பறக்க கூடியது.
எனவே எதிரி நாடுகளின் ரேடார் அமைப்புகளில், இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை சிக்காது. இந்தியாவின் ராணுவ பலத்தை உயர்த்த கூடிய இந்த புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையில், ஸ்க்ராம்ஜெட் இன்ஜின் (Scramjet Engine) பொருத்தப்பட்டுள்ளது. இது குறித்து தி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் உடன் உறவு சுமூகமாக இல்லாத காரணத்தால், இந்தியா தொடர்ந்து தனது ராணுவ பலத்தை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்கு இந்த புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒரு உதாரணம் மட்டுமே. இது பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
குறிப்பு: இந்த செய்தியில் பிரம்மோஸ் ஏவுகணையின் படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை ஆகும்.


Click it and Unblock the Notifications








