அமெரிக்கா, ரஷ்யாவின் வாலை ஒட்ட நறுக்க போகும் இந்தியா! அரபு நாடுகளின் பொழப்பிலும் மண்ணை அள்ளி போட்டுட்டாங்க!

உலகிலேயே கச்சா எண்ணெய்யை (Crude Oil) மிக அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. தோராயமாக ஒரு ஆண்டுக்கு 230 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து கொண்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 130 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா செலவிட்டு வருகிறது. இது இந்தியாவின் பொருளாதாரத்தில் (Economy) மிகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மிகப்பெரிய தொகையை செலவிடுவதால், இந்தியாவின் அந்திய செலாவணி (Foreign Exchange) கையிருப்பும் குறைகிறது.

எனவே கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும் என இந்தியா விரும்புகிறது. இதன் ஒரு பகுதியாகவே இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாடு வேகமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனுடன் சேர்த்து, இன்னும் பல்வேறு நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்து கொண்டுள்ளது.

Petrol Pump

இதில், பெட்ரோல் (Petrol) உடன் எத்தனாலை (Ethanol) கலந்து பயன்படுத்துவதும் ஒன்றாகும். முதலில் நடப்பு தசாப்தத்தின் இறுதியில், அதாவது வரும் 2030ம் ஆண்டிற்குள்ளாக, பெட்ரோல் உடன் 20 சதவீத எத்தனாலை கலந்து பயன்படுத்த வேண்டும் என இந்தியா இலக்கு நிர்ணயம் செய்திருந்தது.

ஆனால் கடந்த மார்ச் மாதமே இந்த இலக்கை இந்தியா எட்டி விட்டது. அதாவது முதலில் நிர்ணயம் செய்யப்பட்டிருந்த 2030ம் ஆண்டு என்ற காலக்கெடுவிற்கு, 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த இலக்கை இந்தியா எட்டியுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Petrol Pumps

இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே பெட்ரோல் உடன் எத்தனால் கலக்கப்படுவது தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு கொண்டே வந்தது. இதன் விளைவாக கடந்த பிப்ரவரி மாதம் பெட்ரோல் உடன் எத்தனால் கலப்பு 19.6 சதவீதம் என்ற நிலையை எட்டியது. இது அதன் பின் வந்த மார்ச் மாதத்தில், 20 சதவீதம் என்ற இலக்கை கடந்தது.

எனவே பெட்ரோல் உடனான எத்தனால் கலப்பின் இலக்கை இந்திய அரசு தற்போது மாற்றியமைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது வரும் 2030ம் ஆண்டிற்குள் பெட்ரோல் உடன் 30 சதவீத எத்தனால் கலந்து பயன்படுத்த வேண்டும் என இந்திய அரசு தற்போது இலக்கை மாற்றியமைத்துள்ளதாக தெரிகிறது.

இன்னும் தெளிவாக சொல்வதென்றால், முன்பு 2030ம் ஆண்டிற்குள் பெட்ரோல் உடன் 20 சதவீத எத்தனால் கலப்பு என்ற அளவில் இருந்த இலக்கு, 5 ஆண்டுகளுக்கு முன்பே எட்டப்பட்டு விட்டதால், தற்போது அது 30 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு நிர்ணயத்திற்கு ஒப்புதல் கிடைத்து விட்டதாகவும் தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெட்ரோல் உடன் எத்தனால் கலப்பு காரணமாக, கடந்த தசாப்தத்தில் மட்டும், அந்திய செலாவணியில் 1.2 லட்சம் கோடி ரூபாயை இந்தியா சேமித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்திய அரசின் முயற்சி உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய விஷயம் ஆகும்.

பெட்ரோல் உடன் எத்தனால் கலப்பு அதிகரிக்கப்பட்டால், கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்து இந்தியா பொருளாதாரம் உயரும் என்பதுடன், விவசாயிகளின் வருமானமும் கூடவே சேர்ந்து உயரும். மேலும் எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவதன் மூலம் வாகனங்கள் உமிழும் கார்பன் டை ஆக்ஸைடு போன்ற வாயுக்களின் அளவும் குறைவும். எனவே இது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உகந்ததாகவும் கருதப்படுகிறது.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈராக், ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இருந்துதான் இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. ஒருவேளை இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி வெகுவாக குறைந்தால், இந்த நாடுகளுக்கு எல்லாம் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 16, 2025, 13:39 [IST]
English summary
India to increase ethanol blending in petrol check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+