உசுர காப்பாத்துற ஹெல்மெட்க்கும் ஜிஎஸ்டி போடுறீங்களே! மத்திய அரசிடம் கேள்வி எழுப்பிய சர்வதேச சாலை கூட்டமைப்பு
இந்தியாவில் ஹெல்மெட் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்கச் சொல்லி மத்திய அரசுக்குச் சர்வதேச சாலை கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
இந்தியாவில் விற்பனையாகும் ஒவ்வொரு பொருளுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இந்த வரி ஒவ்வொரு பொருளின் பயன்பாடு மற்றும் தேவைகளைப் பொருத்து அதன் சதவீதம் 5, 12, 18 மற்றும் 28 ஆகிய பிரிவுகளில் விதிக்கப்படுகிறது. இதில் சில அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி விதிக்கப்படுவதில்லை.

இந்நிலையில் இந்தியாவில் டூவீலர் வாகன ஓட்டுகள் பயன்படுத்தும் ஹெல்மெட்டிற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் ஹெல்மெட் கட்டாயம் என்ற சட்டம் இருக்கிறது. இதனால் இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர். ஹெல்மெட் அணிந்தால் தான் சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளைக் குறைக்க முடியும் என்பதால் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சர்வதேச சாலை கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் கேகே கப்பில்லா சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் : "சர்வதேச அளவில் நடக்கும் சாலை விபத்து உயிரிழப்புகளில் இந்தியா 11 சதவீத பங்கை வகிக்கிறது. இதனால் இந்தியாவில் சாலை விபத்துக்களின் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பது கட்டாயமாக இருக்கிறது. தற்போது வல்லுநர்களின் திட்டத்தின்படி இந்த விபத்துக்களின் எண்ணிக்கையை 2025ம் ஆண்டு 50 சதவீதமும், 2030 ஆண்டு விபத்துக்களை வெகுவாக குறைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு இந்தியாவில் டூவீலர்களின் செல்பவர்கள் ஹெல்மெட் போட்டுச் செல்ல வேண்டும். இது ஏற்கனவே சட்டமாக எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது. ஆனால் இந்தியா முழுவதும் ஹெல்மெட் விற்பனைக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. ஹெல்மெட் என்பது உயிரைக் காக்கும் ஒரு அத்தியாவசிய கருவி இதனால் இதன் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்.
ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதால் ஹெல்மெட்களின் விலை குறையும், நாட்டில் ஹெல்மெட் அணியும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகும். இதனால் விபத்துக்களில் உயிரிழப்புகள் குறையும். இதனால் நாட்டிற்கு விபத்துகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு சீராகும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் விரைவில் இந்தியாவில் ஹெல்மெட்கள் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்படும் எனத் தெரிகிறது. தற்போது இந்தியாவில் ஹெல்மெட்களுக்கு 18 சதவீதம் வரி ஜிஎஸ்டிவரி வசூலிக்கப்படுகிறது. ஹெமட் என்பது உயிர் காக்கும் கருவி என்பதால் அதன் மீது அரசு வரி விதிக்கக்கூடாது என்பது நியாயமான கோரிக்கையாகவே இருக்கிறது.
இதற்குப் பதிலாக நாடு முழுவதும் ஹெல்மெட் அணிந்து செல்லாதவர்களுக்கு அபராதத்தை அதிகரிக்கப்படுத்தலாம். இதனால் மக்களுக்கும் ஹெல்மெட் அணிந்து பைக்குகளில் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும், பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








