காஸ்ட்லி காரை புக் பண்ணவங்க எல்லாம் இப்ப வரிசையா கேன்சல் பண்ணுறாங்க! இதான் காரணம்!
இந்தியா இங்கிலாந்து இடையேயான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக போகும் நிலையில் தற்போது இந்தியாவில் சொகுசு கார்களுக்கான புக்கிங் குறைந்துள்ளது. இது மட்டுமல்லாமல் ஏற்கனவே இந்த காரை புக் செய்தவர்கள் ஆர்டரை கேன்சல் செய்து வருகின்றனர். அப்படி என்ன ஒப்பந்தம் இது? எதற்காக சொகுசு வாகன புக்கிங் எல்லாம் கேன்சல் செய்யப்படுகிறது? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா - இங்கிலாந்து இடையே இலவச வர்த்தக ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இது Comprehensive Economic and Trade Agreement (CETA) கேபினட்டில் தாக்கல் செய்யப்பட்டு வரும் திங்கட்கிழமை ஒப்புதல் வழங்கப்படும் என என தெரிகிறது. இந்த வர்த்தகத்தின்படி இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை இந்தியாவில் குறைந்த வரியில் இறக்குமதி செய்ய முடியும்.

img: Aston Martin Valhalla
தற்போது அதிக வரியில் இறக்குமதி செய்யப்படும் கார்கள் விரைவில் குறைந்த வரியில் இறக்குமதி செய்யப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது/. லேண்ட்ரோவர், ஜாக்குவார், ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லி, அஸ்டான் மார்டின், லோட்டஸ், மெக்லாரன் ஆகிய நிறுவனங்கள் இங்கிலாந்தை அடிப்படையாக கொண்ட நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் 75-125 சதவீதம் வரையிலான இறக்குமதி வரியில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான இலவச வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்துவிட்டால் இந்த நிறுவனத்தின் வாகனங்களை இந்தியாவில் வெறும் 10 சதவீத இறக்குமதி வரியில் கொண்டு வர முடியும். இதனால் வாகனத்தின் விலை வெகுவாக குறையும். இவ்வளவு விலை குறைகிறது என்பதால் இதற்காக காத்திருக்க ஏற்கனவே காரை புக் செய்தவர்கள் காத்திருக்க முடிவு செய்துள்ளனர். சிலர் ஏற்கனவே செய்த புக்கிங்கை கேன்சல் செய்தனர்.

Img: Rolls Royce Ghost Series II
இந்த வர்த்தக ஒப்பந்தம் காரணமாக பல சொகுசு கார்களின் விலை 3ல் ஒரு பங்காக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறக்குமதி வரி மட்டுமல்ல இந்த கார்களுக்கான உள்ளூரு் வரியும் விதிக்கப்படுவதால் அதிக விலையில் இந்த கார்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வர்த்தக ஒப்பந்தம் காரணமாக காரின் இறக்குமதி வரி குறையும். இதுவே வாகனத்தின் ஆன்ரோடு விலையை வெகுவாக குறைக்கும்.
இந்தியாவில் சொகுசு வாகனங்கள் அதிக அளவில் தயார் செய்யப்படவில்லை. ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே தயாரிக்கும் நிலையில் அவர்களுக்கு போட்டியாக இங்கிலாந்து நிறுவனங்கள் விரைவில் வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம்.

Img: Bentley Flying Spur
இந்தியாவில் சொகுசு வாகனங்களின் விற்பனை படிப்படியாக அதிகரித்து வருகிறது. பலர் சொகுசு வாகனங்களை நோக்கி நகர்த்து வரும் நிலையில் இந்த இறக்குமதி வரி குறைப்பு என்பது பலருக்கு நன்மை பயக்கும் வகையில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிச்சயம் இந்தியாவில் சொகுசு கார்களின் விற்பனையை அதிகரிக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சொகுசு வாகனங்கள் அதிக அளவில் விற்பனையாக துவங்கிவிட்டன. இதை இங்கிலாந்து நிறுவனங்கள் இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் பலனாக்கி கொள்ள திட்டமிடும். இந்த கார்களின் ஆன்ரோடு விலை குறித்து பலர் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications









