கம்மி விலையில கார் வருதுன்னு சொன்னாங்க! ஆனா இதை யாருமே சொல்லிருக்க மாட்டாங்க! விஷயம் என்ன தெரியுமா?
இந்தியா - இங்கிலாந்து இடையே இலவச வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்ததின் படி இங்கிலாந்திருந்து குறைவான இறக்குமதி வரியில் பொருட்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் வாகனங்கள் இனி இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனைக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக காணலாம்.
தற்போது வெளிநாட்டிலிருந்து வாகனங்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய வேண்டும் என்றால் வாகனத்தின் வகைக்கு ஏற்றார் போல 70-110 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. பெரும்பலானா சொகுசு ரக வாகனங்களுக்க 70 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தின்படி இனி வாகனங்களை குறைவான இறக்குமதி வரியில் இந்தியாவிற்குள் கொண்டு வர முடியும்.
இந்த ஒப்பந்தத்தின் படி முதல் ஆண்டு 50 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும். இது படிப்படியாக குறைக்கப்பட்டு அடுத்த 5வது ஆண்டில் இறக்குமதி வரி 10 சதவீதமாக இருக்கும். இதனால் எடுத்தவுடன் அதிகமாக விலை குறையாவிட்டாலும் விலை படிப்படியாக குறையும் என தெரிகிறது. இதன்படி ஒவ்வொரு வகையான இன்ஜின் கொண்ட கார்களுக்கும் ஒவ்வொரு வகையிலான வரி சலுகைககள் வழங்கப்படுகிறது.
தற்போது 3.0 லிட்டருக்குள் அதிகமான அளவுள்ள பெட்ரோல் மற்றும் 2.5 லிட்டருக்கும் அதிகமான அளவுள்ள டீசல் இன்ஜின் கொண்ட வாகனங்களுக்கு 110 சதவீதமும்,3.0 லிட்டருக்கு குறைந்த அளுவிலான பெட்ரோல், 2.5 லிட்டருக்கு குறைந்த அளவிலான டீசல் இன்ஜின் வாகனங்களுக்கு 66 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது. தற்போது இறக்குமதி செய்யப்படும் வாகன எண்ணிக்கையில் எந்த விதமான கட்டுப்பாடுகளும் இல்லை. இனி இந்த ஒப்பந்தத்தின் படி எவ்வளவு வாகனங்களுக்கு எவ்வளவு வரி சலுகை வழங்கப்படுகிறது என காணலாம்.
3லிட்டருக்கு அதிகமான பெட்ரோல் மற்றும் 2.5 லிட்டருக்கு அதிகமான டீசல் வாகனங்களுக்கு முதல் ஆண்டில் 30 சதவீதத்தில் 10,000 கார்களும், இரண்டாம் ஆண்டில் 25 சதவீத்தில் 12,500கார்களும், மூன்றாம் ஆண்டில் 20 சதவீத வரியில் 15,500 கார்களும், நான்காம் ஆண்டில் 15 சதவீத வரியில் 18,500 கார்களும், 5ம் ஆண்டில் 10 சதவீத வரியில் 19,000 கார்களும் இறக்குமதி செய்யலாம்.

6ம் ஆண்டிலிருந்து 15ம் ஆண்டு வரை 10 சதவீதம் தான் வரி ஆனால் வாகன இறக்குமதி எண்ணிக்கை மாறுபடும். அதாவது படிப்படியாக இந்த எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. இறுதியாக 15வது ஆண்டில் ஆண்டிற்கு 7500 கார்கள் வரை குறைக்கப்பட்டு அதன் பின் அதே நடை முறை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல 1.5 -3.0 லி பெட்ரோல் மற்றும் 1.5 -2.5 லி டீசல் இன்ஜின் கொண்ட கார்களில் முதல் ஆண்டு 50 சதவீத வரியில் 5000 கார்களும், இரண்டாம் ஆண்டு 40 சதவீத வரியில் 6000 கார்களும், 3ம் ஆண்டு 30 சதவீத வரியில் 7000 கார்களும், நான்காம் ஆண்டு 20 சதவீத வரியில் 8000 கார்களும், 5ம் ஆண்டு 10 சதவீத வரியில் 9000 கார்களையும் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு 10சதவீத வரியில் வாகன எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு 15வத ஆண்டில் 3750 கார்களை இந்த வரியில் இறக்குமதி செய்யலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையாக கட்டமைக்கப்பட்ட பெட்ரோல் டீசல் காருக்கான இறக்குமதி வரி விபரங்கள்
| வருடம் | பெட்ரோல் >3.0லி, டீசல் >2.5லி வரி விதகம் | வாகன எண்ணிக்கை | பெட்ரோல் 1.5லி-3.5லி, டீசல் 1.5லி -2.5 லிட வரிவிதம் | வாகன எண்ணிக்கை | பெட்ரோல், டீசல் | வாகன எண்ணிக்கை | மொத்த வாகனங்கள் |
| தற்போது | 110 | - | 66 | - | 66 | - | - |
| 1 | 30 | 10,000 | 50 | 5,000 | 50 | 5,000 | |
| 2 | 25 | 12,500 | 40 | 6,000 | 40 | 6,000 | |
| 3 | 25 | 15,500 | 30 | 7,000 | 30 | 7,000 | |
| 4 | 15 | 18,500 | 20 | 8,000 | 20 | 8,000 | |
| 5 | 10 | 19,000 | 10 | 9,000 | 10 | 9,000 | |
| 6 | 10 | 16,300 | 10 | 8,150 | 10 | 8,150 | |
| 7 | 10 | 15,200 | 10 | 7,600 | 10 | 7,600 | |
| 8 | 10 | 14,100 | 10 | 7,050 | 10 | 7,050 | |
| 9 | 10 | 13,000 | 10 | 6,500 | 10 | 6,500 | |
| 10 | 10 | 11,900 | 10 | 5,950 | 10 | 5,950 | |
| 11 | 10 | 10,800 | 10 | 5,400 | 10 | 5,400 | |
| 12 | 10 | 9,975 | 10 | 4,988 | 10 | 4988 | |
| 13 | 10 | 9,150 | 10 | 4,575 | 10 | 4575 | |
| 14 | 10 | 8,325 | 10 | 4,163 | 10 | 4163 | |
| 15 | 10 | 7,500 | 10 | 3,750 | 10 | 3750 |
இதே எண்ணிக்கை தான் 1.5 லி அளவிற்கு குறைவான பெட்ரோல் மற்றும் டீசல் கார் இறக்குமதிக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒதுக்கீட்டை தாண்டி இறக்குமதி செய்யப்படும் வாகன்ஙகளுக்கும் பழைய இறக்குமி வரி இல்லாமல் அதை விட சற்று குறைவான இறக்குமதி வரியில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. 3.0லி பெட்ரோல் மற்றும் 2.5 லிட்டர் டீசல் வாகனங்களுக்கு முதல் ஆண்டு 95 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அது படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது. 10வது ஆண்டிற்கு பிறகு 50 சதவீதமாக அது நிலை நிறுத்தப்படும்.
அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான வரி விபரங்கள்
| வருடம் | பெட்ரோல் >3.0லி, டீசல் >2.5லி வரி விதகம் | பெட்ரோல் 1.5லி-3.5லி, டீசல் 1.5லி -2.5 லிட வரிவிதம் | பெட்ரோல், டீசல் |
| தற்போது | 110 | 66 | 66 |
| 1 | 95 | 60 | 50 |
| 2 | 90 | 60 | 40 |
| 3 | 85 | 60 | 30 |
| 4 | 80 | 60 | 20 |
| 5 | 75 | 50 | 10 |
| 6 | 70 | 50 | 10 |
| 7 | 65 | 50 | 10 |
| 8 | 60 | 50 | 10 |
| 9 | 55 | 50 | 10 |
| 10 | 50 | 50 | 10 |
அதேபோல எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதன் இங்கிலாந்து விலைக்கு ஏற்ப இந்தியாவில் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது 40,000 முதல் 80,000 பவுண்ட் வரை விலை உயள்ள வாகனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வரி விகிதம் மற்றும் வாகன இறக்குமதி கோட்டாவும், 80 ஆயிரம் பவுண்டிற்கு மேல் விலை கொண்ட வாகனங்களுக்கு குறிப்பிட்ட இறக்குமதி வரி மற்றும் வாகன ஒதுக்கீட்டு அளவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நகர வாகனங்களுக்கு 6வது ஆண்டு முதல் தான் வரி குறைப்பு செய்யப்படும்.
| வருடம் | 40,000-80,000 பவுண்ட் விலையில் உள்ள வாகனங்கள் | வாகனங்களின் எண்ணிக்கை | 80,000 பவுண்டிற்கு அதிகம் விலையில் உள்ள வாகனங்கள் | வாகனங்களின் எண்ணிக்கை |
| தற்போது | 110 | - | 110 | - |
| 6 | 50 | 400 | 40 | 4000 |
| 7 | 40 | 600 | 30 | 6000 |
| 8 | 30 | 800 | 20 | 8000 |
| 9 | 20 | 1000 | 15 | 10000 |
| 10 | 10 | 1200 | 10 | 12000 |
| 11 | 10 | 1400 | 10 | 14000 |
| 12 | 10 | 1550 | 10 | 15500 |
| 13 | 10 | 1700 | 10 | 17000 |
| 14 | 10 | 1850 | 10 | 18500 |
| 15ம் ஆண்டு முதல் | 10 | 2000 | 10 | 20000 |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா இங்கிலாந்து இடையேயான இலவச வர்த்தக ஒப்பந்தத்தின்படி இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு வரும் என பலர் எதிர்பார்த்த நிலையில் இந்த கட்டுப்பாடுகள் அவர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளன. அதே நேரம் மக்களுக்கும் இது சாதகமான பலனை எதிர்பார்க்கின்றன.


Click it and Unblock the Notifications









