இந்த பட்ஜெட்டிலாவது எதிர்பார்த்தது கிடைக்குமா? ஜூன் 24ம் தேதியை காலண்டர்ல குறிச்சு வச்சுக்கோங்க!
பாராளுமன்றத்தில் புதிய கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகளுக்கு மத்திய அரசு தயாராகி வருகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ம் ஆண்டுக்கான விரிவான மத்திய பட்ஜெட்டை ஜூலை 24ம் தேதி தாக்கல் செய்கிறார். துறை வளர்ச்சியை அதிகரிக்கும் நடவடிக்கைகளுக்கு வாகனத் துறை நம்பிக்கையுடன் உள்ளது. இந்த பட்ஜெட்டில் என்னென்ன விஷயங்களை எல்லாம் எதிர்பார்க்கலாம் என்ற விபரங்களை இங்கே காண்போம்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார், இது ஆட்டோமொபைல் துறைக்கு பெரிய அளவில் சலுகைகளை வழங்கவில்லை. முழு அளவிலான பட்ஜெட் இந்த முறை வருவதால், ஆட்டோமொபைல் துறைக்கு கணிசமான சலுகைகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் துறை தரப்பினர் தங்கள் தேவைகளைப் பற்றி அரசாங்கத்திடம் குரல் கொடுத்து வருகிறனர். இதில் முதன்மை கோரிக்கைகளில் ஒன்றாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தொடர்ந்தி மானிய நிதி ஆதரவை வழங்க வேண்டும் என்பது இருக்கிறது. இது நாடு முழுவதும் மாசு இல்லாத மற்றும் சிறந்த போக்குவரத்து ஆப்ஷன்களை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க வகையில் உதவும்.
மற்றொரு முக்கியமான எதிர்பார்ப்பு ஹைபிரிட் வாகனங்களுக்கான வரிச் சலுகைகள். இந்தச் சலுகைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகன ஆப்ஷன்களை தேர்வுசெய்ய நுகர்வோரை ஊக்குவிக்கும், இதனால் சுற்றுசூழலில் மாசு அளவைக் குறைக்கலாம். இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டால் இந்தியா முழுவதும் ஹைபிரிட் வாகனங்களின் விற்பனையும் அதிகமாகும்.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்த நடவடிக்கையானது மாநிலங்கள் முழுவதும் எரிபொருள் விலையை குறைக்கலாம் மற்றும் நுகர்வோருக்கான ஒட்டுமொத்த செலவுகளைக் குறைக்கலாம். வரும் பட்ஜெட்டில் இந்த கோரிக்கைக்கு தீர்வு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆட்டோமொபைல் துறையும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மிகவும் தேவையான சலுகைகள் வழங்கக்கூடிய நடவடிக்கைகளை எதிர்பார்த்து காத்திருக்கிறது. உலக சந்தையில் இந்திய ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சியை நிலைநிறுத்துவதற்கும் போட்டித்தன்மையை உறுதி செய்வதற்கும் இந்தப் சலுகைகள் முக்கியமானவை. இந்த சலுகைகள் வழங்கப்பட்டால் தற்போது இந்தியா இருக்கும் உலகின் 3வது மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தை கொண்ட நாடு என்ற பெயரை தொடர்ந்து நீட்டிக்க முடியும்.

FAME 3 மானியமானது ஆட்டோமொபைல் துறை எதிர்பார்க்கும் மற்றொரு முக்கியமான கவனிக்கதக்க அறிவிப்பாக இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட சலுகைகள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்பட்டால் குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும், மேலும் அவை நுகர்வோருக்கு எளிதாக அணுகக்கூடியதாகவும் மலிவு விலையிலும் கிடைக்க ஒரு வாய்ப்பாக இருக்கும்.
ஒட்டுமொத்தமாக, மத்திய பட்ஜெட் 2024 வாகனத் தொழிலுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்க்கும், அதே வேளையில் வளர்ச்சி மற்றும் புதுமைகளைத் ஊக்குவிக்ககூடிய அறிவிப்புகளுக்காக ஆட்டோமொபைல் துறை ஆவலுடன் காத்திருக்கிறது.எதிர்பார்த்த அறிவிப்புகள் வந்தால் அடுத்த ஒராண்டிற்கு ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய வளர்ச்சிகளை பெறும்.
இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா இல்லையா என்பதை வரவிருக்கும் பட்ஜெட் வெளிப்படுத்தும். ஆட்டோமொபைல் எதிர்காலப் பாதையை சிறப்பாக கட்டமைக்க கொள்கை மாற்றங்கள் மற்றும் நிதி நடவடிக்கைகளை மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அளவில் அறிவிப்புகள் இல்லாத நிலையில் இந்த முழு பட்ஜெட்டில் மிகப்பெரிய அளவில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முழு அளவிலான மத்திய பட்ஜெட் 2024 ஜூலை 24 அன்று சமர்ப்பிக்கப்படும், இது பல்வேறு துறைகளுக்கு, குறிப்பாக வாகனத் துறைக்கு ஒரு முக்கியமான தருணத்தைக் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டை வடிவமைக்கக்கூடிய திட்டங்களை வெளியிடும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது அனைவரின் பார்வையும் உள்ளது.


Click it and Unblock the Notifications









