இந்தியாவின் முதல் கார்ட்டிங் சர்க்யூட்.. அடுத்த மாசம் சென்னைல திறக்க போறாங்க.. சென்னை எங்கேயோ போகபோது!
இந்தியா அதன் முதல் கார்ட் ரேசிங் டிராக்கை வெகு விரைவிலேயே பெற இருக்கின்றது. இது பயன்பாட்டிற்கு வர இன்னும் ஒரு மாத காலமே இருக்கின்றது. மற்றுமொரு சிறப்பு தகவல் என்னவென்றால் இந்த கார்ட்டிங் டிராக் (Karting Circuit) சென்னையிலேயே திறக்கப்பட இருக்கின்றது. உலக சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தும் திறன் கொண்ட இந்தியாவின் முதல் கார்டிங் ரேசிங் டிராக்காகவே இது உருவாக்கப்பட்டு வருகின்றது. மெட்ராஸ் இன்டர்நேஷனல் கார்டிங் அரேனா (MIKA), எனும் பெயரே இதற்கு சூட்டப்பட்டு இருக்கின்றது.
இந்த ரேசிங் டிராக் சென்னையின் இருங்காட்டுக் கோட்டையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்கிட் (Madras International Circuit)-லேயே திறக்கப்பட உள்ளது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த டிராக் இந்தியாவின் முதல் எஃப்ஐஏ-சிஐகே (FIA-CIK) அங்கீகரம் பெற்ற கார்டிங் சர்க்யூட் என்பதும் இங்கே கவனிக்கத்தகுந்தது.

இதுபோன்ற பலதரப்பட்ட சிறப்புகளைத் தாங்கிய கார்ட் ரேசிங் சர்க்யூட்டாகவே மெட்ராஸ் இன்டர்நேஷனல் கார்டிங் அரேனா தயாராகிக் கொண்டிருக்கின்றது. மேலும், இதனை மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்களும், டிராக் உரிமையாளர்களும் மிகா ஹக்கினன்னைக் கொண்டு திறக்க முடிவு செய்திருக்கின்றனர். இதற்கு தகுதியான ஓர் நபரே இவர் ஆவார்.
ஃப்ளையிங் ஃபின் மற்றும் இரண்டு ஃபார்முலா ஒன் வேர்ல்டு சாம்பியன் பட்டங்களை வென்ற நபராக இவர் உள்ளார். எம்எம்எஸ்சி-இன் துணைத் தலைவர் விக்னேஷ் சந்தோக்-ம் மிகா ஹக்கினன் சிறப்பு விருந்தாளியாகப் பங்கேற்க இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். செப்டம்பர் 19 அன்றே மெட்ராஸ் இன்டர்நேஷனல் கார்டிங் அரேனா திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிகழ்வு இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு ஒரு முக்கியமான மைல்கல் ஆகும். 1.2 கிமீ நீளமுள்ள ஓர் டிராக்காகவே இது தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இங்கிலாந்தைச் சேர்ந்த டிரைவன் இன்டர்நேஷனல் (Driven International) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டதே இந்த டிராக் ஆகும். இந்தியாவின் இரண்டாவது F1 ஓட்டுநரான கருண் சந்தோக்-கே இதன் ஆலோசகராக உள்ளார்.
இந்த ரேசிங் டிராக்கின் ஒவ்வொரு சதுர அடியும் உலக தரம் வாய்ந்ததாக தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. எனவே சர்வதேச அளவிலான சாம்பியன் போட்டிகளை நடத்த உகந்த டிராக்காக இது இருக்கும் என தெளிவாக தெரிகின்றது. எனவே விரைவில் இந்தியாவில் வேர்ல்டு ரோடக்ஸ் ஃபைனல்ஸ் (World Rotax Finals) போன்ற போட்டிகள் எல்லாம் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.
அந்த அளவிற்கு அதிக தரமானதாகவும், பாதுகாப்பானதாகவும் மெட்ராஸ் கார்ட்டிங் அரேனா தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, இந்தியாவில் இன்னும் பல கார்ட் ரேசிங் வீரர்களை உருவாக்கவும் இது உதவியாக இருக்கும். மேலும், இந்தியாவில் F4 இந்திய சாம்பியன்ஷிப் ஏற்கனவே நடத்தப்பட்டு வருகிறது.
ஆகையால், இளம் ஓட்டுநர்கள் நேரடியாக வெளிநாடுகளுக்கு F3 க்குச் செல்ல முடியும். இதன் மூலம் 8 கோடி ரூபாய் முதல் 9 கோடி ரூபாய் வரை சேமிக்க முடியும். மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்-இல் ஏற்கனவே டிராக் ரேசிங் ஸ்ட்ரிப் மற்றும் ரேலி கிராஸ் ஸ்டேஜ்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.
இவற்றுடனேயே விரைவில் புதிய கார்ட் ரேசிங் டிராக்கும் பயன்பாட்டிற்கு இருக்கின்றது. சென்னையின் இருங்காட்டுக் கோட்டை ரேஸ் உலகிற்கான முக்கிய இடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கார்டிங் மையத்தில் சில பொழுதுபோக்கிற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதுதவிர, பொதுமக்களால் சுலபமாக அணுகக் கூடியதாகவும் இந்த இடம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவை ரேசிங் விஷயத்தில் சர்வதேச அளவில் உயர்த்தும் வகையிலேயே புதிய கார்ட் ரேசிங் சர்க்யூட்டின் வருகை அமைய இருக்கின்றது. மேலும், இந்தியர்களாலும் எளிதில் சர்வதேச அளவிலான போட்டிகளை இந்தியாவிலேயே பார்த்து ரசிக்கவும் இது உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








