எங்கயோ மச்சம் இருக்கு... கணவருக்காக சர்ச்சை நடிகை செய்த காரியம்... நமக்கு இப்படி எல்லாம் நடக்க மாட்டேங்குதே!
பிரபல நடிகை ஒருவர் தனது கணவரின் பிறந்த நாளை முன்னிட்டு, சர்ப்ரைஸான காரியம் ஒன்றை செய்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய திரையுலகின் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஸ்வேதா மேனன் (Swetha Menon). நடிகை என்பதை தவிர, மாடல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என இவருக்கு பல்வேறு முகங்கள் இருக்கின்றன. மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களிலும் ஸ்வேதா மேனன் நடித்து வருகிறார்.

தமிழ் மொழியை பொறுத்தவரையில் சிநேகிதியே, சந்தித்த வேளை, சாது மிரண்டா மற்றும் அரவான் போன்ற படங்களில் ஸ்வேதா மேனன் நடித்துள்ளார். அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி கொள்ளக்கூடியவர்களில் ஒருவராக அறியப்படும் நடிகை ஸ்வேதா மேனன் தற்போது தனது கணவருக்கு 'சர்ப்ரைஸ்' ஒன்றை வழங்கியுள்ளார். ஸ்வேதா மேனனின் கணவர் பெயர் ஸ்ரீவல்சன் மேனன் (Sreevalsan Menon).

அவரது பிறந்த நாளை முன்னிட்டு, புத்தம் புதிய ஜீப் மெரிடியன் (Jeep Meridian) காரை, ஸ்வேதா மேனன் அவருக்கு 'சர்ப்ரைஸ்' பரிசாக வழங்கி அசத்தியுள்ளார். இது எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்றாகும். இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், வெகு சமீபத்தில்தான் ஜீப் இந்தியா நிறுவனம் மெரிடியன் எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

சரியாக சொல்வதென்றால், கடந்த மே மாதம் 19ம் தேதிதான் ஜீப் மெரிடியன் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஜீப் நிறுவனம் மெரிடியன் எஸ்யூவி காரை இந்தியாவிலேயே உற்பத்தி செய்கிறது. இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுவதுடன் மட்டுமல்லாது, இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் ஜீப் மெரிடியன் கார் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஜீப் காம்பஸ் (Jeep Compass) எஸ்யூவி காரின் பிளாட்பார்ம் அடிப்படையில்தான் ஜீப் மெரிடியன் எஸ்யூவி கார் உருவாக்கப்பட்டுள்ளது என்பது ரெகுலர் வாசகர்களுக்கு தெரியும். ஆனால் ஜீப் காம்பஸ் எஸ்யூவி கார் 5 சீட்டர் மாடல் ஆகும். ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரோ 7 சீட்டர் மாடல் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது ஜீப் மெரிடியன் எஸ்யூவி கார் 3 வரிசைகளை கொண்டது.

தற்போதைய நிலையில் ஜீப் மெரிடியன் கார் 7 சீட்டர் மாடலாக மட்டுமே கிடைக்கும். ஆனால் வரும் காலத்தில் இந்த காரின் 6 சீட்டர் மாடலை ஜீப் இந்தியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரில் தற்போதைய நிலையில் ஒரே ஒரு இன்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது.

அது 2.0 லிட்டர், நான்கு-சிலிண்டர், மல்டிஜெட் டர்போ-டீசல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 ஹெச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 9 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகளை ஜீப் இந்தியா நிறுவனம் வழங்குகிறது.

தற்போதைய நிலையில் ஒரே ஒரு டீசல் இன்ஜின் தேர்வு மட்டுமே என்றாலும் கூட, எதிர்காலத்தில் பெட்ரோல் இன்ஜின் தேர்வும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜீப் மெரிடியன் எஸ்யூவி கார் விலை உயர்ந்த பிரீமியம் மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. எனவே ஏராளமான வசதிகளையும் ஜீப் மெரிடியன் எஸ்யூவி கார் பெற்றுள்ளது.

இதில், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் உடன் 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன், வயர்லெஸ் செல்போன் சார்ஜிங், ட்யூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், பனரோமிக் சன்ரூஃப் போன்ற வசதிகள் இங்கே குறிப்பிடத்தகுந்தவை.

இந்திய சந்தையில் தற்போது ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை 29.90 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 36.95 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆன்-ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும். ஜீப் நிறுவனம் இந்த காரை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதால், சவாலான விலையை நிர்ணயம் செய்துள்ளது.

ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரை டெலிவரி எடுக்கும் புகைப்படங்களை ஸ்வேதா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் ஜீப் மெரிடியன் எஸ்யூவி காரின் எந்த வேரியண்ட்டை ஸ்வேதா மேனன் தனது கணவருக்கு பரிசாக வழங்கியுள்ளார்? என்பது குறித்த உறுதியான தகவல் எதுவும் தற்போது வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications