நயன்தாரா வாங்கிய கார் எல்லாம் ஒன்னுமே இல்ல!! பாலிவுட் நடிகைகள் 2023இல் வாங்கி இருக்காங்க பாருங்க.. அம்மாடியோவ்

கொரோனா ஊரடங்குகளுக்கு பிறகு கடந்த சில வருடங்களாக இயல்பு வாழ்கை திரும்பியுள்ளது. குறிப்பாக, இந்த 2023ஆம் வருடத்தில், சமீபத்தில் வந்த மிக்ஜாம் புயலை தவிர்த்து பெரியதாக எந்த பிரச்சனையும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதனால், இந்த வருடத்தில் சினிமா துறையும் கொரோனாவால் ஏற்பட்டிருந்த சரிவில் இருந்து மீண்டு இருந்தது.

குறிப்பாக, பாலிவுட் சினிமா துறை நீண்ட வருடங்களுக்கு பின் சில பல ஹிட் படங்களை கண்டது. திரைப்படங்கள் எப்படி போனாலும் சரி, பாலிவுட் சினிமா துறையினர் அவ்வப்போது புதியதாக சொகுசு கார்களை வாங்குவதை ஓர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அந்த வகையில், இந்த 2023ஆம் வருடத்தில் புது சொகுசு கார்களை வாங்கி கவனத்தை ஈர்த்த 5 முன்னணி இந்திய நடிகைகளை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

actresses who bought luxury cars

பூஜா ஹெக்டே (Pooja Hegde): தென்னிந்தியா சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கும் பூஜா ஹெக்டே பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்து வட இந்திய மக்களிடையேயும் கவனத்தை பெற்றுள்ளார். பூஜா ஹெக்டே இந்த 2023ஆம் வருடத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் லக்சரி எஸ்யூவி கார் ஒன்றை வாங்கி இருந்தார்.

actresses who bought luxury cars

ஆலியா பட் (Alia Bhatt): இந்த வருடத்தில் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்த நடிகையாக ஆலியா பட்டை சொல்லலாம். தேசிய விருதை இந்த வருடத்தில் பெற்றிருந்த ஆலியா பட் அதே மகிழ்ச்சியில் புத்தம் புதிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி லாங்-வீல்-பேஸ் லக்சரி எஸ்யூவி கார் ஒன்றையும் வாங்கி இருந்தார். கிரே நிறத்தில் இவர் வாங்கி இருந்த ரேஞ்ச் ரோவர் காரின் மதிப்பு ரூ.3 கோடிக்கும் மேல் ஆகும்.

actresses who bought luxury cars

ரகுல் பிரீத் சிங் (Rahul Preet Singh): நடிகை ரகுல் பிரீத் சிங் இந்த வருடத்தில் மெர்சிடிஸ்-மேபக் ஜி.எல்.எஸ்600 எஸ்யூவி கார் ஒன்றை வாங்கி இருந்தார். இந்த மெர்சிடிஸ்-மேபக் கார் ஆனது குறிப்பாக பாலிவுட் சினிமா துறையினர் மத்தியில் பிரபலமானதாக விளங்குகிறது. நடிகைகள் தீபிகா படுகோனே, கிரிட்டி சனோன், நடிகர்கள் அஜய் தேவ்கான், அர்ஜூன் கபூர் உள்ளிட்டோரும் இந்த மெர்சிடிஸ் காரை வைத்துள்ளனர்.

actresses who bought luxury cars

ஜாக்குலீன் ஃபெர்னாண்டஸ் (Jacqueline Fernandez): மார்க்கெட்டிற்கு வரும் புது, புது கார்களை வாங்கி குவிப்பதில் இவர் ஆர்வம் கொண்டவர். இந்த 2023ஆம் வருடத்திலும் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ ஐ7 என்ற லக்சரி எலக்ட்ரிக் செடான் காரை வாங்கி இருந்தார். இதன் விலை ரூ.2 கோடி என்ற அளவில் உள்ளது.

actresses who bought luxury cars

நயன்தாரா (Nayanthara): தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவின் 39வது பிறந்தநாள் சமீபத்தில் சென்றது. இந்த பிறந்தநாளுக்கு அவரது கணவர் விக்னேஷ் சிவன் விலையுயர்ந்த காரை பரிசாக வழங்கியுள்ளார். இந்த கார் வேறென்றும் இல்லை, மேலே ரகுல் பிரீத் சிங் வாங்கியதாக கூறிய அதே மெர்சிடிஸ்-மேபக் ஜி.எல்.எஸ்600 கார் தான்.

actresses who bought luxury cars

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவர்கள் மட்டுமில்லை, இந்த 2023ஆம் வருடத்தில் பல நடிகர், நடிகைகளும் விலையுயர்ந்த கார்களை வாங்கியுள்ளனர். முன்னணி நடிகைகளாக இருப்பதால், இந்த 5 பேரை மட்டும் இந்த தொகுப்பில் குறிப்பிட்டுள்ளோம். இதில் நாம் கவனிக்க வேண்டியது, ரகுல் பிரீத் சிங் மற்றும் நயன்தாரா வாங்கியுள்ள மெர்சிடிஸ்-மேபக் ஜி.எல்.எஸ்600 காரை பற்றிதான். ஏனெனில், சினிமா பிரபலம் என்றால் கண்டிப்பாக இந்த சொகுசு காரை வைத்திருக்க வேண்டும் என்ற அளவிற்கு இந்த கார் மாறிவிட்டது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 14, 2023, 11:25 [IST]
English summary
Indian actresses who added new luxury cars in this 2023 check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X