ஆபத்தான மலை பகுதியில் காரை டெலிவரி செய்த இந்திய விமான படை.. யாருக்கு? எதற்காக இந்த பணியை செஞ்சாங்க தெரியுமா?

இந்திய விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் வாயிலாக ஓர் கார் டெலிவரி உத்தரகாண்டின் மிக மோசமான மலை பகுதியில் டெலிவரி கொடுக்கப்பட்டு இருக்கின்றது. மஹிந்திரா தார் எஸ்யூவி-யையே இந்திய விமானப் படை டெலிவரி செய்திருக்கின்றது. மஹிந்திரா தார் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு உகந்த கார் மாடலாகும். இந்த காரை உத்தரகாண்ட்-இல் யாருக்கு இந்திய விமானப் படை டெலிவரி செய்தது? அந்த கார் எதற்காக பயன்படுத்தப்பட இருக்கின்றது? மேலும், தார் கார் சிறப்புகள் என்ன? என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடலாக மஹிந்திரா தார் எஸ்யூவி (Mahindra Thar SUV) மாறி இருக்கின்றது. ஆஃப்-ரோடு பயணங்களுக்கு மட்டுமின்றி தினசரி பயன்பாட்டிற்கும் உகந்த கார் மாடலாக தார் அறியப்படுகின்றது. இத்தகைய சிறப்புமிக்க எஸ்யூவி காரையே இந்திய விமானப்படை டெலிவரி செய்திருக்கின்றது.

Mahindra thar airdropped

உத்தரகாண்டில் உள்ள கேதர்நாத் கோவிலுக்கே இந்த கார் டெலிவரி கொடுக்கப்பட்டு இருக்கின்றது. உத்தர்காண்ட் அரசாங்கத்தால் வாங்கப்பட்டே இந்த கார் கோவிலுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பயன்படுத்தும் நோக்கில் இந்த கார் வாங்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே இந்திய விமானப் படைக்குச் சொந்த ஹெலிகாப்டர் வாயிலாக அக்கார் கோவிலுக்கு டெலிவரி செய்யப்பட்டு இருக்கின்றது.

சினூக் ஹெலிகாப்டர் வாயிலாகவே இந்த ஏர் டிராப் செய்யப்பட்டு ருத்ர பிரயாக் எனும் பகுதியில் செய்யப்பட்டு இருக்கின்றது. உத்தர்காண்ட் அரசாங்கம் தற்போது 'சார் தம் யாத்ரா' (Char Dham Yatra) எனும் சிறப்பு சேவையை பக்தர்களுக்காக தொடங்கி இருக்கின்றது. மே 10 முதல் இது நடைபெற்று வருவது குறிப்பிடத்தகுந்தது.

இந்த சேவையின் வாயிலாக பக்தர்கள் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர். இந்த பயணங்களுக்கு பக்தர்களை அழைத்துச் செல்லும் நோக்கிலேயே மஹிந்திரா தார் தற்போது வாங்கப்பட்டு இருக்கின்றது. மிகவும் கரடு-முரடான பாதைகளையும் சமாளிக்கும் திறன் கொண்டதே தார் எஸ்யூவி ஆகும்.

இதனால்தான் உத்தர்காண்ட் அரசு கேதர்நாத் கோவிலுக்காக இந்த காரை வாங்கி இருக்கின்றது. இந்த காரில் 4 வீல் டிரைவ் மற்றும் ரியர் வீல் டிரைவ் என இரண்டு விதமான ஆஃப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன், 2.0 லிட்டர்'டர்போசார்ஜட் பெட்ரோல், 2.2 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய மோட்டார் ஆப்ஷன்களே தார் எஸ்யூவியில் வழங்கப்படுகின்றன.

Mahindra thar airdropped by chinook helicopter

கியர்பாக்ஸ் தேர்வாக 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகியவை வழங்கப்படுகின்றன. இவற்றில் 2 வீல் டிரைவ் வசதிக் கொண்ட டீசல் தார் காருக்கே நாட்டில் மிக அமோகமான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. அதற்கு நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் 15 முதல் 17 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த காருக்கு போட்டியாக தற்போதைய நிலவரப்படி சந்தையில் ஃபோர்ஸ் கூர்கா, மாருதி சுஸுகி ஜிம்னி ஆகியவை உள்ளன. ஆனால், மாருதி சுஸுகி ஜிம்னி வெறும் பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனிலும், ஃபோர்ஸ் கூர்கா வெறும் டீசல் மோட்டார் ஆப்ஷனில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஆனால், தார் காரில் இரண்டுமே வழங்கப்படுகின்றன. எனவேதான், இதன் விற்பனை எப்போதும் உச்சத்தில் உள்ளது. மஹிந்திரா தார் ரூ. 11.35 லட்சம் தொடங்கி ரூ. 17.60 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

வாங்குபவர்களைக் கூடுதலாக கவரும் விதமாக இந்த காரில் ஹார்ட்-டாப் (Hard Top) மற்றும் சாஃப்ட்-டாப் (Soft Top) ஆகிய ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. மஹிந்திரா தார் ஓர் அதீத பாதுகாப்பு திறன்கொண்ட வாகனமாகும். பாதுகாப்பு விஷயத்தில் இந்த கார் 5க்கு நான்கு ஸ்டார்களைப் பெற்றிருக்கின்றது.

பாதுகாப்பு அம்சங்களாக இந்த காரில் டூயல் ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஐசோஃபிக்ஸ் இருக்கைகள் என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளை இந்த கார் மாடல் தனக்குள் தாங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மலைப் பாதை, நகர பயன்பாடு மற்றும் மணல் பாங்கான சாலை என அனைத்திற்கும் உகந்த கார் மாடல் மஹிந்திரா தார் என கூறப்படுகின்றது. இதனால்தான் பலர் இந்த காரை விரும்பி வாங்கிக் கொண்டிருக்கின்றனர். மக்கள் அதிகம் வாங்கிக் கொண்டிருப்பதால் இந்த காருக்கு காத்திருப்பு காலமும் மிக அதிகமாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 1, 2024, 11:52 [IST]
English summary
Indian air force delivers mahindra thar to kedarnath
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+