ரூ.20 கோடி காருக்கு ரூ.25 கோடியில் பெயிண்ட்: அரபு ஷேக்குகளை ஷேக்காக வைத்த இந்தியர்!

Written By:

அமெரிக்காவின் புளோரிடா நகரில் வசிக்கும் க்ரிஷ் சிங் விலை உயர்ந்த கார்கள் சேகரிப்பில் பிரபலமானவர். அரபு ஷேக்குகளை அதிர வைக்கும் அளவுக்கு விலை உயர்ந்த கார்களை வாங்கி தனது கராஜை அலங்கரித்து வருகிறார்.

கார் கலெக்ஷனில் அரபு ஷேக்குகளை ஷேக்காக வைத்த அமெரிக்க வாழ் இந்தியர்!

பொதுவாக பல அரிதான ஹைப்பர் கார்களை கடும் போட்டிக்கு மத்தியில் வாங்கிவிடுகிறார் க்ரிஷ் சிங். கார்கள் மீது அதீத ஆர்வம் கொண்டிருக்கும் க்ரிஷ் சிங் அடுத்து ஒரு புதிய ஹைப்பர் கார் மாடலை வாங்க இருக்கிறார்.

கார் கலெக்ஷனில் அரபு ஷேக்குகளை ஷேக்காக வைத்த அமெரிக்க வாழ் இந்தியர்!

அஸ்டன் மார்ட்டின் வல்கைரி என்ற விசேஷமான ஹைப்பர் கார் மாடலை க்ரிஷ் சிங் வாங்குவதற்கு முன்பதிவு செய்துவிட்டார். மொத்தமாகவே, 150 கார்கள்தான் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு செல்ல இருக்கிறது. அதில், ஒரு காரை க்ரிஷ் சிங் விரைவில் டெலிவிரி எடுக்க இருக்கிறார்.

கார் கலெக்ஷனில் அரபு ஷேக்குகளை ஷேக்காக வைத்த அமெரிக்க வாழ் இந்தியர்!

இந்த நிலையில், தனது காருக்கு தனித்துவம் கொடுக்க விரும்பிய அவர் செய்த காரியம்தான் கார் சேகரிப்பில் கலக்கும் அ்ரபு ஷேக்குகளை அதிர வைத்திருக்கிறது. ஆம், அவர் புதிதாக வாங்க இருக்கும் அஸ்டன் மார்ட்டின் ஹைப்பர் காருக்கான பெயிண்ட்டிற்கு மட்டும் ரூ.25 கோடி ரூபாய் செலவு செய்ய இருக்கிறாராம்.

கார் கலெக்ஷனில் அரபு ஷேக்குகளை ஷேக்காக வைத்த அமெரிக்க வாழ் இந்தியர்!

இப்போது சூப்பர் கார் பிரியர்கள் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்படும் விஷயமாக மாறி இருக்கிறது. அப்படி என்ன அந்த பெயிண்ட்டில் அவ்வளவு விசேஷம் என்கிறீர்களா? பஜாஜ் வி15 பைக்கின் பெட்ரோல் டேங்கில், உடைக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலிருந்து வாங்கப்பட்ட உருக்கை குறிப்பிட்ட அளவு சேர்த்து தயாரித்தது நினைவிருக்கலாம்.

Recommended Video - Watch Now!
Under-Aged Rider Begs The Policewomen To Spare Him - DriveSpark
கார் கலெக்ஷனில் அரபு ஷேக்குகளை ஷேக்காக வைத்த அமெரிக்க வாழ் இந்தியர்!

அதே பாணியில், தனது புதிய அஸ்டன் மார்ட்டின் வல்கைரி ஹைப்பர் காருக்கு நிலவிலிருந்து எடுத்து வரப்பட்ட பாறைத் துகள்களை கலந்து பெயிண்ட் செய்ய முடிவு செய்திருக்கிறார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்.

கார் கலெக்ஷனில் அரபு ஷேக்குகளை ஷேக்காக வைத்த அமெரிக்க வாழ் இந்தியர்!

நிலவிலிருந்து எடுத்து வரப்பட்ட பாறையின் உண்மைத் தன்மை சோதிக்கப்பட்டுள்ளது. அந்த பாறையை பொடித்து பவுடராக்கி தனது புதிய அஸ்டன் மார்ட்டின் வல்கைரி ஹைப்பர் காருக்கு பயன்படுத்தப்பட இருப்பதாக அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

கார் கலெக்ஷனில் அரபு ஷேக்குகளை ஷேக்காக வைத்த அமெரிக்க வாழ் இந்தியர்!

இந்த விசேஷ பெயிண்ட்டிற்கு மட்டும் இந்திய மதிப்பில் ரூ.25 கோடியை அவர் செலவிட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. கரோசெரி லூனார் ரெட் பெயிண்ட் என்ற வர்ணத்தில் நிலவிலிருந்து கொணரப்பட்ட பாறையின் துகள்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

கார் கலெக்ஷனில் அரபு ஷேக்குகளை ஷேக்காக வைத்த அமெரிக்க வாழ் இந்தியர்!

ரூ.20 கோடி மதிப்புடைய அந்த ஹைப்பர் காருக்கு, அதனைவிட கூடுதல் மதிப்பில் க்ரிஷ் சிங் பெயிண்ட் அடிக்க முடிவு செய்திருப்பது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

கார் கலெக்ஷனில் அரபு ஷேக்குகளை ஷேக்காக வைத்த அமெரிக்க வாழ் இந்தியர்!

ஹோல்டெக் இன்டர்நேஷனல் என்ற பெரும் முதலீட்டு நிறுவனத்தை நடத்தி வரும் க்ரிஷ் சிங்கிடம் பல அரிய ஹைப்பர் கார் மாடல்கள் உள்ளன. ஏற்கனவே, லம்போர்கினி வெனினோ ஹைப்பர் காரை வாங்கி சர்வதேச மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தார்.

கார் கலெக்ஷனில் அரபு ஷேக்குகளை ஷேக்காக வைத்த அமெரிக்க வாழ் இந்தியர்!

லம்போர்கினி வெனினோ காரை கடும் போட்டிக்கு பின்னர் தனக்கு சொந்தமாக்கினார் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். மொத்தமாகவே மூன்றே லம்போர்கினி வெனினோ கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன. அதில், ஒரு காரை க்ரிஷ் சிங் வாங்கினார்.

கார் கலெக்ஷனில் அரபு ஷேக்குகளை ஷேக்காக வைத்த அமெரிக்க வாழ் இந்தியர்!

லம்போர்கினி வெனினோ காரை ரூ.25 கோடி விலையில் வாங்கி இருக்கிறார் க்ரிஷ் சிங். அடுத்து, கோனிக்சேக் அகேரா ஆர்எஸ் என்ற சூப்பர் காரை வாங்கினார். இந்த கார் ரூ.19 கோடி மதிப்புடையது. இந்த காரில் கூடுதலாக விலை உயர்ந்த ஆக்சஸெரீகளை சேர்த்து தனது காருக்கு தனித்துவத்தை கூட்டினார்.

கார் கலெக்ஷனில் அரபு ஷேக்குகளை ஷேக்காக வைத்த அமெரிக்க வாழ் இந்தியர்!

அத்துடன் அந்த காரை கோனிக்செக் அகேரா எக்ஸ்எஸ் என்ற பெயரை குறிப்பிடச் சொல்லி வாங்கினார். அதாவது, தனது காரில் கூடுதல் சிறப்பம்சம் இருப்பதை குறிப்பிடும் வகையில், Excess என்ற அர்த்தத்தில் XS என்ற சுருக்கத்தை சேர்த்து எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

கார் கலெக்ஷனில் அரபு ஷேக்குகளை ஷேக்காக வைத்த அமெரிக்க வாழ் இந்தியர்!

ராஞ்சியில் பட்டப்படிப்பையும், அமெரிக்காவில் பட்ட மேற்படிப்புகளை முடித்த க்ரிஷ் சிங், ஹோல்டெக் இன்டர்நேஷனல் என்ற பெரும் முதலீட்டு நிறுவனத்தின் நடத்தி வருகிறார். இவரது வருமானத்தை பிரதிபலிக்கும் விதத்தில், புதிய ஹைப்பர் கார்களை வாங்கி குவித்து வருகிறார்.

பணத்தை சேமிப்பது ஒரு கலை என்றால், அதனை க்ரிஷ் சிங் செலவு செய்வதும் ஒரு கலையாகவே தோன்றுகிறது அல்லவா... !!

Sources: Lamborghiniks andJalopnik

இத படிச்சதுக்கு அப்புறமும் சிக்னலில் பிச்சை போடுவீங்க?

இத படிச்சதுக்கு அப்புறமும் சிக்னலில் பிச்சை போடுவீங்க?

மோட்டார் வாகனச் சட்டத்தில் பல்வேறு சுவாரஸ்யமான விதிமுறைகளும், சட்டங்களும் வகுக்கப்பட்டு இருக்கின்றன. அதில், சில சட்டங்கள் பற்றி போலீசாருக்கே விழிப்புணர்வு இல்லாத நிலை இருக்கிறது.

இத படிச்சதுக்கு அப்புறமும் சிக்னலில் பிச்சை போடுவீங்க?

சிக்னல்களில் நிற்கும்போது மொபைல்சார்ஜர், மொபைல் ஸ்டான்ட் மற்றும் திண்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனை வாங்குவது மோட்டார் வாகனச் சட்டப்படி குற்றமாக வரையறுக்கப்பட்டு இருக்கிறது.

Picture credit: Wiki Commons

இத படிச்சதுக்கு அப்புறமும் சிக்னலில் பிச்சை போடுவீங்க?

குறிப்பாக, திண்பண்டங்களை வாங்குவதற்கு ரூ.1,000 வரை அபராதம் விதிக்க சட்டத்தில் வழி இருக்கிறது. நீங்கள் காரில் அமர்ந்து திண்பண்டங்கள் வாங்குவதை போக்குவரத்து போலீசார் பார்த்து கையோடு பிடித்ததால் அபராதம் விதிக்க முடியும்.

இத படிச்சதுக்கு அப்புறமும் சிக்னலில் பிச்சை போடுவீங்க?

மேலும், அபாயகரமான வாகனத்தை ஓட்டுவதற்கான குற்றத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்ய முடியும். கேட்பதற்கு வியப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை. இதில், பல அடிப்படை விஷயங்களை வைத்தே இந்த சட்டம் வரையறுக்கப்பட்டு இருக்கிறது.

இத படிச்சதுக்கு அப்புறமும் சிக்னலில் பிச்சை போடுவீங்க?

இதுபோன்று சாலைகளில் வந்து விற்பனை செய்யும் பொருட்களை வாங்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. சிலர் பணத்தை எடுப்பதற்குள் சிக்னல் விழுந்துவிடுவதால் போக்குவரத்து நெரிசலுக்கும் வழிகோலுகிறது.

இத படிச்சதுக்கு அப்புறமும் சிக்னலில் பிச்சை போடுவீங்க?

விற்பனை செய்பவர்கள் மீது வாகனங்கள் மோதி விபத்துக்கள் நிகழவும் வாய்ப்புண்டு. மேலும், திண்பண்டங்களில் விஷப் பொருட்களை கலந்து வழிப்பறி செய்வதற்கும் வாய்ப்புள்ளது. மேலும், வாகனத்தில் உள்ள பொருட்களை அருகில் வந்து திருடிச் செல்வதற்கும் வழிவகுக்கிறது.

இத படிச்சதுக்கு அப்புறமும் சிக்னலில் பிச்சை போடுவீங்க?

அதேபோன்று, கார்களில் கொடுக்கப்படும் எல்சிடி திரைகள் இருந்தால், அதற்கு ரூ.1,000 வரை அபராதம் விதிக்க வழியுண்டு. பல வாடகை கார்களில் இவ்வாறு கொடுக்கப்பட்டு வருகிறது. இது ஓட்டுனரின் கவனத்தை திசை திருப்புவதாக இருக்கும் என்றும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இத படிச்சதுக்கு அப்புறமும் சிக்னலில் பிச்சை போடுவீங்க?

சிக்னல்களில் பிச்சை போடுவதும் குற்றமாக மோட்டார் வாகனச் சட்டம் கூறுகிறது. இதேபோன்று, வைப்பர் இல்லாமல் இருந்தாலும் ரூ.100 அபராதமும், மறுமுறை தொடரும் பட்சத்தில் ரூ.300 வரையிலும் அபராதம் விதிக்க வழிவகை உண்டு.

இத படிச்சதுக்கு அப்புறமும் சிக்னலில் பிச்சை போடுவீங்க?

இந்த விதிமுறைகளை நடைமுறையில் கண்காணித்து அபராதம் விதிப்பதில் சிக்கல்களும், சவால்களும் உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இத படிச்சதுக்கு அப்புறமும் சிக்னலில் பிச்சை போடுவீங்க?

தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் ஒலிப்பானை பயன்படுத்தும் போக்கும் அதிகரித்து வருகிறது. இதற்கு முடிவு கட்டுவதற்கும் கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இத படிச்சதுக்கு அப்புறமும் சிக்னலில் பிச்சை போடுவீங்க?

எனவே, மோட்டார் வாகனச் சட்டம் குறித்து வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வை அதிகப்படுத்துவதன் மூலமாக இதுபோன்ற விதிமீறல்களை குறைக்க முடியும்.

Picture credit: Wiki Commons

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Indian American Spending Rs 25 Crore For Unique Car Paint.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark