பாக். கொட்டத்தை அடக்க இந்தியா வந்த "அசூரன்"! எதிரிகள் எல்லாம் தொடை நடுங்க போறாங்க!

அமெரிக்க ராணுவத்திற்கான விமானங்கள் மற்றம் வான்வழி தாக்குதல்களை நடத்தும் கருவிகளை தயார் செய்யும் போயீங் நிறுவனத்தின் குறிப்பிட்ட பிறகு இந்திய ராணுவத்திற்கு 3 அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை வழங்கியுள்ளது. 6 ஹெலிகாப்டர்களை வழங்க ஒப்பந்தம் போடப்பட்டிருந்த நிலையில் 3 ஹெலிகாப்டர்கள் வந்துள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நாடுகளுக்கு இடையே இருக்கும் நட்புறவை பேணவும், அதே நேரம் நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்கவும் நட்பு நாடுகள் தங்கள் ராணுவ தளவாடங்களை பகிர்ந்து வருகின்றன. இதன்படி இந்தியா அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ஏச் -64மு அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை இந்தியாவில் எல்லை பகுதிகளில் பயன்படுத்த கோரியிருந்தது. அதன்படி இந்திய ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள போயீங் ராணுவ தளவாட தயாரிப்பு அமைப்பு இந்த ஹெலிகாப்டர்களை தயாரிக்கிறது.

Indian Army AH-64E combat helicopters

இந்த ஹெலிகாப்டர்கள் 6 ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்திருந்தது. இதற்காக ரூ4168 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதில் 3 ஹெலிகாப்டர்கள் தற்போது டெலிவரி செய்யப்பட்டுள்ளன. வெறும் 6 ஹெலிகாப்டர்களுக்கு ஏன் ரூ4 ஆயிரம் கோடியை வழங்க வேண்டும்? அப்படி அதில் என்ன இருக்கிறது? இது எப்படி எல்லையில் பாதுகாப்பு பணியை செய் யும்? விரைவாக காணலாம் வாருங்கள்.

இந்த ஏச்-64இ அப்பாச்சி ஹஎலிகாப்டர் மல்டி-டொமைன் ஆப்ரஷேன் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக நெட்வொர்க் மூலம் இயங்கும் திறன் கொண்டது. முழுவதும் இது ஆயுதங்களை தாங்கி செல்லும் திறன் கொண்டது. இதனால் மோசமான சூழ்நிலைகளிலும், சிறப்பாக செயல்படும் திறன் கொண்டது. இதில் ஆன்போர்டு மற்றும் ஆஃப்போர்டு சென்சார்கள் பல பொருத்தப்பட்டுள்ளன. இதனால் தாக்குதல்களுக்கு துல்லியமான தகவல்களை பெற முடியும்.

Indian Army AH-64E combat helicopters

இது போக நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுங்கள், நீண்ட தூரத்தில் இருந்தாலும் கனெக்டிவிட்டியுடன் இருக்கும் திறன் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஹெலிகாப்டரில் முக்கிய அட்வாஸ்டு அம்சமாக லாங்போ ரேடார்கள் வழங்கப்பட்டுள்ளன. இது போக ஹெல்ஃபயயர் ஏவுகனை, 30 மிமீ செயின் கன் ஆகியவை உள்ளன.

இந்த விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள லாங்போ ரேடார் விமானத்தின் ரோட்டாருக்கு மேல் பொருத்தப்பட்டுள்ளது. இது டார்கெட்டை சரியாக ஸ்கேன் செய்து அதே நேரம் மறைந்திருந்து தாக்கும் திறன் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் ஒரே நேரத்தில் 128 டார்கெட்டை லாக் செய்து, 16 டார்கெட்டில் ஒரே நேரத்தில் தாக்குதல் செய்யும் திறன் கொண்டது. அதே நேரம் அந்த பகுதியில் மேக மூட்டம், புகை, ஜாமிங் கருவிகள் இருந்தாலும் அதையும் தாண்டி துல்லிய தாக்குதல்களை நடத்தும்.

இது போக இந்த ஹெலிகாப்டரில் இன்ஃப்ராரெட், லேசர் கைடு, நைட் விஷன் ஆகிய அம்சங்கள் உள்ளது. இதனால் இரவு நேரத்திலும் துல்லியமான தாக்குதல்களை நடத்தி முடியும். இது போக பதில் தாக்குதல்களை தாக்கும் வகையில் இந்த ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டுள்ளுது. இதன் பாடி ஒரு அரண் போல செயல்படும். மேலும் சீட்கள் உடையான வகையில் உள்ளது. பதில் தாக்குதல்களை உடனடியாக செய்ய எலெக்ட்ரானிக் கவுன்டர் அம்சங்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது இந்திய ராணுவத்தில் உள்ள அப்பாச்சி ஹெலிகாப்டரை விட இது மேம்பட்ட அம்சங்களுடன் இருக்கிறது. இந்த ஹெலிகாப்டர்களை பாகிஸ்தான் எல்லை பகுதியில் இந்திய ராணுவம் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி இந்த ஹெலிகாப்டரை கண்டால் பாகிஸ்தானும் அஞ்சும்!

More from DriveSpark

Article Published On: Wednesday, July 23, 2025, 9:35 [IST]
English summary
Indian army ah 64e combat helicopters apache delivery update
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+