இந்திய ஆயுத படைகளின் பாதுகாப்பு படைத் தலைவர் இவ்ளோ சாதாரண காருல போனாரா! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இந்தியாவில் சாதாரண கவுன்சிலர்களே டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) போன்ற பிரமாண்ட உருவம் கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார்களில் வலம் வந்துக் கொண்டிருக்கின்ற சூழலில், இந்திய ஆயுதப் படைகளின் பாதுகாப்புப் படைத் தலைவர் சதாராணமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) காரில் பயணிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்திய ஆயுதப் படைகளின் பாதுகாப்புப் படைத் தலைவராக அணில் சௌஹன் இருக்கின்றார். இவருக்கு அரசு சார்பில் அதிகாரப்பூர்வ வாகனமாக மாருதி சுஸுகி சியாஸ் (Ciaz) கார் மாடல் வழங்கப்பட்டி இருக்கின்றது.
இந்த காரிலேயே அவர் வலம் வந்து உள்ளார். இது ஓர் நடுத்தர அளவுள்ள செடான் (Mid Size Sedan) வகை கார் மாடல் ஆகும். இந்திய ஆயுதப் படைகளின் பாதுகாப்புப் படைத் தலைவராக அணில் சௌஹன் பயன்படுத்தி வரும் அந்த சியாஸ் கார் முழுக்க முழுக்க கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு மிடுக்காக காட்சியளிக்கின்றது.

இந்திய ஆர்மி-யின் உயரிய பொருப்பில் அவர் இருக்கின்றார் என்பதை விவரிக்கக் கூடிய கொடி, ராணுவ எம்பளம் மற்றும் ஐந்து ஸ்டார்கள் ஆகியவையும் அந்த காரில் இடம் பெற்றிருந்தன. கார் சாதாரணமானதாக இருந்தாலும் இந்த மூன்றும் அந்த காருக்கு அதிக கௌரவத்தையும், சிறப்பையும் சேர்க்கும் விதமாக இடம் பெற்றிருக்கின்றன.
இந்திய ஆயுதப் படைகளின் பாதுகாப்புப் படைத் தலைவர் அணில் சௌஹன் மட்டுமல்ல இன்னும் பல முக்கிய ராணுவ அதிகாரிகளுக்கும் இந்த கார் மாடலே அதிகாரப்பூர்வ வாகனமாக வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய வாகனம் இன்னும் சில மாதங்களில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்காத நிலை உருவாக இருக்கின்றது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
ஆமாங்க, சீக்கிரமே இந்த காரை மாருதி சுஸுகி விற்பனையில் இருந்து அகற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மார்கெட் மொத்தமும் எஸ்யூவி கார்களுக்கானதாக மாறி வருவது மற்றும் விற்பனை வரவேற்பு பெரிய அளவில் இல்லாத காரணத்தினாலுமே இந்த காரை அது விற்பனையில் இருந்து வெளியேற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
சொல்லப்போனால் மாதத்திற்கு 600-500 யூனிட்டுகள் விற்பனையாவதே பெரிய விஷயமாக தற்போது மாறியிருக்கின்றது. ஹூண்டாய் வெர்னா, ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லேவியா உள்ளிட்ட கார் மாடல்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த இந்த காருக்கா இப்படி ஒரு நிமை என்றே பலரையும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் சியாஸ் செடான் கார் ரூ. 9.50 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த அளவு பட்ஜெட் விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் காரையே இந்திய ராணுவத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரியான அணில் சௌஹன் பயன்படுத்தி உள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விற்பனைக்குக் குறைந்து காணப்பட்டாலும் இப்போது செடான் கார் காதலர்களின் பிரியமான தேர்வாக சியாஸ் உள்ளது. பிரீமியம் அம்சங்கள், சற்றே குறைவான விலை மற்றும் அதிக மைலேஜை வழங்கும் ஆகியவை இந்த காரை பிரபலமானதாக இப்போதும் வைத்திருக்கின்றது. ஆனால், இதையே பலரும் வாங்க முன் வரவில்லை என்பது வேதனை அளிக்கும் விதமாக அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









