இந்திய ராணுவமே எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்குது... அப்ப நாமளும் நம்பி வாங்கலாம் போலயே...
இந்திய ராணுவத்தினர் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்கான முதல் டென்டரும் ரெடியாகுள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் ராணுவம் மிகவும் முக்கியமான ஒரு அமைப்பாகும். உலக அளவில் இந்திய ராணுவத்திற்கும் ஒரு முக்கியமான இடம் இருக்கிறது. இந்தியாவில் ராணுவத்தில் பல பிரத்தியேகமான வாகனங்கள் இருக்கின்றன. இவை எல்லாம் ராணுவம் தனக்கு எவ்வாறான வாகனங்கள் தேவை என வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம் சொல்லி அதற்குத் தகுந்தார் போல் வாகனங்களைத் தயாரித்துப் பயன்படுத்தி வருகின்றனர். ராணுவத்தில் பைக் முதல் கார்கள், டேங்க், விமானம், ஹெலிகாப்டர் என வித விதமான வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் வாகனத்தில் பெரும் புரட்சி நடந்து வருகிறது. மக்கள் எல்லோரும் பெட்ரோல், டீசல் வாகனங்களைக் கைவிட்டுவிட்டு எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க முன்வந்துவிட்டனர். இந்நிலையில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களில் விற்பனையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்திய ராணுவத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்பாட்டைக் கொண்டு வர இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.

அதன்படி ஒட்டு மொத்தமாக இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் வாகனங்களில் 25 சதவீத இலகு ரக வாகனங்களையும், 38 சதவீத பஸ்களையும், 48 சதவீத பைக்குக்களையும் எலெக்ட்ரிக் வாகனமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்திற்கான வாகனம் என்கிறபோது சாதாரணமாக மக்கள் பயன்படுத்தும் வாகனத்தை பயன்படுத்த முடியாது.

இந்திய ராணுவத்தின் வாகனங்களுக்காகப் பிரத்தியேக தேவை இருக்கிறது. அந்த தேவைகளைப் பூர்த்தி செய்யும்வகையில் தான் அந்த வாகனம் வடிவமைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். இது மட்டுமல்ல இந்திய ராணுவம் செயல்படும் பல பகுதிகளில் எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. இந்த சிக்கல்களைத் தீர்த்த பின்பு தான் அப்பகுதிகளில் எலெக்ட்ரிக் வாகனங்களைக் கொண்டு செல்ல முடியும்.

இதையடுத்து தற்போது இந்திய ராணுவ அதிகாரிகள், ராணுவத்தில் எந்த இடத்தில் எல்லாம் எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்தலாம் என ஆய்வு நடத்தி வருகின்றது. இது போக எந்த பகுதியை எல்லாம் சிறிய மாற்றம் செய்வதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்தும் பகுதியாக மாற்றலாம் என ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்திய ராணுவம் தனது பயன்பாட்டிற்கு எலெக்ட்ரிக் வாகனங்களைக் கொண்டு வர முக்கியமான காரணம் மாசுக் கட்டுப்பாடுகள் தான். வாகனத்திலிருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் பெரும் மாசு ஏற்படுகிறது என்பதால் மாசுவை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இதனால் படிப்படியாக இந்திய ராணுவத்திலுள்ள கம்பஷனவ் இன்ஜின்களை குறித்துவிட்டு எலெக்ட்ரிக் இன்ஜின்களை இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த எலெக்ட்ரிக் வாகனத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்றால் அதற்கான கட்டமைப்புகளான சார்ஜிங் ஸ்டேஷன்/ பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களை கட்டமைக்கும் பணிகளையும் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டுள்ளது. இப்படியாக கடமைப்படும் சார்ஜிங் ஸ்டேஷன்களில் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஒரு ஃபாஸ்ட் சார்ஜர் மற்றும் 2 மெதுவாக சார்ஜ் ஏறும் சார்ஜர்களை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த சார்ஜிங் ஸ்டேஷன் எல்லாம் கேபிள் மூலம் கரென்ட் வசதி உள்ள இடங்களில் செட்டப் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவே கரென்ட் இல்லாத பகுதியில் சோலார் பேனல் மூலம் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க முடியுமா? என்ற பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது. தற்போது இந்த எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்காக முதல் டென்டரும் ரெடியாகி விட்டது. இதில் 60 பஸ்கள் மற்றும் 24 பாஸ்ட் சார்ஜர்களுக்காக டென்டர் கோரப்படவுள்ளது.

உலகம் முழுவதும் மாசுவை குறைத்து பசுமையைக் காப்பதற்கான முயற்சியில் தற்போது இந்திய ராணுவமும் இறங்கியுள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் இந்த முயற்சியை எடுக்கலாமா வேண்டாமா என ஆலோசித்த இந்திய ராணுவம் இந்த தொழிற்நுட்பம் குறித்துத் தெளிவாக அறிந்து கொள்வதற்காக மார்கெட்டில் ஏற்கனவே உள்ள எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களான டாடா மோட்டார்ஸ், பர்ஃபெக்ட் மெட்டல் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிவோல்ட் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்திய ராணுவ அமைச்சர் முன்பு இந்த தொழிற்நுட்பம் குறித்து விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








