கொரோனா வைரசுக்கு எதிரான போர்... வல்லரசு நாடுகளே திணறும் நிலையில் இந்திய ராணுவம் செய்த மாஸான காரியம்

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்திய ராணுவம் களமிறங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரசுக்கு எதிரான போர்... வல்லரசு நாடுகளே திணறும் நிலையில் இந்திய ராணுவம் செய்த மாஸான காரியம்

கண்ணுக்கே தெரியாத கோவிட்-19 வைரஸ் தற்போது ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டி படைத்து வருகிறது. கொரோனா வைரஸ் வகைகளில் ஒன்றான கோவிட்-19 வைரஸ், சீனாவில் இருந்து பரவ தொடங்கியதாக நம்பப்படுகிறது. சீனாவை தொடர்ந்து இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், இங்கிலாந்து, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கோவிட்-19 கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான போர்... வல்லரசு நாடுகளே திணறும் நிலையில் இந்திய ராணுவம் செய்த மாஸான காரியம்

கோவிட்-19 வைரஸால் உலகம் முழுவதும் தற்போது வரை 34 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7,23,732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் தற்போது கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 1,071 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரசுக்கு எதிரான போர்... வல்லரசு நாடுகளே திணறும் நிலையில் இந்திய ராணுவம் செய்த மாஸான காரியம்

இந்தியாவை பொறுத்தவரை மஹாராஷ்டிரா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கோவிட்-19 வைரஸ் நோயாளிகள் அதிக அளவில் உள்ளனர். கோவிட்-19 வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரசுக்கு எதிரான போர்... வல்லரசு நாடுகளே திணறும் நிலையில் இந்திய ராணுவம் செய்த மாஸான காரியம்

இந்த வரிசையில் கோவிட்-19 வைரசுக்கு எதிரான போரில் தற்போது இந்திய ராணுவமும் களமிறங்கியுள்ளது. கோவிட்-19 நோயாளிகளுக்காக பேருந்து ஒன்றை இந்திய ராணுவம் மாடிபிகேஷன் செய்துள்ளது. கோவிட்-19 அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, இந்திய ராணுவம் இந்த பஸ்ஸை உருவாக்கியுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான போர்... வல்லரசு நாடுகளே திணறும் நிலையில் இந்திய ராணுவம் செய்த மாஸான காரியம்

இந்திய ராணுவத்தின் வெஸ்டர்ன் கமாண்ட் (Western Command) இந்த பேருந்தை உருவாக்கியுள்ளது. இது குறித்து இந்திய ராணுவத்தின் பொது தகவலின் ஏடிஜி (Additional Directorate General) டிவிட்டர் பக்கத்தில் டிவிட் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒரே ஒரு நுழைவு வாயில் மட்டும் கொண்டதாக இந்த பேருந்து மாடிபிகேஷன் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான போர்... வல்லரசு நாடுகளே திணறும் நிலையில் இந்திய ராணுவம் செய்த மாஸான காரியம்

மேலும் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்காக வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. கோவிட்-19 வைரஸானது நோயாளிகளின் சுவாச மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே தற்போது உலகம் முழுவதும் வென்டிலேட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது.

MOST READ: கொரோனா பரவும் நிலையில் அதிர வைக்கும் காரியத்தை செய்த எம்எல்ஏ... வீடியோவை பார்த்து ஷாக் ஆன மக்கள்...

கொரோனா வைரசுக்கு எதிரான போர்... வல்லரசு நாடுகளே திணறும் நிலையில் இந்திய ராணுவம் செய்த மாஸான காரியம்

இதனால் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்து வழங்க வேண்டும் என பல்வேறு நாடுகளின் அரசுகளும் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளன. இதன்பேரில் டெஸ்லா, ஃபோர்டு, ஜென்ரல் மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வென்டிலேட்டர்களின் உற்பத்தியில் களமிறங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ: வெறும் 48 மணி நேரத்தில் உருவான உயிர் காக்கும் கருவி... உலகையே திரும்பி பார்க்க வைத்த நம்ம இந்தியா...

கொரோனா வைரசுக்கு எதிரான போர்... வல்லரசு நாடுகளே திணறும் நிலையில் இந்திய ராணுவம் செய்த மாஸான காரியம்

இதனிடையே இந்திய ராணுவத்தால் தற்போது மாடிபிகேஷன் செய்யப்பட்டுள்ள பேருந்தில் டிரைவர் மற்றும் கோ-டிரைவரை தனிமைப்படுத்துவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்திய ராணுவம் தவிர ரயில்வே துறையும் இது போன்ற முயற்சிகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன்படி ரயில் பெட்டிகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

MOST READ: கொரோனாவுக்கு எதிரான போர்... இப்படி ஒரு நடவடிக்கையை யாருமே எதிர்பாக்கல... மாஸ் காட்டும் மத்திய அரசு

கொரோனா வைரசுக்கு எதிரான போர்... வல்லரசு நாடுகளே திணறும் நிலையில் இந்திய ராணுவம் செய்த மாஸான காரியம்

அதாவது ரயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்படுகின்றன. நோயாளிகளுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்கு ஏதுவாக, ரயில் பெட்டிகளில் ஒரு சில மாற்றங்களும் செய்யப்படுகின்றன. இந்திய ரயில்வே துறையின் இந்த நடவடிக்கை கவனம் பெற்ற நிலையில், ராணுவமும் தற்போது கொரோனா வைரசுக்கு எதிரான போரில் களமிறங்கியுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான போர்... வல்லரசு நாடுகளே திணறும் நிலையில் இந்திய ராணுவம் செய்த மாஸான காரியம்

கோவிட்-19 வைரஸை எதிர்கொள்வதில் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே தடுமாறி வருகின்றன. இந்த சூழலில், இந்தியாவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டால், மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்திய ராணுவம் மற்றும் ரயில்வே துறை ஆகியவற்றின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indian Army Modifies Bus To Carry Coronavirus Patients. Read in Tamil
Story first published: Monday, March 30, 2020, 14:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X