ஆர்டர் கொடுத்தாச்சு... இந்திய இராணுவத்தில் நடக்க போகும் அதிரடி மாற்றம் - மத்திய அரசின் அடுத்த சிக்ஸர்!!
இந்தியா மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகமும் எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி மெல்ல, மெல்ல நகர்ந்து வருகின்றன. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த விஷயத்தில் இந்தியா கொஞ்சம் மெதுவாகவே எலக்ட்ரிக்கை நோக்கி மாறி வருகிறது. இருப்பினும், மத்திய அரசாங்கம் இந்த மாற்றத்தை வேகப்படுத்த முடிந்தவரையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்திய இராணுவத்திற்காக 113 எலக்ட்ரிக் பேருந்துகள் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன. இந்திய போக்குவரத்தை கார்பன் மாசு உமிழ்வு அற்றதாக கொண்டுவர எண்ணும் அரசாங்கத்தின் முயற்சியின் வெளிப்பாடாக இந்த ஆர்டர் பார்க்கப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
ஒவ்வொரு வருடமும் மத்திய அரசின் பட்ஜெட்டில் பெரிய தொகை வகுக்கப்படுவது இராணுவத்திற்கு தான் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. ஏனெனில், இந்தியா மட்டுமின்றி எந்தவொரு நாட்டிற்கும் இராணுவம் ஆனது ஓர் முக்கியமான துறை ஆகும். இதனாலேயே, இந்திய இராணுவத்தில் அவ்வப்போது புது, புது வாகனங்கள், ஆயுதங்கள் வாங்கப்படுகின்றன.

இந்த வகையில், இந்திய இராணுவம் 113 எலக்ட்ரிக் பேருந்துகளை இராணுவ வீரர்களின் பயன்பாட்டிற்காக வாங்குகிறது. இதுகுறித்து நமக்கு கிடைக்க பெற்றுள்ள தகவலின்படி, இந்த எலக்ட்ரிக் பேருந்துகள் 40 இருக்கைகளை கொண்டவை ஆகவும், ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் குறைந்தப்பட்சம் 250கிமீ தொலைவிற்கு இயங்கக்கூடியவைகளாகவும் இருக்கும்.
இந்திய இராணுவம் வருங்காலங்களில் இவ்வாறு நிறைய எலக்ட்ரிக் பேருந்துகளை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் பார்த்தால், தற்போது வாங்கப்படும் 113 எலக்ட்ரிக் பேருந்துகள் ஆரம்ப கட்டம் மட்டுமே ஆகும். இராணுவம், விமான படை மற்றும் கப்பற் படை என 3 துறைகளிலும் எலக்ட்ரிக் வாகனங்களை புகுத்துவதில் இந்திய பாதுகாப்பு துறை கடந்த 2 வருடங்களாக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
எலக்ட்ரிக் பேருந்துகள் மட்டுமில்லாமல், எடை குறைவான எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் எலக்ட்ரிக் பைக்குகளிலும் இந்திய இராணுவம் தனக்கான நிதியை செலவழிக்க உள்ளது. வெளிநாட்டு இராணுவ துறைகளிலும் எலக்ட்ரிக் வாகனங்கள் புகுந்துவிட்டன. அதன்படி, எலக்ட்ரிக் வாகனங்களில் கவனம் செலுத்துவதுடன், அந்த வாகனங்களை முற்றிலுமாக மேட்-இன்-இந்தியா வாகனங்களாக வாங்க இந்திய இராணுவம் விரும்புகிறது.
இதனால், இராணுவ துறையின் இந்த முயற்சி ஒட்டுமொத்த இந்திய பாதுகாப்பு துறையில் புது, புது எலக்ட்ரிக் சாதனங்களை கண்டுப்பிடிப்பதை ஊக்குவிக்கும் என கூறப்படுகிறது. மேலும், இதன் மூலமாக மற்ற அரசாங்க ஏஜென்சிகள் மற்றும் தொழில் நிறுவனங்களை காட்டிலும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடியதாக இந்திய பாதுகாப்பு துறை முன்னேற்றம் காணும்.
இந்தியா 2070ஆம் ஆண்டிற்குள் முற்றிலுமாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டும் என்கிற கொள்கையுடன் இப்போதில் இருந்தே செயல்பட்டு வருகிறது. அதன்படி, 2030ஆம் ஆண்டிற்குள் நாட்டில் பயன்படுத்தப்படும் மொத்த வாகனங்களில் குறைந்தப்பட்சம் 30 சதவீதத்தை ஆவது எலக்ட்ரிக்காக மாற்றிவிட வேண்டும் என்கிற திட்டத்தில் மத்திய அரசு உள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய போக்குவரத்தை முற்றிலுமாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்ற வேண்டும் என்பதில் குறிப்பாக கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக அரசாங்கம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அப்படியென்றால், அதில் நாட்டின் பாதுகாப்பு துறையின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்க வேண்டும். ஆதலால், வருங்காலங்களில் நாட்டின் இராணுவம், கடற்படை மற்றும் வான் படையிலும் எலக்ட்ரிக் வாகனங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என நம்புவோம்.


Click it and Unblock the Notifications








