இந்திய ராணுவத்தில் இப்படி ஒரு காரை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க... மாஸ்டர் பீஸை தயாரித்த டாடா நிறுவனம்
டாடா நிறுவனம் இந்திய ராணுவத்தினருக்காக QRFV ரக வாகனங்களைத் தயாரித்து வழங்கியுள்ளது. இந்த வாகனம் ராணுவத்தில் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? இந்த ராணுவத்தில் உள்ள அம்சங்கள் என்னென்ன? உள்ளிட்ட ஏராளமான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

ஒரு நாட்டிற்கு ராணுவம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. வெளிநாடுகளிலிருந்து நம்ம நாட்டிற்கு வரும் ஆபத்துக்களை எதிர்த்துச் சண்டையிடவும், நம் நாட்டிற்குள்ளேயே நமக்கு ஏற்படப்போகும் ஆபத்துக்களை முன்கூட்டியே அறிந்து அதைத் தடுக்கவும் ஒரு நாட்டிற்கு ராணுவம் அவசியம் தேவை. ஆயுதம் தாங்கி நிற்கும் ஒரு ராணுவ வீரனை நாம் கொலை செய்யக் காத்திருப்பவன் எனப் பார்க்கக் கூடாது. அவன் நாம் நாட்டிற்காகக் காவல் இருக்கும் எல்லை சாமி.

இன்றைய சூழ்நிலையில் ஒரு நாட்டின் ராணுவம் பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டியது அவசியம். இன்று உலகின் அமெரிக்கா,சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் உள்ள ராணுவங்கள் பலமாக இருக்கின்றன. இதனால் இந்திய ராணுவமும் தன் பலத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் தொழிற்நுட்பம் வளர வளர தங்கள் ராணுவத்தில் அதைப் புகுத்திப் பலப்படுத்திக்கொண்டே செல்கிறது.

இந்திய ராணுவமும் எதற்கும் சளைத்தது அல்ல. இந்திய ராணுவத்தில் இன்றும் உலகத்தரமான தொழிற்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் இந்திய ராணுவத்தினர் பயன்படுத்தும் வாகனங்களைத் தயாரிக்க இந்திய ராணுவம் டாடா நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி இந்திய ராணுவத்தினர் கேட்கும் விதமான வாகனங்களை அந்நிறுவனம் தயாரித்து இந்திய ராணுவத்திற்கு வழங்குகிறது.

இதற்காக டாடா குழுமம் டாடா அட்வாஸ்டு சிஸ்டம் என்ற ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் இந்த பணியைச் செய்து வருகிறது. டாடா நிறுவனத்திடம் ஏற்கனவே வாகனங்களைத் தயாரிக்கும் தொழிற்நுட்பம் இருந்தாலும் ராணுவ வாகனங்களைத் தனி நிறுவனம் மூலம் தயாரிக்கிறது. ராணுவ வாகனங்களில் உள்ள அம்சங்கள் எல்லாம் மிகவும் ரகசியமானது என்பதால் மற்ற நிறுவனத்திற்கும் இதற்கும் தொடர்பில்லாமல் தனியாக இதைச் செய்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் டாடா அட்வாஸ்டு சிஸ்டம்ஸ் சமீபத்தில் இந்திய ராணுவத்திற்காக QRFV ரக வாகனங்களைத் தயாரித்து டெலிவரி செய்துள்ளது. இந்த QRFV (Quick Reaction Fighting Vehicle- Medium) என்பது ராணுவ வீரர்களை ஒரு இடத்திலிருந்த மற்றொரு இடத்திற்கு விரைவாக கூட்டிக்செல்ல பயன்படுத்தப்படும். வாகனம் ஆகும். இந்த வாகனத்தில் மக்கள் பயன்படுத்தும் வாகனத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட பல அம்சங்கள் இருக்கும்.

இந்த வாகனம் 4X4 தொழிற்நுட்பத்தில் இயங்கும். இந்த வாகனத்தில் ஒரே நேரத்தில் 12-14 ராணுவ வீரர்கள் பயணிக்க முடியும். இந்த வாகனத்தின்
இன்ஜின் 240 எச்பி திறன் கொண்டது. ராணுவ வீரர்கள் மட்டுமல்லாமல் 2 டன் வரையிலான எடை கொண்ட பொருட்களையும் இந்த வாகனத்தில் எடுத்துச் செல்ல முடியும். இது மட்டுமல்ல இந்த வாகனத்தின் மு்கிய அம்சமாக வாகனத்தின் மத்தியில் சிறிய வியூ பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாகப் பார்த்தால் வாகனத்தைச் சுற்றியுள்ள 360 டிகிரி கோணத்திலும் பார்க்க முடியும்.

இந்த வாகனத்தின் டயர்கள் ரன் ஃபிளாட் டயர்களாக அமைக்கப்பட்டுள்ளது. அதாவது வாகனம் சென்று கொண்டிருக்கும் போது டயர் பஞ்சர் ஆனாலும் வாகனம் தொடர்ந்து இயங்க முடியும் இது எல்லா விதமான ஆன் ரோடு, ஆஃப்ரோடு கண்டிஷன்களிலும் இயங்கும் திறன் கொண்டது. அதனால் எதிரிகள் இந்த வாகனத்தைத் தாக்கினாலும் எளிதில் இந்த வாகனத்தால் அந்த இடத்திலிருந்து தப்பி வர முடியும் அளவிற்கு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தை ராணுவத்தின் ஏதாவது இடத்தில் பிரச்சனை ஏற்பட்டால் அந்த இடத்திற்கு ராணுவத்தினரை விரைவாக அழைத்துச் செல்ல பயன்படுத்தப்படும். இது போக முக்கிய நபர்கள், விஐபிகள், நாட்டின் தலைவர்கள் பலர் அச்சுறுத்தல் நிறைந்த பகுதிக்கு ராணுவப்பாதுகாப்புடன் வரும் போது ராணுவத்தினர் எஸ்காட்டிற்காக இந்த வாகனத்தைப் பயன்படுத்தலாம்.

இந்த மேலே உள்ள வியூ பகுதியில் ஆயுதங்களைப் பொருத்தி எதிரிகளை தாக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனத்தை எதிரிகள் துப்பாக்கியால் தாக்கினால் எந்த பாதிப்பும் ஏற்படாது. வெடிகுண்டுகளைப் பொருத்தவரை இந்த வாகனம் லெவல் 4 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. அதாவது 14-21 கிலோ வரையிலா வெடி குண்டுகள் வெடித்தாலும் இந்த வாகனம் அசைந்து கொடுக்காது.

இந்த QRFV (Quick Reaction Fighting Vehicle- Medium) வாகனம் குறித்து மேலே நாம் சொல்லப்பட்ட தகவல்கள் எல்லாம் பொதுப்படையானது தான் இந்திய ராணுவம் இந்த வாகனத்தில் அவர்களின் தேவைக்கு ஏற்ப வசதிகள் மற்றும் அம்சங்களை டாடா நிறுவனத்திடம் பெற்றிருப்பார்கள். இது குறித்த தகவல்கள் பொதுவெளியில் கிடைக்காது. மிகவும் சென்செஷனான தகவல் என்பதால் இந்த தகவல்கள் எல்லாம் ராணுவத்திடம் மட்டும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வெளிப்புற தோன்றும் மற்றும் பொதுவெளியில் கிடைக்கும் தகவல்களை வைத்தே மேலே உள்ள வாகனத்தின் அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








