வழி தவறி வந்து சிக்கி கொண்ட சீனர்கள்... இந்திய ராணுவம் செஞ்ச காரியம் வேற லெவல்... என்னனு தெரியுமா?

எல்லையில் போர் பதற்றம் நிலவும் நிலையில், வழி தவறி வந்து சிக்கி கொண்ட சீனர்களை, இந்திய ராணுவம் மீட்டிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வழி தவறி வந்து சிக்கி கொண்ட சீனர்கள்... இந்திய ராணுவம் செஞ்ச காரியம் வேற லெவல்... என்னனு தெரியுமா?

இந்திய ராணுவம் வீரத்தில் எவ்வளவு தலைசிறந்தது? என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். நம் நாட்டு ராணுவத்தின் வீரம் பல சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. வீரத்திற்காக மட்டுமல்லாது, மனிதாபிமான நடவடிக்கைகளுக்காகவும் இந்திய ராணுவம் அறியப்படுகிறது. இந்திய ராணுவத்தின் மனிதாபிமான குணம் தற்போது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

வழி தவறி வந்து சிக்கி கொண்ட சீனர்கள்... இந்திய ராணுவம் செஞ்ச காரியம் வேற லெவல்... என்னனு தெரியுமா?

சீனாவை சேர்ந்த 3 பேர், சமீபத்தில் இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில், மிகவும் உயரமான இடத்தில் சிக்கி கொண்டனர். அவர்கள் பயணம் செய்த ஃபோக்ஸ்வேகன் டேரான் 330 டிஎஸ்ஐ (Volkswagen Tayron 330 TSI) கார், திடீரென பழுதானதால், அவர்கள் என்ன செய்வது? என தெரியாமல், மலை சிகரத்தில் தவித்து கொண்டிருந்தனர். அவர்கள் பயணம் செய்து வந்தது, எஸ்யூவி ரக கார் ஆகும்.

வழி தவறி வந்து சிக்கி கொண்ட சீனர்கள்... இந்திய ராணுவம் செஞ்ச காரியம் வேற லெவல்... என்னனு தெரியுமா?

வழி தவறி இந்திய எல்லைக்குள் அவர்கள் நுழைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் வந்த இடத்தில் அவர்களின் கார் திடீரென பழுதாகியுள்ளது. இதனால் 17,100 அடி உயரத்தில் அவர்கள் தவிக்க நேரிட்டது. அப்படிப்பட்ட இக்கட்டான ஒரு சூழலில், இந்திய ராணுவம் அவர்களுக்கு உதவியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வழி தவறி வந்து சிக்கி கொண்ட சீனர்கள்... இந்திய ராணுவம் செஞ்ச காரியம் வேற லெவல்... என்னனு தெரியுமா?

சீனர்கள் தவித்து கொண்டிருப்பது தெரிய வந்ததும், இந்திய ராணுவம் உடனடியாக களத்தில் இறங்கியது. மிக உயரமான இடம் என்பதால், மருத்துவ உதவி தேவை. அதனை சீனர்களுக்கு இந்திய ராணுவம் வழங்கியது. அத்துடன் அவர்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்கு திரும்புவதற்கும் இந்திய ராணுவம் உதவி செய்துள்ளது. அவர்கள் சீன எல்லைக்குள் திரும்பும் முன்பாக அவர்களுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளது.

வழி தவறி வந்து சிக்கி கொண்ட சீனர்கள்... இந்திய ராணுவம் செஞ்ச காரியம் வேற லெவல்... என்னனு தெரியுமா?

அத்துடன் அவர்கள் வந்த காரை பழுது நீக்குவதற்கும் இந்திய ராணுவ வீரர்கள் உதவி செய்துள்ளனர். மேலும் அவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகள் இடையே கடந்த ஒரு சில மாதங்களாகவே போர் பதற்றம் நிலவி வருகிறது. எல்லையில் நிலைமை மோசமாக இருக்கும் நிலையில், சீனர்களுக்கு இந்திய ராணுவம் செய்துள்ள உதவி மனிதாபிமானத்திற்கு எடுத்துக்காட்டு.

வழி தவறி வந்து சிக்கி கொண்ட சீனர்கள்... இந்திய ராணுவம் செஞ்ச காரியம் வேற லெவல்... என்னனு தெரியுமா?

இமயமலை தொடரின் உயரமான இடங்களில் சுற்றுலா பயணிகள் இப்படி சிக்கி கொள்வது இது முதல் முறை கிடையாது. இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நிகழக்கூடியதுதான். இமயமலை தொடரில் வானிலை மிக வேகமாக மாறக்கூடியது. அங்கு பார்வை திறன் மிகவும் குறைவாக இருக்கும். அத்துடன் செல்போன் சிக்னல் கிடைப்பதிலும் பல நேரங்களில் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும்.

வழி தவறி வந்து சிக்கி கொண்ட சீனர்கள்... இந்திய ராணுவம் செஞ்ச காரியம் வேற லெவல்... என்னனு தெரியுமா?

இதனால் வாகனங்களில் பயணம் செய்யக்கூடியவர்கள் வழி தவறி சென்று ஏதாவது ஒரு இடத்தில் ஆபத்தில் சிக்கி கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். மிகவும் உயரமான இடங்களில், ஒரு சில மணி நேரங்களுக்குள் உதவி கிடைக்கவில்லை என்றாலே, மரணம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

வழி தவறி வந்து சிக்கி கொண்ட சீனர்கள்... இந்திய ராணுவம் செஞ்ச காரியம் வேற லெவல்... என்னனு தெரியுமா?

பொதுவாக மலைகளில் பயணம் செய்வது என்பது சவாலான ஒரு காரியம். போதுமான அளவிற்கு தற்காப்பு நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் பயணம் செய்தால், அது ஆபத்தாக மாறி விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த விஷயத்தில் இந்திய ராணுவம் உடனடியாக தலையிட்டு மீட்பு பணிகளை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால், சீனர்களின் நிலைமை மோசமாகியிருக்கும்.

வழி தவறி வந்து சிக்கி கொண்ட சீனர்கள்... இந்திய ராணுவம் செஞ்ச காரியம் வேற லெவல்... என்னனு தெரியுமா?

அவர்களின் கார் திடீரென பழுதானதும், அவர்கள் சிக்கி கொண்டதற்கு ஒரு காரணமாக உள்ளது. எனவே மலை பயணங்களை மேற்கொள்ளும் முன் கார்களை உரிய முறையில் தயார் செய்து கொள்வது நல்லது. குறிப்பாக இமயமலை போன்ற மிக சவாலான இடங்களுக்கு பயணம் செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் பயணிப்பது பாதுகாப்பை தரும்.

வழி தவறி வந்து சிக்கி கொண்ட சீனர்கள்... இந்திய ராணுவம் செஞ்ச காரியம் வேற லெவல்... என்னனு தெரியுமா?

மலை பயணங்களுக்கு எடுத்து செல்வதற்கு முன்பு உங்கள் வாகனம் நல்ல நிலைமையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மிகவும் உயரமான இடங்களில் சரியான நேரத்தில் உதவி கிடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. எனவும் மிகவும் நல்ல நிலைமையில் உள்ள வாகனத்தில் பயணிப்பதுதான் பாதுகாப்பானது.

வழி தவறி வந்து சிக்கி கொண்ட சீனர்கள்... இந்திய ராணுவம் செஞ்ச காரியம் வேற லெவல்... என்னனு தெரியுமா?

மலை பயணங்களை மேற்கொள்ளும் முன்பு சரியான டயர்கள் வாகனங்களில் பொருத்தப்பட்டிருப்பதும் மிக அவசியம். அத்துடன் தேவையான கருவிகள் இருப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். பயணிகளுக்கு வாகனங்களை பற்றிய அடிப்படை அறிவு இருப்பதும் அவசியம். குறைந்தபட்சம் சிறிய பழுதுகளை சரி செய்வதற்காவது தெரிந்திருக்க வேண்டும்.

வழி தவறி வந்து சிக்கி கொண்ட சீனர்கள்... இந்திய ராணுவம் செஞ்ச காரியம் வேற லெவல்... என்னனு தெரியுமா?

மலை பயணங்களை மேற்கொள்ளும்போது மது அருந்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சமதளமான பகுதிகளை காட்டிலும் மலைப்பாதைகள் மிகவும் சவாலானவை. சாலைகள் மிக மோசமாக இருப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம். அப்படிப்பட்ட இடங்களில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால், உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indian Army Rescues 3 Stranded Chinese Citizens In Sikkim-Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X