தப்பி தவறிகூட இந்த வாகனத்த வாங்கிடாதீங்க.. லி. 1.6 கிமீ மட்டுமே மைலேஜை தரும்.. லாரி உருவத்தில் எம்பிவி-யா!!!

இந்திய ராணுவத்திடம் நாம் பார்த்திராத வாகனங்கள் பல பயன்பாட்டில் உள்ளன. அதில் ஒன்றே இந்த பதிவில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் வாகனம் ஆகும். விஎஃப்ஜே (VFJ) என்கிற பெயரில் இந்த டிரக் அறியப்படுகின்றது. வெயிக்கிள் ஃபேக்டரி ஜபல்புர் (Vehicle Factory Jabalpur) என்பதன் சுருக்கமே அது ஆகும். இதன் முழு பெயர் விஎஃப்ஜே எம்பிவி 6X6 (VFJ MPV 6X6) ஆகும். எம்பிவி என்ற உடன் நாம் பயன்படுத்தும் எம்பிவி ரக கார் என நினைத்துக் கொள்ள வேண்டாம்.

மைன் புரடெக்டட் வெயிக்கிள் (Mine Protected Vehicle) என்பதே அதன் பொருளாகும். அதாவது, வெடிகளில் இருந்து பாதுகாக்கும் வாகனம் என்பதே இதன் தமிழ் அர்த்தம். இந்த பிரமாண்ட தோற்றத்தைக் கொண்ட வாகனம் கடுமையான பாதை மற்றும் போர் சூழலைக் கையாள வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.

Indian army s vfj mpv 6x6 truck

குறிப்பாக, துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணிவெடி ஆபத்து இருக்கக் கூடிய பகுதிகளில் ஆபத்தின்றி வீரர்கள் பயணிக்க இந்த வாகனம் பயன்படுத்தப்படுகின்றது. காடு, மலை மற்றும் கரடு-முரடான பாதைகளைச் சமாளிக்கும் பொருட்டு இந்த வாகனத்தில் ஆறு வீல்களும், அவை அனைத்திற்கும் இயங்கும் திறனும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

களத்திற்கு வீரர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதே இந்த வாகனத்தின் முக்கிய பணியாகும். இந்த வாகனத்தின் மேலுள்ள உலோக பேனல்களும், ஜன்னல் கண்ணாடிகளும் குண்டு துளைக்க முடியாத புல்லட் ஃப்ரூப் திறன் கொண்டவை ஆகும். ஆகையால் பாதுகாப்பு தருவதில் இந்த வாகனம் மிக சிறந்ததாகக் காட்சியளிக்கின்றது.

இதுபோன்று அனைத்திலும் பாராட்டக் கூடியதாகக் காட்சியளிக்கும் இந்த வாகனம் ஒரு விஷயத்தில் மட்டும் மிகவும் மோசமானதாகக் காட்சியளிக்கின்றது. மைலேஜ் தருவதிலேயே அது மிகவும் மோசமானதாகக் காட்சியளிக்கின்றது. லிட்டர் ஒன்றிற்கு இந்த வாகனம் 1.6 கிமீ முதல் 2.5 கிமீ வரையில் மட்டுமே மைலேஜை தரும் என கூறப்படுகின்றது.

மலைப் பாங்கான சாலையில் பயணிக்கும் போது 1.6 கிமி மைலேஜையும், சாதாரண சாலையில் பயணிக்கும்போது 2.5 கிமீ மைலேஜையும் இது வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய வாகனத்தையே இந்திய ராணுவம் இப்போதும் பயன்படுத்தி வருகின்றது. இந்த வாகனத்தின் மொத்த எடை 21.2 டன் ஆகும்.

இதில் 1500 டன் வரையிலான எடையுள்ள பொருட்களை ஏற்றிக் கொள்ள முடியும். இந்த வசதியே அதை மிகவும் குறைவான மைலேஜ் தரக் கூடியதாக மாற்றி இருக்கின்றது. இந்த வாகனத்தில் ஒலி பெருக்கிகள், எதிரிகளை தேடுவதற்கு ஏதுவாக லைட்டுகள், வாகனங்களை இழுத்துச் செல்வதற்கான டோவிங் கொக்கிகள், ஆக்ஸ் லைட்டுகள், அதிக எண்ணிக்கையில் கண்ணாடிகள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஆகையால், வீரர்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்ல மட்டுமல்ல இன்னும் பல நிலைகளில் இந்த வாகனம் பயன்படும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த வாகனம் பஞ்சரான பின்னரும் இயங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் கதவுகளை அவ்வளவு சுலபமாக திறக்க முடியாது.

அதை திறக்க ஹைட்ராலிக் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கின்றது. மொத்தமாக 10 பேர் வரை மட்டுமே அமர்ந்து பயணிக்க முடியும். முன் பக்கத்தில் டிரைவருடன் சேர்த்து இன்னொருவரும் பயணிக்கலாம். ஆகையால், 10+2 இருக்கையே இந்த வாகனத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதில் வீரர்களின் வசதிக்காக 3 டன் ஏசி, ரீடிங் லைட், ட்யூப் லைட் மற்றும் ஆயுதங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான அறை உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

தொடர்ந்து, இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பின் பக்கத்தை பார்க்க உதவும் கேமிரா போன்ற அம்சங்களும் விஎஃப்ஜே எம்பிவி 6X6 டிரக்கில் வழங்கி இருக்கின்றனர். எஞ்சினை பொருத்த வரை இந்த வாகனத்தில் 7.9 லிட்டர் 6 சிலிண்டர்கள் கொண்ட டீசல் எஞ்சினே வழங்கப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 320 எச்பி மற்றும் 1100 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நம்மில் பலர் ரோல்ஸ் ராய்ஸ் போன்ற சொகுசு வாகனங்களே மிக மிக குறைவான மைலேஜை வழங்கும் என நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், ராணுவத்திலும் இதுமாதிரியான குறைவான மைலேஜை வழங்கக் கூடிய பாதுகாப்பு பயன்பாட்டு வாகனங்கள் உள்ளன. இதற்கு சான்றாகவே இந்த விஎஃப்ஜே எம்பிவி உள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, February 9, 2025, 5:00 [IST]
English summary
Indian armys vfj mpv 6x6 truck a detailed look at its 1 6 kpl mileage performance
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+