மொத்த இலண்டனையும் திரும்பி பார்க்க வைத்த இந்திய பணக்காரர்!! ரூ.10 கோடியில் கார் வாங்குவது என்றால் சும்மாவா...
இலண்டனில் வசிக்கும் இந்திய தொழிலதிபர் அடார் பூனாவல்லா புதியதாக விலையுயர்ந்த ஃபெராரி காரை வாங்கி உள்ளார். யார் இந்த அடார் பூனாவல்லா? இவர் வாங்கியிருப்பது என்ன மாதிரியான ஃபெராரி கார்? என்கிற கேள்விகளுக்கு பதில்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவை சேர்ந்த 'சேரும் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா' நிறுவனம் யூனிடெட் கிங்டமிலும் தனது வணிகத்தை கொண்டுள்ளது. சேரும் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குனராகவும், பூனாவல்லா ஃபின்கார்பின் தலைவராகவும் இருப்பவர் அடார் பூனாவல்லா. செல்வ செழிப்பான பூனாவல்லா குடும்பத்தின் இளம் தொழிலதிபராக அடார் பூனாவல்லா உள்ளார்.

இந்தியாவில் பிறந்திருப்பினும், தற்சமயம் மொத்தமாக இலண்டனில் அடார் பூனாவல்லா செட்டில் ஆகிவிட்டார். இலண்டனில் இவருக்கு சொந்தமாக சுமார் ரூ.1,440 கோடி மதிப்பில் ஆடம்பர வீடு உள்ளது. இந்த நிலையில், பிராண்ட்-நியூ ஃபெராரி புரோசாங் (Ferrari Purosangue) காரை அடார் பூனாவல்லா யுகே-இல் வாங்கி உள்ளார்.
கருப்பு நிறத்தில் ஃபெராரி புரோசாங் காரை அடார் பூனாவல்லா வாங்கியுள்ளார். அடாரின் புதிய ஃபெராரி காரின் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இலண்டனில் ஒரு கட்டத்திற்கு வெளியே கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. உலகளவில் பிரபலமான ஃபெராரி நிறுவனத்தின் முதல் எஸ்யூவி ரக கார் புரோசாங் ஆகும்.

அதுமட்டுமின்றி, தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற மிகவும் பிராக்டிக்கலான ஃபெராரி காராகவும் இது பார்க்கப்படுகிறது. சர்வதேச மார்க்கெட்டில் புரோசாங் காரை ஃபெராரி நிறுவனம் கடந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இந்த கார் கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.10.5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4-கதவுகளை கொண்ட இந்த மாடர்ன் ஃபெராரி காரை கருப்பு நிறத்தில் தொழிலதிபர் அடார் பூனாவல்லா வாங்கியுள்ளார் என கூறினோம் அல்லவா... இந்த கருப்பு நிறத்தின் பெயர் நீரோ டேடோனா ஆகும். அடார் பூனாவல்லா வாங்கியுள்ள ஃபெராரி புரோசாங் காரில் மஞ்சள் நிறத்தில் பிரேக் காலிபர்கள் இருப்பதை காணலாம். இதற்கேற்றவாறு, காரின் உட்பக்க கேபின் மஞ்சள் மற்றும் கருப்பு நிறங்களில் உள்ளது.

வழக்கமான கார்களை போல் இல்லாமல், இந்த ஃபெராரி காரில் பின் கதவுகளை எதிர்திசையில் இருந்து திறக்க வேண்டியுள்ளது. இதனால், காருக்கு உள்ளே கூடுதல் இடவசதி கிடைப்பது மட்டுமின்றி, காருக்குள் ஏறுவதும், இறங்குவதும் இந்த காரில் எளிதாக உள்ளது. மேலும், இந்த காரில் கதவுகளை எலக்ட்ரிக் மூலமாக திறந்து மூடலாம். புரோசாங் காரை நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே ஃபெராரி நிறுவனம் விற்பனை செய்கிறது.
ரூ.10.5 கோடியில் விலையை கொண்ட இந்த காரில் டர்போசார்ஜ்டு என்ஜின் ஆப்ஷனை கூட ஃபெராரி நிறுவனம் வழங்குவதில்லை என்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. ஃபெராரி புரோசாங் காரில் பொருத்தப்படுகின்ற 6.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 725 பிஎஸ் மற்றும் 716 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபெராரி பிராண்டில் நிறைய பணக்காரர்கள் வாங்க விரும்பும் காராக புரோசாங் மாறிவருகிறது. ஆதலால், இந்திய தொழிலதிபர் அடார் பூனாவல்லா இந்த காரை வாங்கியிருப்பதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. பிரபலமான ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை காட்டிலும் விலைமிக்கதாக இருப்பதால், அதற்கேற்ப பல்வேறு சிறப்பம்சங்களை இந்த ஃபெராரி கார் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications









