விலையுயர்ந்த பகானி காரில் லண்டன் சாலைகளை தெறிக்கவிட்டது ஒரு இந்தியரா! எல்லாரையும் வெறிக்க பாக்க வச்சுட்டாரு!

இந்தியாவின் பெரும் செல்வந்தர்களில் அடார் பூனவல்லா-வும் ஒருவர் ஆவார். சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா (Serum Institute of India) நிறுவனத்தின் சிஇஓ (CEO) இவரே ஆவார். இவரே லண்டன் நகர சாலைகளில் தீப்பெறி பறக்கச் செய்கின்ற வகையில் ஓர் காரில் வலம் வந்திருக்கின்றார். இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அடார் பூனவல்லா ஓட்டிச் சென்ற அந்த சிவப்பு நிற கார் பகானி ஹுய்ரா (Pagani Huayra) ஆகும். இது ஓர் ஹைபர் கார் (Hypercar) மாடல் ஆகும்.

நம்ப முடியாத அதிக ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்ட ஓர் வாகனமே இதுவாகும். இதுமட்டுமில்லைங்க இதன் விலையும் நம்ப முடியாத அளவில் மிக மிக உயர்ந்ததாகவே இருக்கின்றது. பகானி ஹுய்ரா கார் மாடலின் ஒரே ஒரு யூனிட் மட்டுமே இந்திய ரூபாய் மதிப்பில் 26 கோடிக்கும் அதிகமான விலையிலேயே விற்கப்படுகின்றது.

Indian billionaire adar poonawalla drives pagani huayra in london

இத்தகைய மிக மிக விலை உயர்ந்த காரிலேயே லண்டன் நகர சாலையில் வலம் வந்திருக்கின்றார் இந்திய தொழிலதிபர் அடார் பூனவல்லா. இது ஓர் அரிய வகை வாகனம் என்பதால் அந்த சாலையில் சென்றுக் கொண்டிருந்த லண்டன் வாசிகள் பலரின் கவனத்தை கவர்ந்தது. பகானி ஹுய்ரா ஹைபர் காரில் 6.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி12 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இது ஓர் டைரக்ட் ஃப்யூவல் இன்ஜெக்சன் வசதிக் கொண்ட மோட்டார் ஆகும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 730 எச்பி மற்றும் 1001 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். 7 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸே இந்த மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 360 கிமீ ஆகும்.

மேலும், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை இந்த காருக்கு வெறும் 3 செகண்டுகளே போதுமானதாக உள்ளது. இதுதவிர, மேலும் சில செகண்டுகள் கொடுத்தால் அதன் டாப் ஸ்பீடான 360 கிமீ வேகத்தையும் அது எட்டிவிடும். இத்தகைய காரிலேயே லண்டன் சாலைகளில் அடார் பூனவல்லா வலம் வந்திருக்கின்றார்.

ஆனால், இந்த கார் அடார் பூனவல்லாவிற்கு சொந்தமானதுதானா என்பது தெரியவில்லை. சில தகவல்கள் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரான பவுல் பெய்லி என்பவருக்கு சொந்தமானதே இந்த வாகனம் என கூறுகின்றன. ஆனால், இந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதேவேளையில், லண்டனில் மிக அதிக அளவில் ஆடம்பர மற்றும் ஹைப்பர் வகை கார்களை பயன்படுத்தி வரும் நபராக பவுல் பெய்லி காட்சியளிக்கின்றார்.

அவரிடத்தில் ஃபெர்ராரி லாஃபெர்ராரி (Ferrari Laferrari), மெக்லாரன் பி1 (McLaren P1) மற்றும் போர்ஷே 918 ஸ்பைடர் (Porsche 918 Spyder) உட்பட பல அரிய வகை கார்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், இந்த கார் மாடல்கள் சிலவற்றில் இந்திய தொழிலதிபர் அடார் பூனவல்லா கடந்த காலங்களில் பலமுறை காட்சியளிக்கின்றார்.

இதைவைத்தே தற்போது பூனவல்லா பயன்படுத்திய பகானி காரும் பவுல் பெய்லிக்கு சொந்தமானது என கூறப்படுகின்றது. அதேநேரத்தில் இந்தியாவில் மிகப் பெரிய ஆடம்பர மற்றும் சூப்பர் கார்களின் கலெக்சனைக் கொண்டவராக அடார் பூனவல்லா காட்சியளிக்கின்றார். அவரிடத்தில் ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் (Rolls Royce Phantom Series VIII) கார் மாடல்கள் மட்டுமே இரண்டு இருக்கின்றன.

அதுதவிர, பென்ட்லீ பென்டேகா அசூரே (Bentley Bentayga Azure), பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி (Bentley Continental GT), மெக்லாரன் 720எஸ் (McLaren 720S), ஃபெர்ராரி 488 பிஸ்தா (Ferrari 488 Pista), எஃப் 430 (F430) மற்றும் புரோசாங் (Purosangue) உள்ளிட்ட கார் மாடல்களும் பயன்பாட்டில் உள்ளன. இதுமட்டுமில்லைங்க பேட்மேன் வாகனத்தையும் இவர் வைத்திருக்கின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் அடார் பூனவல்லாவும் ஒருவர் ஆவார். இவர் வெளிநாட்டில் தனக்கென ஓர் மிகப் பெரிய கார் கலெக்சனை வைத்திருந்தாலும் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஏனெனில் அந்த அளவிற்கு செல்வம் கொழித்த நபராக அவர் காட்சியளிக்கின்றார். மேலும், மிகப் பெரிய கார் காதலாகவும் அவர் காட்சியளிக்கின்றார்.

More from DriveSpark

Article Published On: Sunday, October 27, 2024, 21:58 [IST]
English summary
Indian billionaire adar poonawalla of serum institute drives a pagani huayra hypercar in london
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+