பிசியான சாலையில் சாதாரணமாக ஸ்கூட்டரில் வந்தவர் இவ்வளவு பெரிய பணக்காரரா? யாருக்கும் அடையாளம் தெரியல!!

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் புதிய புரட்சியை செய்துக் கொண்டிருக்கின்றன. பெரிய, பெரிய செல்வந்தர்கள் கூட ஆர்வமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கி வருகின்றனர். இந்த வகையில், இந்தியாவில் செல்வந்தர் ஒருவர் ஏத்தர் எனர்ஜியின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஆர்வமாக வாங்கி பயன்படுத்தி உள்ளார். மேலும், இதுகுறித்த தனது விமர்சனத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். யார் அந்த தொழிலதிபர் என்பதையும், அப்படி எந்த ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அவர் ஓட்டி பார்த்துள்ளார் என்பதையும், அவரது விமர்சனத்தையும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த சில வருடங்களில் இந்தியாவில் பல்வேறு எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனங்கள் நுழைந்துள்ளன. அதேநேரம், இந்தியாவிலேயே தோன்றிய எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனங்களின் தயாரிப்புகளும் சிறப்பான வரவேற்பை பெற்று வருகின்றன.

indian billionaire buys ather scooter

அந்த வகையில் கணிசமான வாடிக்கையாளர்களை பெற்றுவரும் நிறுவனம் ஏத்தர் எனர்ஜி ஆகும். பெங்களூரை சேர்ந்த ஏத்தரின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வேகமாக இயங்கக்கூடியவைகளாக உள்ளதால், பெரிய பெரிய தொழிலதிபர்கள் கூட அவற்றை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்த வகையில், செரோதா நிறுவனத்தின் துணை நிறுவனர் நிகில் கமத் பிராண்ட் நியூ ஏத்தர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கியுள்ளார்.

மேலும், அதனை பிசியான சாலையில் ஓட்டும் படங்களையும் நிகில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலமாக, ஏத்தர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டியதில் இருந்து அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார் என்பதை அறிய முடிகிறது. எந்த அளவிற்கு மகிழ்ச்சி அடைந்துள்ளார் என்றால், ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக நிகில் தெரிவித்துள்ளார்.

indian billionaire buys ather scooter

இதுகுறித்த அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், "ஏத்தர் எனர்ஜி உடனான எனது கதை கடந்த ஆண்டில் இருந்து தொடங்கியது. சுவாரஸ்யமான நுண்ணறிவுகளை கண்டேன். நம் ஒவ்வொருவருக்கும் பிளஸ் மற்றும் மைனஸ்கள் உள்ளன. ஏத்தரின் மார்க்கெட்டிங் சரியில்லை (மன்னிக்கவும் தருண்), ஆனால் அது ஒரு சிறந்த தயாரிப்பு. பின் குறிப்பு: நான் இந்த ஸ்கூட்டரை எம்.ஆர்.பி-இல் வாங்கினேன். தருண் (மேத்தா) எனக்கு தள்ளுபடி கொடுக்கவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவின் மூலம், செரோதா நிறுவனத்தின் துணை நிறுவனர் நிகில் கமத், ஏத்தர் எனர்ஜி உடனும், அதன் நிர்வாகிகளுடன் நெருங்கிய பிணைப்பில் இருப்பதை அறிய முடிகிறது. இருப்பினும், எம்.ஆர்.பி-இல் அதாவது பொது மக்களை போன்று ஷோரூமில் இருந்து பொது விலையில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இவர் வாங்கியுள்ளார்.

indian billionaire buys ather scooter

இந்த இன்ஸ்டாகிராம் பதிவில், எலக்ட்ரிக் வாகன துறையில் இந்தியா கடந்து வந்துள்ள பாதையையும், இதற்காக மத்திய அரசாங்கம் கொண்டுவந்துள்ள ஃபேம்-2 மானிய திட்டத்தை பற்றியும் நிகில் கமத் குறிப்பிட்டுள்ளார். பெங்களூரை சேர்ந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம், இந்திய சூழலுக்கு ஏற்ப தயாரிப்புகளை உருவாக்குகிறது. இதற்காக பல்வேறு கட்ட ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுப்பிடிப்புகளை ஏத்தர் எனர்ஜி மேற்கொள்கிறது.

ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஒன்றும் விலை குறைவானவையோ அல்லது அதிக ரேஞ்சை வழங்கக்கூடியவையோ அல்ல. ஆனால், மிகவும் நேர்த்தியாக, வலிமையானவையாக ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உருவாக்கப்படுகின்றன. பெங்களூர் நிறுவனம் என்பதால், ஆரம்பத்தில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பெங்களூரில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. பெங்களூரில் ஓட்டிப் பார்த்தவர்களிடம் இருந்து கிடைத்த கருத்துகளை கொண்டு ஸ்கூட்டர்களை ஏத்தர் எனர்ஜி மேம்படுத்தியது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவின் பெரிய, பெரிய தொழிலதிபர்கள் கூட குறிப்பாக ஏத்தர் எனர்ஜியின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விரும்பி வாங்கி வருகின்றனர். அந்த அளவிற்கு, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஏத்தர் எனர்ஜியின் தயாரிப்புகள் பிரீமியம் தரத்திலானவையாக விளங்குகின்றன. ஆதலால், ஏத்தர் ஸ்கூட்டரை செரோதா நிறுவனர் வாங்கியிருப்பதில் எந்த ஆச்சிரியமும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 9, 2024, 18:01 [IST]
English summary
Indian billionaire buys ather electric scooter rides on busy road
மேலும்... #ather energy #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X