ரூ.4 கோடியில் மஸராட்டி காரை வாங்குவது ஒன்றும் இவருக்கு பெரிய விஷயமல்ல!! மும்பை சாலையை அலறவிட்ட கோடீஸ்வரர்!

சுமார் ரூ.4 கோடிக்கு அதிகமான விலை கொண்ட மஸாராட்டி காரை இந்தியாவின் பெரும் பணக்காரர்களுள் ஒருவர் வாங்கியுள்ளார். யார் அந்த செல்வந்தர்? அவர் வாங்கியுள்ள மஸாராட்டி காரில் ரூ.4 கோடி மதிப்பிற்கு அப்படி என்ன சிறப்பம்சங்கள் உள்ளன? என்பது குறித்த விரிவான விபரங்களை இனி பார்க்கலாம்.

அமெரிக்கா, சீனா உள்ளிட்டவற்றுடன் ஒப்பிடுகையில் நம் இந்தியா பொருளாதாரத்தில் சற்று பின்தங்கிய நாடு தான். இருந்தாலும் நம் நாட்டிலும் செல்வந்தர்கள் நிறைய பேர் வசிக்கின்றனர். குறிப்பாக, கௌதம் அதானி உலகளவில் பெரும் பணக்காரர்கள் வரிசையில் ஒரு சமயத்தில் 2வது இடத்தை கூட பிடித்திருந்தார்.

indian billionaire buys maserati mc20

கௌதம் அதானி போன்று இந்திய செல்வந்தர்களின் பெயர்களை சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வாறான செல்வந்தர்களுள் ஒருவர்தான் ரேமண்ட் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் கௌதம் சிங்ஹானியா. பணம் அதிகம் இருப்பதால், பெரும்பாலான செல்வந்தர்கள் சொகுசு கார்களையும், மோட்டார்சைக்கிள்களையும் வாங்கி குவிப்பதை விரும்பக்கூடியவர்கள். அத்தகையவர்கள் பலரை பற்றி இதற்குமுன் நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம்.

அந்த வரிசையில், ரேமண்ட் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் கௌதம் சிங்ஹானியாவும் ஆட்டோமொபைல் வாகனங்கள் மீது மிகுந்த ஈடுப்பாடு கொண்டவர். குறிப்பாக, ஃபெராரி போன்ற செயல்திறன்மிக்க ஸ்போர்ட்ஸ் கார்களை வாங்கி தனது கலெக்‌ஷனில் சேர்ப்பதில் கௌதம் சிங்ஹானியா விரும்பக்கூடியவர். சமீபத்தில் கூட ரூ.6.37 கோடி மதிப்பிலான ஃபெராரி 296 ஜிடிபி காரை இவர் வாங்கி இருந்தார்.

indian billionaire buys maserati mc20

இந்த நிலையில், கௌதம் சிங்ஹானியாவின் கார்கள் கலெக்‌ஷனில் புதியதாக மஸராட்டி எம்சி20 கூபே கார் இணைந்துள்ளது. இதுகுறித்து சிஎஸ்12 விலாக்ஸ் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை செய்திக்கு இறுதியாக காணலாம். மும்பையின் பிரபலமான சாலை ஒன்றில், சிங்ஹானியாவின் மஸாராட்டி எம்சி20 கார் சென்ற போது இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் சிங்ஹானியாவின் எம்சி20 காருக்கு பாதுகாப்பாக பாதுகாவலர்கள் வெள்ளை நிற டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் செல்வதையும் வீடியோவில் காணலாம். மேலும் வீடியோவில், சிக்னலில் நிற்கும் சிங்ஹானியாவின் எம்சி20 கார் சாலையின் ஓரத்தில் மக்கள் தங்களது மொபைல் போனில் காரை காட்சிப்படுத்துவதை அறிந்து, தான் இயங்க வேண்டிய பாதையில் இருந்து விலகி வளைந்து மக்களுக்கு நெருக்கமாக செல்கிறது.

indian billionaire buys maserati mc20

மஸாராட்டி எம்சி20 சூப்பர்கார் கடந்த 2020ஆம் ஆண்டில் உலகளவில் வெளீயீடு செய்யப்பட்டது. அதன்பின், கடந்த 2022ஆம் ஆண்டில் கூபே மற்றும் சிலோ (கன்வெர்டபிள்) என இரு விதமான பாடி ஸ்டைல்களில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப் பட்டது. ஆனால் காரை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு காரை டெலிவிரி செய்யும் பணிகள் இந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில்தான் ஆரம்பமாகின.

மஸராட்டி எம்சி20 காரில் 3.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு நிடுனோ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 630 பிஎஸ் மற்றும் 730 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்சமயம் இந்த மஸராட்டி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.7 கோடியாக உள்ளது. ஆனால் மற்ற கட்டணங்களை சேர்த்து ஆன்-ரோடு விலை நிச்சயமாக ரூ.4 கோடியை தாண்டிவிடும்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்தியாவில் மஸராட்டி நிறுவனத்திற்கு ஒரேயொரு டீலர்ஷிப் மையம் மும்பையில் உள்ளது. அங்கிருந்துதான் கௌதம் சிங்ஹானியாவும் மஸராட்டி எம்சி20 காரை டெலிவிரி எடுத்திருக்க முடியும். ஏற்கனவே, மெக்லாரன் 720எஸ் மற்றும் மெக்லாரன் 570எஸ் போன்ற விலையுயர்ந்த கார்களை வைத்திருப்பவருக்கு ரூ.4 கோடியில் மஸராட்டி எம்சி20 காரை வாங்குவது ஒன்றும் பெரிய விஷயமல்ல.

More from DriveSpark

Article Published On: Thursday, July 20, 2023, 15:15 [IST]
English summary
Indian billionaire buys maserati mc20 worth rs 4 crore
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X