மும்பை சேரியில் வாழ்ந்து வந்தாரு.. இப்ப 6 ரோல்ஸ் ராய்ஸ் காரு வச்சிருக்காரு.. துபாய்ல 40,000 சதுர அடில வீடுவேற!

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர் ரிஸ்வான் சஜன். உலகம் அறிந்த இந்தியாவைச் சேர்ந்த பெரும் பணக்காரர்களில் இவரும் ஒருவர் ஆவார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கும் இவர், ஒரு காலத்தில் மும்பையில் உள்ள குடிசைப் பகுதியில் வசித்து வந்திருக்கின்றார் என்பது இப்போதே தெரிய வந்திருக்கின்றது. சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியின் வாயிலாகவே இந்த தகவல் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது. ரிஸ்வான் சஜன், தற்போது இந்தியாவில் இல்லை. துபாயிலேயே வசித்து வருகின்றார்.

அங்கேயே தனக்கென ஓர் மாபெரும் சாம்ராஜ்யத்தை அவர் உருவாக்கி இருக்கின்றார். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் 1990 ஆம் ஆண்டிலேயே துபாய்க்கு புறப்பட்டு சென்றிருக்கின்றார். எதிர்பார்த்த வாழ்க்கை கிடைக்காத காரணத்தினாலும், ஏழ்மைச் சூழலை மாற்ற வேண்டும் என்கிற நோக்கிலேயே அவர் துபாய் புறப்பட்டுச் சென்றிருக்கின்றார்.

Indian billionaire s inspiring journey

அங்கு, முதலில் ஓர் கட்டுமான நிறுவனத்தில் சேல்ஸ் மேனஜராக பணியாற்றி வந்திருக்கின்றார். கடினமான உழைப்புகளுக்கு பின்னர் சொந்தமாக ஓர் பிசினஸ் தொடங்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு வந்திருக்கின்றது. இதன்படி தொடங்கப்பட்டதே தனுப் குரூப் (Danube Group) ஆகும். இது ஓர் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனமே அவரை துபாயில் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக மாற்றியிருக்கின்றது. குறிப்பாக, ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) கார்களையே ஆறு யூனிட்டுகள் வரை வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு அவர் அங்கு வளர்ச்சி அடைந்து உள்ளார். ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் புதிய வெர்ஷன், கோஸ்ட் சீரிஸ் II, பேந்தம், கல்லினன் பிளாக் பேட்ஜ் என பலவற்றை அவர் பயன்படுத்தி வருகின்றார்.

இந்த கார் மாடல் மட்டுமில்லைங்க இன்னும் பல ஆடம்பர கார்களை அவர் தனக்கு சொந்தமாக வைத்து உள்ளார். மேலும், அவை அனைத்தையும் தன்னுடைய சொந்த முயற்சியாலும், திறமையாலும் தான் சம்பாதித்தாக அவர் தெரிவித்திருக்கின்றார். மேலும், நாம் செல்வந்தராக மாற பிறப்பால் நாம் பெரும் பணக்காரராக இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை என்றும் அவர் இந்த பேட்டியின் வாயிலாக தெரிவித்திருக்கின்றார்.

குறிப்பாக, நல்ல திறமை இருந்தால் யாரும் வேண்டுமானாலும் உலகம் அறியும் செல்வந்தராக மாற முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். துபாயில் இப்போது அவருக்கு அதிக எண்ணிக்கையில் கார்கள் மட்டுமல்ல மிகப் பெரிய சொகுசு வீடும் உள்ளது. அது சுமார் 40 ஆயிரம் சதுர அடி அளவில் அமைந்திருக்கின்றது. இந்த பிரமாண்ட வீட்டையே முழுக்க முழுக்க சொகுசு கார்களால் அவர் அலங்கரித்து வைத்திருக்கின்றார்.

குறிப்பாக, ஆறு ரோல்ஸ் ராய்ஸ் கார்களுடன் சேர்த்து அவர் ஃபெர்ராரி கலிஃபோர்னியா டி (Ferrari California T), லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus), பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி (Bentley Continental GT), மஸ்லேன் (Mulsanne), ஃப்ளையிங் ஸ்பர் (Flying Spur) உள்ளிட்ட கார் மாடல்களையும் அவர் வைத்திருக்கின்றார்.

இதுதவிர, கடில்லாக் எஸ்கலேட் (Cadillac Escalade) மற்றும் மேபேக் எஸ்500 (Maybach S500) ஆகிய கார் மாடல்களையும் அவர் பயன்படுத்தி வருகின்றார். இதுதவிர இன்னும் பல சொகுசு கார் மாடல்கள் அவரிடத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இவருடைய இந்த ஆடம்பர வாழ்க்கையை வைத்து பார்க்கையில் இவர் ஒரு காலத்தில் மும்பை குடிசையிருப்பு பகுதியில் வசித்தவர்தானா என்கிற சந்தேகமே நமக்கு எழும்பி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவை விட்டு வெளியேறி, வெளிநாடுகளில் தொழில் தொடங்கி பெரும் பணக்காரர்கள் பலர் இருக்கின்றனர். அந்த மாதிரியானவர்களில் ஒருவரே ரிஸ்வான் சஜன் ஆவார். இவர் வைத்திருக்கும் பெரும்பாலான ஆடம்பர கார்கள் '7869' என்கிற பதிவெண்ணையேக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான ஃபேன்சியான நம்பர் பிளேட்டை வாங்க துபாயில் சொகுசு காருக்கு இணையான தொகையை செலவிட வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 19, 2024, 12:08 [IST]
English summary
Indian billionaire inspiring journey from mumbai slum to owning six rolls royce cars
மேலும்... #luxury cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+