Just In
- 46 min ago
ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...
- 8 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 9 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 10 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
Don't Miss!
- News
வரலாற்று நிகழ்வு.. இஸ்ரேல் நாட்டிற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் தூதர் பொறுப்பேற்பு
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஐதராபாத் நபர் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை இதுதான்... எவ்வளவுனு கேட்டதும் தூக்கி வாரி போட்றுச்சு...
ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் மிகவும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஐதராபாத் நகரை சேர்ந்த தொழில் அதிபர்களில் ஒருவர் நசீர் கான். இவரிடம் ஏராளமான சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்கள் இருக்கின்றன. இந்த வரிசையில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி காரின் பிளாக் பேட்ஜ் வெர்ஷனும் சமீபத்தில் இணைந்துள்ளது. ஆம், மிகவும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் (Rolls Royce Cullinan Black Badge) காரை நசீர் கான் புதிதாக வாங்கியுள்ளார்.

தற்போதைய நிலையில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வரும் ஒரே ஒரு எஸ்யூவி ரக கார் கல்லினன் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் விலை 6.95 கோடி ரூபாயில் (எக்ஸ் ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. ஆனால் கல்லினன் பிளாக் பேட்ஜ் வெர்ஷனின் விலை 8.20 கோடி ரூபாயில் (எக்ஸ் ஷோரூம்) இருந்து தொடங்குகிறது.

இவை எக்ஸ் ஷோரூம் விலை என்பதுடன், கஸ்டமைசேஷன் செய்வதற்கு முந்தைய விலை என்பதும் குறிப்பிடத்தக்கது. காரை வாங்கும் நபர்கள் கஸ்டமைசேஷன் தேர்வுகளை விரும்பும்பட்சத்தில், விலை இன்னும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கல்லினன் மட்டுமல்லாது, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் மற்ற மாடல்களான கோஸ்ட், டான் மற்றும் வ்ரெயித் ஆகியவற்றிலும் பிளாக் பேட்ஜ் வெர்ஷன்கள் உள்ளன.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் வெர்ஷனில், 6.75 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 600 பிஎச்பி பவரையும், 900 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடியது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலமாக இன்ஜின் சக்தியானது நான்கு சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது.

இந்தியாவை சேர்ந்த பிரபலங்கள் பலரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் சொகுசு எஸ்யூவி கார் இருக்கிறது. இதில், முகேஷ் அம்பானி மிகவும் முக்கியமானவர். இந்தியாவிலேயே முகேஷ் அம்பானி குடும்பத்தினர்தான் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி காரை முதன் முதலில் டெலிவரி பெற்றவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் எஸ்யூவியுடன் முகேஷ் அம்பானி குடும்பத்தினரை ஒரு சில முறை பார்க்க முடிந்துள்ளது. முகேஷ் அம்பானி குடும்பத்தினர் தவிர பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி காரை வைத்துள்ளார். மிகவும் விலை உயர்ந்த கார் என்பதால், ஒரு சில பிரபலங்களிடம் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி உள்ளது.

இதற்கிடையே நாம் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், நசீர் கானிடம் இன்னும் ஏராளமான விலை உயர்ந்த கார்கள் இருக்கின்றன. இதில், ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் (Ferrari 812 Superfast) முக்கியமானது. பெயருக்கு ஏற்றபடி சந்தையில் கிடைக்க கூடிய மிகவும் வேகமான கார்களில் ஒன்றாக ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் திகழ்கிறது.

நசீர் கானின் ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் கார் சிகப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இதன் நடுவே கருப்பு நிற பட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் 6.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் வி12 இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 788 பிஎச்பி பவரையும், 718 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கி சீறிப்பாய்ந்து செல்லக்கூடியது.