பலரின் டிரீம் காரை லிவிங் ஹாலில் ஷோ கேஸுக்காக நிறுத்திய இந்தியர்.. இது யாரோட வீடு தெரியுமா? அம்பானி வீடு இல்ல!
பணக்காரர்களின் வீடுகளில் விலை உயர்ந்த கார்கள் இருப்பது வழக்கமான ஒன்று. ஆனால், இங்கு ஒரு பணக்காரர் வீட்டுக்குள் காரை நிறுத்தி வைத்திருக்கின்றார். அதுவும் அந்த கார் பலரின் கனவு வாகனமான ஃபெர்ராரி எஸ்எஃப் 90 ஸ்ட்ரேடேல் (Ferrari SF90 Stradale) ஆகும். இது ஓர் சூப்பர் கார் மாடல் ஆகும். பலருக்கு இந்த பெயர் புதிதாக இருக்கலாம். ஆனால், உலக அளவில் உள்ள பெரும் செல்வந்தர்களின் வாய் தினமும் அசைப்போடும் கார் மாடலின் பெயராக இது உள்ளது.
இத்தகைய காரையே இந்திய பணக்காரர் ஒருவர் தன்னுடைய லிவிங் ஹாலை அழகுப்படுத்தும் விதமாக அங்கு நிறுத்தி வைத்திருக்கின்றார். அதாவது, லிவிங் ஹாலை அழகாகக் காண்பிக்க ஓவியங்கள், சிலைகளை நிறுத்தி வைப்பதை போல இந்த காரை இந்திய பணக்காரர் ஹாலில் நிறுத்தி வைத்திருக்கின்றார்.

இந்தியாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவராக அறியப்படும் ஹர்ஷ் கோடக், இவரே ஆடம்பர காரை ஹாலை அலங்கரிக்கும் விதமாக பயன்படுத்தியவர் என்பது தெரிய வந்திருக்கின்றது. தன்னுடைய வீட்டை, மிக முக்கியமாக லிவிங் ஹாலை தனித்துவமானதாகவும், சுவாரஷ்யமானதாகவும் மாற்றும் நோக்கிலேயே இத்தகைய வேலையை அவர் பார்த்திருக்கின்றார்.
இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 9 கோடி ஆகும். இத்தகைய விலையைக் கொண்டிருப்பதனாலேயே இந்த கார் சில பெரும் செல்வந்தர்களுக்கும் எட்டாக் கனியாக உள்ளது. மேலும், இத்தகைய அதிக விலையே இந்த காரை சாலையில் பார்ப்பதையும் மிகவும் அரிதானதாக மாற்றி இருக்கின்றது.
குறிப்பாக, இந்தியாவின் சாலைகளில் இந்த காரை பார்ப்பதும் மிகவும் அரிதான ஒன்று. அதேவேளையில், குறிப்பிட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் இதனைக் காண முடியும். இந்த காரை கூடுதல் அலங்கரிப்பு செய்யாமல் வாங்கினாலேயே அதன் விலை ரூ. 7.50 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
உலக அளவில் விற்பனைச் செய்வதற்கே இந்த காரை மொத்தமாக 2 ஆயிரம் யூனிட்டுகளை மட்டுமே நிறுவனம் தயார் செய்தது என்பது கவனிக்கத்தகுந்தது. ஸ்குடேரியா ஃபெர்ராரியின் 90 ஆம் ஆண்டை அனுசரிக்கும் விதமாகவே இந்த காருக்கு எஸ்எஃப் 90 ஸ்ட்ரேடேல் எனும் பெயரைச் சூட்டி இருக்கின்றனர்.
இந்த காரில் பிளக்-இன் ஹைபிரிட் (Plug-in Hybrid) வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இதுவும், ட்வின் டர்போசார்ஜட் வி8 எஞ்சினும் இணைந்து 1,000 பிஎச்பி ஆற்றலை உருவாக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 342 கிமீ ஆகும்.
அதேவேளையில் இந்த காருக்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட வெறும் 2.5 செகண்டுகளே போதுமானது. இத்தகைய திறனே கார் ஆர்வலர்கள் பலரின் கனவு வாகனமாக இதனை மாற்றி இருக்கின்றது. இதையே லிவிங் ஹாலை அலங்கரிக்க இந்திய பணக்காரர் நிறுத்தி வைத்திருக்கின்றார். இது பலரை கவலையும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்று விலை உயர்ந்த ஆடம்பர கார் ஷோ கேஸுக்காக வீட்டில் நிறுத்தப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதுபோன்று சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. சிலர் தங்களின் மனம் கவர்ந்த வாகனங்களை வீட்டின் மொட்டை மாடியில், பால்கனியில் நிறுத்துவதைக் கடந்த காலத்தில் நாம் பார்த்திருக்கின்றோம் என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








