துபாயில், ரூ.60 கோடி கொடுத்து காருக்கு பேன்ஸி நம்பர் வாங்கிய இந்திய தொழிலதிபர்!

பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கவுரவத்த்திற்காக பல லட்சங்களை கொடுத்து பேன்ஸி நம்பர் பிளேட் வாங்குவதை பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறோம். 50,000 ரூபாய் மதிப்புடைய ஸ்கூட்டருக்கு பல லட்சங்களை கொட்டி நம்பர் பிளேட் வாங்கிய கதைகள் இங்குண்டு.

ஆனால், துபாயில் வசிக்கும் இந்திய தொழிலதிபர் ஒருவர் தனது காருக்கு ரூ.60 கோடி மதிப்பில் காருக்கு பேன்ஸி நம்பரை வாங்கி அதிர வைத்திருக்கிறார். இந்த விஷயம் எம்மை மட்டுமல்ல, அந்த நம்பர் பிளேட் ஏலத்தில் கலந்து கொண்ட பெரும் பணக்கார அரபு ஷேக்குகளேயே ஷேக் ஆக செய்திருக்கிறது. அசால்ட்டாக 60 கோடி ரூபாய் மதிப்பில் பேன்ஸி நம்பர் வாங்கிய அந்த இந்திய தொழிலதிபர் மற்றும் பேன்ஸி நம்பர் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

துபாயில், ரூ.60 கோடி கொடுத்து நம்பர் பிளேட் வாங்கிய இந்தியர்! ப

கடந்த சனிக்கிழமை துபாயிலுள்ள JW மேரியாட் நட்சத்திர ஓட்டலில் வாகனங்களுக்கான பேன்ஸி நம்பர் பிளேட் ஏலத்திற்கு போக்குவரத்து துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேன்ஸி நம்பர் பிளேட்டுகளை ஏலத்தில் எடுக்க 300க்கும் மேற்பட்ட பெரும் பணக்காரர்கள் அங்கு குழுமியிருந்தனர்.

துபாயில், ரூ.60 கோடி கொடுத்து நம்பர் பிளேட் வாங்கிய இந்தியர்! ப

அந்த அரங்கத்தில் இருந்த பிரம்மாண்ட திரையில் பேன்ஸி நம்பர்கள் காண்பிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. பல பேன்ஸி நம்பர் பிளேட்டுகள் ஏலம் விடப்பட்டன.

துபாயில், ரூ.60 கோடி கொடுத்து நம்பர் பிளேட் வாங்கிய இந்தியர்! ப

அதில், அதிகபட்ச விலை கொண்ட D 5 என்ற பேன்ஸி நம்பர் பிளேட்டும் ஏலத்திற்கு வந்தது. அதற்கு அடிப்படை விலையாக 20 மில்லியன் திராம்ஸ் நிர்ணயிக்கப்பட்டது. ஐக்கிய அரபு நாடுகளில் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க வண்ண நம்பர் பிளேட்டுகளை தங்களது செல்வ வளம் மற்றும் அந்தஸ்தின் அடையாளமாக கருதுகின்றனர்.

துபாயில், ரூ.60 கோடி கொடுத்து நம்பர் பிளேட் வாங்கிய இந்தியர்! ப

இதனால், அந்த D 5 நம்பர் பிளேட்டை ஏலத்தில் எடுக்க பெரும் போட்டி நிலவியது. பலர் ஒவ்வொரு விலையாக சொல்லி வைத்தனர். அப்போது, அந்த ஏலத்தில் பங்கு கொண்ட துபாய் வாழ் இந்திய தொழிலதிபரான பல்விந்தர் சஹானி, அந்த நம்பர் பிளேட்டை 33 மில்லியன் திராம்ஸ் விலைக்கு கேட்டு அரங்கத்தை அதிர வைத்தார்.

துபாயில், ரூ.60 கோடி கொடுத்து நம்பர் பிளேட் வாங்கிய இந்தியர்! ப

அங்கு குழுமியிருந்த அரபு ஷேக்குகளே இந்த விலையை கேட்டு அதிர்ந்தனர். இந்த விலையை விட அதிகம் கொடுக்க யாரும் தயாராக இல்லை. எனவே, அசால்ட்டாக அந்த விருப்பமான பேன்ஸி நம்பரை ஏலத்தில் எடுத்தார் சஹானி.

துபாயில், ரூ.60 கோடி கொடுத்து நம்பர் பிளேட் வாங்கிய இந்தியர்! ப

பல்விந்தர் சஹானியிடம் இருக்கும் பல ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் உள்ளன. அதில், ஒரு ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு இந்த D 5 என்ற பேன்ஸி நம்பரை பதிவு செய்ய அவர் முடிவு செய்திருக்கிறாராம். இதுமட்டுமல்ல, கார் சேகரிப்பில் ஆர்முடைய பல்விந்தர் சஹானி, இதுபோன்ற பேன்ஸி நம்பர்களை சேகரிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராம்.

துபாயில், ரூ.60 கோடி கொடுத்து நம்பர் பிளேட் வாங்கிய இந்தியர்! ப

ஐக்கிய அரபு நாடுகளில் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க வண்ண நம்பர் பிளேட்டுகளை தங்களது செல்வ வளம் மற்றும் அந்தஸ்தின் அடையாளமாக கருதுகின்றனர். இதனால்தான் இத்தனை கோடிகளை கொட்டி கொடுத்து நம்பர் பிளேட்டுகளை வாங்குவதை அங்கு பெரும் கவுரவமாக கருதி போட்டி ஏலத்தில் எடுக்கின்றனர்.

துபாயில், ரூ.60 கோடி கொடுத்து நம்பர் பிளேட் வாங்கிய இந்தியர்! ப

கடந்த 2008ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சயீத் அல் கவுரி என்ற தொழிலதிபர் 52.2 மில்லியன் திராம்ஸ் விலையில் 1 என்ற பதிவு எண்ணை பெற்றதுதான் இதுவரை ஏலத்தில் விடப்பட்ட நம்பர் பிளேட்டுகளில் அதிக விலை கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.94.58 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

துபாயில், ரூ.60 கோடி கொடுத்து நம்பர் பிளேட் வாங்கிய இந்தியர்! ப

அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் தாயகமான இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களை நடத்தி வருகிறார் தொழிலதிபர் பல்விந்தர். கடந்த ஆண்டு 09 என்ற பேன்ஸி நம்பரை 25 மில்லியன் திராம்ஸ் விலைக்கு ஏலத்தில் வாங்கியிருக்கிறாராம் பல்விந்தர் சஹானி.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Indian businessman pays Rs 60 crore for Special Dubai number plate. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X