அம்பானி வீட்டு திருமணத்தில் கடைசியா பார்த்து இருப்பீங்க! 200 கோடி ரூபா பிரைவேட் ஜெட்டிற்கு இவர்தான் ஓனரா?

புதியதாக வாங்கிய பைக், கார்களுக்கு பூஜை போட்டு பார்த்திருக்கிறோம். புதியதாக வாங்கப்பட்ட இரயில் என்ஜின்களுக்கு பூஜை செய்யப்பட்டதை கூட செய்திக்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், பல கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட பிரைவேட் ஜெட் (Private Jet) விமானத்திற்கு பூஜை போட்டு பார்த்து இருக்கிறீர்களா? இந்திய தொழிலதிபர் ஒருவர் தான் வாங்கிய புத்தம் புதிய பிரைவேட் ஜெட் விமானத்திற்கு புரோகிதரை அழைத்து இந்து முறைப்படி பூஜை செய்துள்ளார். பார்ப்போரை ஆச்சிரியப்பட வைக்கும் இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

உலகளவில் பிரபலமான பிரைவேட் ஜெட் விமானங்களுள் ஒன்று, கல்ஃப் ஸ்ட்ரீம் ஜி280 (Gulfstream G280) ஆகும். குறிப்பாக, துபாய், அபுதாபி போன்ற நகரங்களில் வசிப்பவர்கள் அதிகளவில் இந்த கல்ஃப்ஸ்ட்ரீம் பிரைவேட் ஜெட்டை பயன்படுத்துகின்றனர். இத்தகைய தனி விமானத்தை தான் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வாங்கியுள்ளார்.

india s gulfstream g280 private jet

இந்த தொழிலதிபரின் படம் மட்டுமே வெளியாகி உள்ளதே தவிர்த்து, யார் இந்த தொழிலதிபர்? என்ன மாதிரியான வணிகம் செய்து வருகிறார்? என்பது குறித்த விபரங்கள் இல்லை. அப்படியென்றால், எவ்வாறு இந்த பிரைவேட் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். இந்த விபரங்கள் அனைத்தையும் வீடியோ உடன் இன்ஸ்டாகிராமில் (Instagram) வெளியிட்டவர் வேறு யாரும் இல்லை... பூஜை செய்த புரோகிதர் ஆவார்.

சந்திரசேகர் சர்மா என பெயர் கொண்ட இந்த புரோகிதரை 'பண்டிட்' (Pandit) என அழைக்கின்றனர். வழக்கான இந்து முறையிலான பூஜைகளை செய்யும் புரோகிதர்களை காட்டிலும், பண்டிட் என்பவர்கள் வேத சாஸ்திரங்களை முழுமையாக அறிந்திருப்பதுடன், வாழ்வியல் தத்துவங்களையும் விளக்கி கூறுபவர்களாவர். இந்தியாவில் தற்போதைக்கு மிக பிரபலமான பண்டிட் ஆக சந்திரசேகர் சர்மா விளங்குகிறார்.

india s gulfstream g280 private jet

கடந்த ஆண்டில் பெரும் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் நடைபெற்றதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். அந்த திருமணத்தில் மணமக்களுக்கு திருமணம் செய்து வைத்ததே பண்டிட் சந்திரசேகர் சர்மா ஆவார். அந்த அளவிற்கு பெரும் விவிஐபிகளின் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் பண்டிட் சந்திரசேகர் சர்மாவை இந்த பெங்களூரு தொழிலதிபர் தனது புதிய தனி விமானத்திற்கு பூஜை செய்ய அழைத்துள்ளார்.

அதன்படி, விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தரைத்தளத்திற்கே நேரடியாக சென்ற பண்டிட் சந்திரசேகர் சர்மா அங்கு நடைபெற்ற பூஜைகள் அனைத்தையும் வீடியோவாக காட்சிப்படுத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அத்துடன், பண்டிட் சந்திரசேகர் சர்மா வெளியிட்ட இந்த வீடியோவில் கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி280 காரின் உட்புற லக்சரியான தோற்றத்தையும் காண முடிகிறது.

விமானத்திற்குள் ஆங்காங்கே கடவுள் படங்கள் இடம்பெற்றுள்ளன. உலகின் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே வைத்திருக்கும் இந்த தனி விமானத்தின் மதிப்பு ஆனது ஏறக்குறைய சுமார் ரூ.200 கோடி ஆகும். இதை வாங்கியவர் குறித்த விபரம் கிடைக்க பெறவில்லை என்றாலும், இந்த தனி விமானம் ஆனது அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள எம்பியர் அவியேஷன் (Empire Aviation)-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி280 தனி விமானத்தில் மொத்தம் 10 இருக்கைகள் வழங்கப்படுகின்றன. இதன் ஹனிவெல் எச்.டி.எஃப்7250ஜி டர்போஃபேன் என்ஜின்கள் அதிகப்பட்சமாக 33 கிலோ நியூட்டன்கள் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியவைகளாக உள்ளன. அதிகப்பட்சமாக மணிக்கு 900கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த தனி விமானத்தின் டேங்கை முழுவதுமாக எரிபொருள் நிரப்பிக் கொண்டு அதிகப்பட்சமாக 6,667கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் மிக மாடர்னான பிரைவேட் ஜெட்களில் இதுவும் ஒன்றாகும். அந்த அளவிற்கு மிகவும் மாடர்னான வசதிகள் இதில் வழங்கப்படுகின்றன. இத்தகைய விமானத்தை நேரில் காண்பதே நம்மில் நிறைய பேருக்கு கனவாக இருக்கும் நிலையில், இதனை ஒருவர் விலை கொடுத்து வாங்கியுள்ளார் என்றால் ஆச்சிரியமாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 20, 2025, 18:40 [IST]
English summary
Indian businessman performs rituals for his gulfstream g280 private jet
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+