லிமோசின் அவதாரம் எடுத்த பிரபல இந்திய கார் மாடல்கள்!

By Saravana Rajan

கார்களில் உச்சபட்ச இடவசதியையும், சொகுசு வசதிகளையும் அளிக்கும் மிக நீளமான கார் மாடல்களை லிமோசின் ரகமாக குறிப்பிடுகின்றனர். லிமோசின் ரகத்தில் கார்களை தயாரிப்பது வர்த்தக ரீதியில் சவால்கள் இருப்பதால், பெரும்பாலும் கஸ்டமைஸ் செய்தே லிமோசின் கார்கள் தயாரிக்கப்படுகின்றன.

அந்த வகையில், சில கஸ்டமைஸ் நிறுவனங்கள் பிரபல கார் மாடல்களின் டிசைனில், லிமோசின் கார்களை தயாரித்து கொடுக்கின்றன. அவ்வாறு லிமோசின் காராக வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் பிரபல கார் மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.

01. ஹிஸ்துஸ்தான் அம்பாசடர்

01. ஹிஸ்துஸ்தான் அம்பாசடர்

சாதாரண அம்பாசடருக்கு மாற்றாக, இந்த லிமோ அம்பாசடரை தயாரித்திருந்தால், ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு பெரும் பங்களிப்பை வழங்கியிருக்கும் என்று கூறும் அளவுக்கு சிறப்பாக இருக்கிறது. முன்புறத்திலும், பின்புறத்திலும் அம்பாசடரை நினைவூட்டும் தோற்றத்தில் இந்த லிமோசின் கார் கவர்கிறது.

 பிரத்யேக சேஸீ

பிரத்யேக சேஸீ

நீளமான சேஸீயுடன் அம்பாசடர் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த காரின் உட்புறத்தில் மிக தாராளமான இடவசதி இருக்கிறது. சொகுசான இருக்கைகள் என்பதுடன், எளிதாக உள்ளே செல்லவும், வெளியேறவும் பெரிய அளவிலான கதவுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அம்பாசடர் லிமோ நிச்சயம் பயணிப்பவர்களுக்கு ஓர் புதிய அனுபவத்தை வழங்கும்.

 02. டாடா சுமோ கிராண்ட்

02. டாடா சுமோ கிராண்ட்

டாடா சுமோ கிராண்ட் எம்யூவியின் டிசைன் பலராலும் விமர்சனத்திற்குள்ளான ஒன்று. ஆனால், லிமோசின் டிசைன் இந்த காருக்கு பொருத்தமாக இருக்கிறது. தயாரிப்பு நிறுவனமே உருவாக்கிய டிசைன் போல் மிக பிரமாதமாக இருக்கிறது. நீளமான இரு வரிசை இருக்கையுடன் மிகச் சிறப்பான இடவசதியும், வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கின்றன.

03. ஹோண்டா சிஆர்வி

03. ஹோண்டா சிஆர்வி

சொகுசையும், மென்மையான பயண அனுபவத்தையும் வழங்கும் ஹோண்டா சிஆர்வி எஸ்யூவியின் லிமோசின் மாடலும் மிகச்சிறப்பான டிசைனில் கவர்கிறது. மேலும், கருநீலம் - வெள்ளை வண்ண பெயிண்டிங்கும் கவர்ச்சியாக தெரிகிறது.

 இடவசதி

இடவசதி

லிமோசின் கார்களுக்குரிய அதிக வசதியும், கூடுதல் வசதிகளும் ஹோண்டா சிஆர்வி லிமோசின் எஸ்யூவியிக்கு கூடுதல் மதிப்பு சேர்க்கிறது.

04. டொயோட்டா இன்னோவா

04. டொயோட்டா இன்னோவா

பல லட்சம் இந்திய குடும்பத்தினருக்கு இனிதான பயணங்களை வழங்கி வரும் ஓர் சிறந்த எம்பிவி மாடலான டொயோட்டா இன்னோவா இடவசதிக்கு பெயர் பெற்றது. அதுவே, லிமோசின் அவதாரம் எடுத்தால், இடவசதிக்கு சொல்ல வேண்டும்.

 இன்டிரியர்

இன்டிரியர்

சாதாரண இன்னோவா காரில் இருக்கும் இன்டிரியர் அமைப்பை அப்படியே பின்பற்றி, இந்த காரின் இன்டிரியர் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், கூடுதல் இருக்கைகள் மற்றும் குளிர்சாதன வசதியுடன், 6 கதவுகள் கொண்டதாக மாற்றியிருக்கின்றனர்.

05. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

05. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

ஸ்கார்ப்பியோ ரசிகர்களை இந்த லிமோசின் திருப்திப்படுத்தும். முரட்டுத்தனமான தோற்றத்தை இழந்து, மென்மையான தோற்றத்தில் லிமோசின் மாடலாக காட்சியளிக்கிறது.

சிறப்புகள்

சிறப்புகள்

அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், அதிக இடவசதி ஆகியவை இந்த லிமோசின் ரக ஸ்கார்ப்பியோ எஸ்யூவிக்கும் கூடுதல் மதிப்பு சேர்க்கும் விஷயம்.

06. ஃபோர்டு எண்டெவர்

06. ஃபோர்டு எண்டெவர்

சாதாரணமாகவே குட்டி லிமோசின் போன்ற தோற்றத்தை ஃபோர்டு எண்டெவர் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், லிமோசின் அவதாரத்திலும் முகம் சுழிக்க வைக்க அளவுக்கு சிறப்பாகவே மாறியிருக்கிறது.

 இன்டிரியர்

இன்டிரியர்

27 அடி நீளத்துக்கு லிமோசின் மாடலாக மாறியிருக்கும் இந்த காரின் உட்புறத்தில் சொகுசான இருக்கைகள், டிவி திரை, சிறிய பார் போன்றவற்றுடன் அட்டகாசமாக மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

07. ஹம்மர் அவதாரம்

07. ஹம்மர் அவதாரம்

மஹிந்திரா ஸ்கார்ப்பியோவை லிமோசின் மட்டுமின்றி, ஹம்மர் கார் போன்று மாற்றி அசத்தியிருக்கின்றனர். மிகச்சிறப்பாக மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கும் இந்த லிமோசின் காரும், கார் பிரியர்களுக்கு உச்சபட்ச வசதிகளை அளிக்கக்கூடியதாக இருக்கிறது.

Via: Cartoq

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Indian Cars In Limousine Avatar.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X