காரிலும் தனித்துவத்தை விரும்பும் இந்திய பிரபலங்கள்!
சட்டை கலருக்கு ஏற்றாற்போல், பொட்டு, கம்மல், நெயில் பாலிஷ் போடுவது போன்று, பல இந்திய பிரபலங்கள் தங்கள் பயன்பாட்டிற்கு ஏற்றாற்போல் கார் மாடல்களை பயன்படுத்துவது வழக்கமாக வைத்துள்ளனர். ஷாப்பிங் செல்வதற்கு ஒரு வகை கார், இரவு பார்ட்டிகளுக்கு செல்வதற்கு ஒரு கார், பொழுதுபோக்குவதற்கு சூப்பர் கார் என இது மாறுபடுகிறது. இதற்காக, பல கோடிகளை கொட்டி பல ரக கார்களை தங்களது கராஜில் வாங்கி வைத்திருக்கின்றனர்.
மேலும், இந்த பிரபலங்களின் கார் ஆர்வம், காதல் பற்றிய பல செய்தித் தொகுப்புகளை வழங்கியிருக்கிறோம். அதில், சிலர் தங்களது கார்கள் மிகவும் நேசித்தாலும், சில கார்களை அவர்கள் தனது மனதுக்கும், வாழ்க்கை முறைக்கும் ஏற்றதாக கருதுகின்றனர். அவ்வாறு அவர்கள் பயன்படுத்தும் கார்களில், யாருடைய கார் மிகவும் நேர்த்தியாகவும், சிறப்பாகவும் இருக்கிறது என்பதை பார்த்து நீங்களும் மார்க் போடலாம்.

01. ஜான் ஆபிரஹாம் கார்
கார், பைக்குகள் மீது பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் தீராத காதல் கொண்டிருப்பதையும், தனது சுற்றத்தாருக்கு கார்களை பரிசளிப்பதையும் பற்றி ஏற்கனவே செய்திகளை வழங்கியிருக்கிறோம். ஆம், ஜான் ஆபிரஹாம் ஆடி கார்கள் மீது தீராத ஆசை கொண்டவர் என்பது தெரியும். ஆனால், அவரிடம் பழைய மாருதி ஜிப்ஸி கார் ஒன்றும் உள்ளது.

கஸ்டமைஸ் ஜிப்ஸி
அந்த மாருதி ஜிப்ஸி மாடலில் பல்வேறு மாற்றங்களை செய்து கஸ்டமைஸ் செய்து பயன்படுத்தி வருகிறார். பல கோடி மதிப்புடைய கார் இருந்தாலும், இதில் செல்வதில்தான் அவருக்கு பேரானந்தமாம். பெரிய மேக் வீல்கள், லெதர் உறை போடப்பட்ட ரோல் ஓவர் பார்கள் என பார்க்கவே ஸ்மார்ட்டாக இருக்கிறது அவருடைய மாருதி ஜிப்ஸி.

02. ரன்பீர் கபூர்
பாலிவுட்டின் சாக்லேட் பாய் என்று செல்லமாக அழைக்கப்படும் ரன்பீர் கபூர் 8ம் எண்ணை கேட்டு வாங்கி தனது கார்களில் பொருத்துவதை பற்றி தெரிவித்திருந்தோம். அவரிடம் பல சொகுசு கார்கள் இருக்கின்றன. அதில், அவர் மிகவும் தனித்துவமாக கருதும் மாடல் மெர்சிடிஸ் ஜி63ஜி ஏஎம்ஜி மாடல். இந்த காரில் இருக்கும் 5.5 லிட்டர் வி8 எஞ்சின் அதிகபட்சமாக 544 எச்பி பவரை அளிக்க வல்லது. இரண்டரை டன்னுக்கும் அதிகமான எடை கொண்ட இந்த எஸ்யூவி வகை சொகுசு கார் மாடல் 0 - 100 கிமீ வேகத்தை 5.4 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டது. இந்த மாடல் மணிக்கு 210 கிமீ வேகம் வரை செல்லும்.

03. விஜய் மல்லையா
பல ஆயிரம் கோடி கடனை திருப்பி செலுத்தாமல், நாட்டை விட்டு ஓடி தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையாவும் கார் பிரியர். உலகிலேயே அதிக விண்டேஜ் கார்களை சேகரித்து வைத்திருக்கும் நபர்களில் ஒருவர். கார் பந்தயத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட மல்லையாவின் மனதிற்கு நெருக்கமான காராக ஜாகுவார் எக்ஸ்ஜேஆர் 15 ரேஸ் கார் குறிப்பிடப்படுகிறது. பிரபல கார் பந்தய வீரர் ஆண்டி எவான்ஸ் பயன்படுத்திய இந்த காரை 1999ம் ஆண்டு மல்லையா வாங்கினார். இந்த காரின் மீது மல்லையா தனிக்கவனம் செலுத்துவது வழக்கம்.

04. குல் பணாக்
பாலிவுட் நடிகை குல் பணாக் சாகச வாகனங்களில் சாகச பயணங்கள் மேற்கொள்வதில் தீவிர ஈடுபாடு கொண்டவர் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் வாசகர்களுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். ராயல் என்ஃபீல்டு மற்றும் ரேவா இ2.0 எலக்ட்ரிக் கார்களை அவர் வைத்திருக்கிறார்

விருப்பமான மாடல்
அவரிடம் இருக்கும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கேட்வே மாடல்தான் அவருக்கு நெருக்கமான வாகனம். இந்த எஸ்யூவியில் அவர் அடிக்கடி ஆஃப்ரோடு சாகசங்கள் மற்றும் சாகச மலைப்பயணங்களை மேற்கொள்வது வாடிக்கையாக இருக்கிறது.

கூடுதல் வசதிகள்
அவர் பயன்படுத்தும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கேட்வே மாடலில் கூடுதல் ஹெட்லைட்டுகள், நீர்நிலைகளை எளிதில் கடக்கக்கூடிய ஸ்னோர்க்கெல், இரவில் காரிலேயே தங்குவதற்கான கூடார அமைப்பு, கெமிக்கல் டாய்லெட் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களை கொண்டது. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கேட்வே எஸ்யூவியில் டிஸ்கவரி சேனலுக்காக இவர் மேற்கொண்ட ஆஃப்ரோடு பயணம் ரசிகர்களை கவர்ந்தது.

05. டோணியின் பிக்கப் டிரக்
கூல் கேப்டன் என்று பெயர் பெற்ற தல டோணியின் கராஜில் 50க்கும் நெருக்கமான கார், பைக் மாடல்கள் அலங்கரித்து வருகின்றன. அதில், அவர் மிகவும் விரும்பும் மாடல்களில் ஒன்றாகவும், தனது வாழ்க்கை முறைக்கு அவருக்கு ஒப்பானதாகவும் தெரிவிக்கப்படும் மாடல் ஜிஎம்சி சியரா பிக்கப் டிரக்.

இறக்குமதி
அமெரிக்காவின் புகழ்மிக்க இந்த பிக்கப் டிரக்கை இறக்குமதி செய்து வாங்கி வைத்துள்ளார். அவருக்கு மிகவும் பிடித்தமான மாடலாக இது தெரிவிக்கப்படுகிறது.

06. கவுதம் சிங்கானியா
ரேமண்ட்ஸ் நிறுவனத்தின் அதிபர் கவுதம் சிங்கானியா கார், பைக் ஆர்வலர் மட்டுமல்ல. அவர் ஒரு சிறந்த கார் பந்தய வீரராகவும் இருக்கிறார். மேலும், பார்க்ஸ் சூப்பர் கார் க்ளப்பையும் துவக்கி, நிர்வகித்து வருகிறார். இவரது கராஜில் லோட்டஸ் எலிஸ், நிசான் ஜிடி-ஆர் உள்ளிட்ட பல கார் மாடல்கள் இருக்கின்றன. ஆனால், ரேஸ் வீரராகவும் இருக்கும் இவருக்கு டிராக் ரேஸிற்கு உகந்த பிஎம்டபிள்யூ ஐ92 கார்தான் மிகவும் பிடிக்குமாம்.

07. சச்சின் டெண்டுல்கர்
மாஸ்டர் பிளாஸ்டர் என்று ரசிகர்களால் புகழப்பெறும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கார் விரும்பி என்று சொல்வதைவிட பிஎம்டபிள்யூ காதலர் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். அவரிடம் இருக்கும் பெரும்பாலான மாடல்கள் பிஎம்டபிள்யூ கார்களே என்பதுடன், அந்த நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் இருக்கிறார்.

நெருக்கமான கார்
ஃபெராரி, நிசான் ஜிடிஆர் கார்களை பயன்படுத்திவிட்டாலும், பிஎம்டபிள்யூ மீதான மோகம் தீரவில்லை. இதற்காக, அவர் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் ஒன்றை கஸ்டமைஸ் செய்து வாங்கி வைத்திருக்கிறார். அந்த காரில் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, இருக்கைகளில் அவரது பெயரை குறிப்பிடும் வகையில், st என்ற எழுத்துக்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

08. இம்ரான் கான்
பாலிவுட் நடிகர் இம்ரான் கார் பல கார்களை வைத்திருக்கிறார். அதில், அவருக்கு பிடித்த மாடல் ஃபெராரி கலிஃபோர்னியா கார். கடந்த 2014ம் ஆண்டு வாங்கிய இந்த காரை அவர் மிகவும் நேசிக்க காரணம் என்ன என்பதை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

விருப்பம்
ஃபெராரி கலிஃபோர்னியா காரை தனது விருப்பத்திற்கு ஏற்றாற்போல் சிவப்பு வண்ண இன்டீயரியருடன் கஸ்டமைஸ் செய்து வாங்கியிருக்கிறார். விசேஷ இருக்கை மற்றும் எனது டேஸ்ட்டுக்கு தகுந்தவாறு மாறுதல்களை செய்து வாங்கியிருக்கிறேன் என்று ஒருமுறை செய்தியாளர்களிடம் பெருமிதத்துடன் தெரிவித்திருந்தார்.

09. ஷாகீத் கபூர் கார்
ஷாகீத் கபூருக்கு ஜாகுவார் மாடல்கள் மீது அதீத பிரியம். இதற்காக அவர் வாங்கி வைத்திருக்கும் மாடல் ஜாகுவார் எக்ஸ்கேஆர்- எஸ். இந்த காரில் இருக்கும் 5.0 லிட்டர் வி8 எஞ்சின் அதிகபட்சமாக 550 பிஎச்பி பவரை அளிக்கும் வல்லமை கொண்டது. 0 - 100 கிமீ வேகத்தை 4 வினாடிகளில் எட்டும் திறனும், மணிக்கு 300 கிமீ வேகம் வரையிலும் செல்லும்.

10. அபிஷேக் பச்சன்
பாலிவுட்டில் பச்சன் குடும்பத்தின் கார் பாசம் எல்லோருக்கும் தெரிந்ததே. இந்த நிலையில், தனது மகள் பிறந்தபோது அபிஷேக் பச்சன் வாங்கிய ஆடி ஏ8எல் கார் மீது அபிஷேக்கிற்கும், அவரது குடும்பத்தாருக்கும் பிணைப்பு அதிகம். மேலும், கூடுதல் சொகுசு அம்சங்களுடன் தனது மகளுக்காக பார்த்து பார்த்து வாங்கினார் அபிஷேக் பச்சன்.

ஆடி ஏ8 எல் சொகுசு கார்
பெண் குழந்தைகள் விரும்பும் இளஞ்சிவப்பு இன்டீரியருடன் இந்த கார் கஸ்டமைஸ் செய்யப்பட்டிருக்கிறது. இந்த காரில் இருக்கும் 4.2 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 346 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. ஆட்டோமேட்டிக் 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, லெதர் இருக்கைகள், 4 வீல் டிரைவ் சிஸ்டம் போன்ற பல உயர்வகை அம்சங்களை கொண்டது.

எது சிறப்பானது?
இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் கார்களில் எந்த செலிபிரிட்டியின் மாடல் அவருக்கு பொருத்தமாகவும், சிறப்பாகவும் இருக்கிறது. கமென்ட் பாக்ஸில் உங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

தமிழ் சினிமா நட்சத்திரங்களும், அவர்களது ஆஸ்தான கார் மாடல்களும்...!!


Click it and Unblock the Notifications








