இதுக்கப்பறம் இந்தியால சொகுசு காரே விற்பனைக்கு கிடைக்காதா? ஆடம்பர கார்களை வாங்கி குவிக்கும் திரை பிரபலங்கள்!

இந்த பதிவில் சமீபத்தில் சொகுசு காரை வாங்கிய நடிகர்களைப் பற்றியும், அவர்கள் வாங்கி இருக்கும் விலை உயர்ந்த கார்களைப் பற்றிய தகவலைதான் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, அந்த காரின் சிறப்புகள் என்ன? விலை எவ்வளவு? போன்ற முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்-க்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் சொகுசு கார் ஒன்று பரிசாக அளிக்கப்பட்டது. ஆகையால், அவரும் இந்த பட்டியலில் இணைந்திருக்கின்றார். இவரை போலவே இன்னும் பலர் புதிய சொகுசு காரில் தங்களுடைய பயணத்தை மேற்கொள்ள தொடங்கியிருக்கின்றனர். ரகுல், சன்னி தியோல் மற்றும் குஷாலி என ஏகப்பட்டோர் புதிய கார்களில் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். வாங்க அவங்க என்னென்ன கார்களில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதைக் காணலாம்.

Celebrities who recently bought luxury car

ரஜினிகாந்த் - பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி (BMW X7 SUV): ஜெயிலர் திரைப்படத்தின் அபார வெற்றியை முன்னிட்டு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், அப்படத்தின் வெற்றிக்காக உழைத்த முக்கிய நபர்களுக்கு பரிசுகளை வாரி வழங்கியது. அந்தவகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும் சொகுசு கார் பரிசளிக்கப்பட்டது.

பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி ரக காரையே அவருக்கு பட தயாரிப்பு நிறுவனம் பரிசாக வழங்கியது. மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார் இதுவாகும். இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 1.26 கோடிக்கும் அதிகம் என கூறப்படுகின்றது. இத்தகைய காஸ்ட்லியான காரையே நடிகர் ரஜினிக்கு அவர்கள் பரிசாக வழங்கினர்.

இந்த காரில் தற்போது நடிகர் அவரது பயணத்தை மேற்கொள்ள ஏற்கனவே தொடங்கிவிட்டார். சமீபத்தில் அவரது பேரக் குழைந்தையின் காது குத்து விழாவிற்குக்கூட அவர் இந்த காரிலேயே சென்றார். மிகுந்த ஆடம்பரம் மற்றும் அதீத திறனை வெளிப்படுத்தும் வசதிக் கொண்ட காராக எக்ஸ்7 எஸ்யூவி இருக்கின்றது.

இந்த காரை பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான மோட்டார் ஆப்ஷன்களில் வாங்கிக் கொள்ள முடியும். இரண்டுமே 3.0 லிட்டர் இன்லைன், 6 சிலிண்டர், ட்வின் டர்போசார்ஜட் மோட்டார் ஆகும். ஆனால், இவை திறன் வெளிப்பாட்டில் வித்தியாசம் கொண்டவை என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது. பெட்ரோல் மோட்டார் 381 பிஎஸ் மற்றும் 520 என்எம் டார்க்கையும், டீசல் மோட்டார் 340 பிஎஸ் மற்றும் 700 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

ரகுல் ப்ரீத் - மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ் 600 எஸ்யூவி (Mercedes Maybach GLS 600 SUV): தென்னிந்தியா, வட இந்தியா என பல திரையுலகில் தன்னுடைய கால் தடம் பதித்த நடிகைகளில் இவரும் ஒருவர் ஆவார். இத்தகைய முன்னணி நடிகையே சமீபத்தில் இந்த சூப்பரான சொகுசு காரை வாங்கினார்.

இந்த காரின் இந்திய ரூ. 2.69 கோடிக்கும் அதிகம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. ஆன் ரோடில் இதன் விலை ரூ. 3 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகின்றது. இந்த காரை கார் என்பது சொகுசு கப்பல் என கூறலாம்.

அந்த அளவிற்கு அதிகளவில் லக்சூரி அம்சங்களை இந்த காரில் வாரி வழங்கி இருக்கின்றது. மெர்சிடிஸ் நிறுவனம். இதேபோல், திறன் வெளிப்பாட்டிலும் இந்த கார் நம்மை ஆச்சரியத்தில் மூழ்க செய்யும் வகையில் இருக்கின்றது. ரகுல் ப்ரீத் வாங்கி இருக்கும் இந்த சொகுசு காரில் அதிக பவர்ஃபுல்லான மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

அந்த மோட்டார் 557 பிஎஸ் மற்றும் 730 என்எம் டார்க்கை வெளியேற்றும் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இத்துடன் 48 வோல்ட் ஹைபிரிட் சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த மின்சார செட்-அப் வாயிலாக 22 பிஎஸ் மற்றும் 250 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

சன்னி தியோல் - ஜீப் மெரிடியன் (Jeep Meridian): இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக ஆடம்பர வசதிகள் கொண்ட கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். ரூ. 40 லட்சத்திற்கும் அதிகமான விலையில் இந்த கார் இந்தியாவில் விற்கப்படுகின்றது. இவருக்கு இருக்கும் வசதியை வைத்து பார்த்தால், அவரிடம் இருக்கும் மிகவும் எளிமையான கார்களில் ஒன்றாகவே இது தென்படுகின்றது.

அதேவேளையில், அவரிடத்தில் ஏகப்பட்ட சொகுசு மற்றும் அரிய வகை கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், போர்ஷே 911 ஜிடி3 மற்றும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் போன்ற மிக மிக விலையுயர்ந்த கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையிலேயே அவற்றின் வரிசையில் சமீபத்தில் ஜீப் மெரிடியன் காரை அவர் வாங்கி இருக்கின்றார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த கடர் திரைப்படம் ரூ. 500 கோடி வசூலைச் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

குஷாலி குமார் - மெர்சிடிஸ் மேபேக் எஸ்580 (Mercedes Maybach S580): பிரபலமான பாலிவுட் நடிகைகளில் ஒருவராக குஷாலி குமார் இருக்கின்றார். இவர் திரைப்பட தயாரிப்பு மற்றும் இசை தயாரிப்பாளர் ஆகிய ரோல்களையும் மேற்கொண்டு வருகின்றார். இத்தகைய முன்னணி நபரே சமீபத்தில் அவரது சொந்த பயன்பாட்டிற்காக மெர்சிடிஸ் மேபேக் எஸ்580 சொகுசு காரை வாங்கினார்.

இந்த காரில் உள்ள இருக்கைகளை அட்ஜெட்ஸ் செய்ய ஒரு பொத்தானை அழித்தினாலே போதும். இதேபோல், காற்றோட்டத்தையும், கதகதப்பான உணர்வையும் வழங்கக் கூடிய இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் விலை ரூ. 2.69 கோடிக்கும் அதிகம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த நடிகர்களே சமீபத்தில் சொகுசு கார்களை வாங்கி அதில் தற்போது பயணங்களை மேற்கொண்டு வருபவர்கள் ஆவார்கள். இவர்களைப் போல இன்னும் பலர் அண்மையில் புதிய கார்களை வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவர்கள்குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளியாகவில்லை.

அந்தவகையில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்கூட மிக மிக விலை உயர்ந்த லம்போர்கினி உருஸ் எஸ் எஸ்யூவி ரக சொகுசு காரை அண்மையில் வாங்கியதாகக் கூறப்படுகின்றது. ஆனால், இதை அவர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இவர் வாங்கி இருக்கும் சொகுசு காரின் மதிப்பு ரூ. 4 கோடிக்கும் அதிகம் என கூறப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, September 29, 2023, 12:35 [IST]
English summary
Indian celebrities who recently bought a luxury car here is full details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+