எலக்ட்ரிக் கார்களில் அப்படி என்ன தான் இருக்கு... சினிமா பிரபலங்கள் போட்டி போட்டு வாங்குறாங்க!!

இந்தியாவில் சினிமா துறை எந்த அளவிற்கு வளர்ந்து வருகிறதோ அதற்கு இணையாக ஆட்டோமொபைல் துறையும் வளர்ச்சிக் கண்டு வருகிறது. பெட்ரோல்/ டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு நிறைய பேர் விரும்ப ஆரம்பித்துள்ளனர். ஏனெனில், எலக்ட்ரிக் வாகனங்கள் தான் எதிர்காலம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. சார்ஜிங் ஸ்டேஷன்கள் நாடு முழுவதும் வந்துவிட்டால் இன்னும் நிறைய பேர் எலக்ட்ரிக் வாகனங்களை நம்பி வாங்க ஆரம்பிப்பார்கள். அதற்கான வேலைகள் ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களும் எலக்ட்ரிக் கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால், சில சினிமா ஸ்டார்கள் பல வருடங்களாக எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், எலக்ட்ரிக் கார்களை கொண்டுள்ள சினிமா பிரபலங்களை பற்றி இனி பார்க்கலாம்.

cinema celebrities owned electric cars

ராஜ் குந்த்ரா (Raj Kundra): நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் என்கிற அடையாளத்துடன் இந்தியா முழுவதும் பிரபலமாகிய தொழிலதிபர். இவர் சமீபத்தில் லோட்டஸ் எலட்ரே (Lotus Eletre) என்கிற லக்சரியான எலக்ட்ரிக் எஸ்யூவி காரை வாங்கினார். இந்தியாவில் மிகவும் சிலர் மட்டுமே வைத்திருக்கும் இந்த எலக்ட்ரிக் காரை வாங்கிய முதல் பாலிவுட் நடிகர் இவர் என கூறப்படுகிறது. இந்த லோட்டஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.55 கோடியாக உள்ளது.

cinema celebrities owned electric cars

ஜஸ்லீன் ராயல் (Jasleen Royal): இந்தியாவின் இளம் பாடகியாக பிரபலமாகி வரும் இவர் சமீபத்தில் பிஒய்டி அட்டோ 3 எலக்ட்ரிக் காரை வாங்கினார். பளபளக்கும் கருப்பு நிறத்தில் இந்த எலக்ட்ரிக் காரை அவர் வாங்கினார். டைனாமிக், எக்ஸ்டெண்ட் ரேஞ்ச் மற்றும் ஸ்பெஷல் என மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் அட்டோ 3 விற்பனை செய்யப்படுகிறது. இதில் எந்த வேரியண்ட்டை ஜஸ்லீன் ராயல் வாங்கினார் என்பது தெரியவில்லை.

cinema celebrities owned electric cars

மந்த்ரா பேடி (Mandira Bedi): இந்தியாவில் முதல்முறையாக எலக்ட்ரிக் கார் ஒன்றை நம்பி வாங்கிய சினிமா பிரபலங்களுள் ஒருவர் மந்த்ரா பேடி ஆவார். டாடா நெக்ஸான் இவி என்கிற எலக்ட்ரிக் காரை பல வருடங்களுக்கு முன்பே வாங்கிய இவர், சமீபத்தில் வால்வோ சி40 ரீசார்ஜ் என்கிற விலைமிக்க எலக்ட்ரிக் காரை வாங்கினார். கூபே ஸ்டைலிலான இந்த வால்வோ எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.62.95 லட்சமாக உள்ளது.

cinema celebrities owned electric cars

அத்யாயன் சுமன் (Adhyayan Suman): பிரபல இந்திய தொலைக்காட்சி நடிகர் மற்றும் திரைப்பட நடிகரான சேகர் சுமனின் மகனான அத்யாயன் சுமன் சமீபத்தில் ஆடி க்யூ8 இ-ட்ரான் எலக்ட்ரிக் காரை வாங்கினார். இந்த காரை அவர் அவரது தந்தை சேகர் சுமனுக்கு பரிசாக வழங்கினார். இந்தியாவில் தற்சமயம் ஆடி க்யூ8 இ-ட்ரானின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.15 கோடியில் இருந்து ரூ.1.27 கோடி வரையில் உள்ளன.

cinema celebrities owned electric cars

ராம் சரண் (Ram Charan): தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் ராம் சரண் கடந்த வருடத்தில் பிராண்ட்-நியூ ரோல்ஸ்-ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் காரை வாங்கினார். இது, ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் காராக விளங்குகிறது. இது ஒரு அல்ட்ரா லக்சரி எலக்ட்ரிக் கார் ஆகும். இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை மட்டும் ரூ.7.5 கோடியாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாம் பார்த்திருப்பவர்கள் அனைவரும் கடந்த சில ஆண்டுகளில் எலக்ட்ரிக் காரை வாங்கியவர்களாவர். ஏனெனில், இந்தியாவில் சமீப காலத்தில் தான் எலக்ட்ரிக் கார்களுக்கான மார்க்கெட் விரிவடைய ஆரம்பித்தது. இந்த தொகுப்பில் தமிழ் சினிமா பிரபலங்கள் யாரையும் பார்க்கவில்லை. அதற்காக, தமிழ் சினிமாவில் யாரும் எலக்ட்ரிக் காரை வாங்கவில்லை என்று அர்த்தம் இல்லை. அவர்கள் குறித்த விபரங்கள் நமக்கு கிடைக்கப்பெறவில்லை, அவ்வளவுதான்.

More from DriveSpark

Article Published On: Friday, August 30, 2024, 12:06 [IST]
English summary
Indian cinema celebrities owned electric cars check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X