கப்பல் போன்ற பென்ஸ் காரை வாங்கியிருக்கும் இந்த பிரபலம் யாரென்று தெரிகிறதா? அந்த காமெடி நடிகையின் கணவரா இவர்?

இந்தியாவின் காமெடி குயின் என அழைக்கப்படும் பார்த்தி சிங் (Bharti Singh)-இன் கணவர் விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் காரை டெலிவிரி எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவை பற்றியும், அவர் வாங்கியுள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் காரை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

சினிமா துறையில் வளர்ந்து வருகிறீர்கள் என்றால் உங்களிடம் குறைந்தப்பட்சம் ஒரு சொகுசு காராவது கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக மாறி வருகிறது. இன்னும் சில பேர், தங்களை பிரபலமானவராக காட்டிக் கொள்வதற்காகவே விலையுயர்ந்த கார்/ பைக்குகளை வாங்குவதை பார்க்க முடிகிறது.

haarsh limbachiyaa buys mercedes-benz gls

குறிப்பாக, பாலிவுட் சினிமாவில் வாரத்திற்கு ஒருவர் புதியதாக ஒரு சொகுசு காரை வாங்குகின்றனர். இந்த வரிசையில், தற்போது விலையுயர்ந்த காரை வாங்கி இருப்பவர் பிரபல இந்தி தொலைக்காட்சி காமெடியன் ஹர்ஷ் லிம்பாச்சியா ஆவார். 'ஹர்ஷ் லிம்பாச்சியா' என்பது இவரது மேடை பெயர் ஆகும். உண்மையான பெயர், ஹேமந்த் குமார் லிம்பாச்சியா ஆகும்.

காமெடி நடிகராக இவர் தற்சமயம் பிரபலமாகி வந்தாலும், ஹர்ஷ் லிம்பாச்சியா ஒரு திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார். மேலும், சமீப காலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இத்தனை பன்முக திறன்களை கொண்டிருப்பினும், ஹர்ஷ் லிம்பாச்சியா அவரது மனைவியின் மூலமாகவே மக்கள் மத்தியில் அறியப்படும் நபராக விளங்குகிறார்.

haarsh limbachiyaa buys mercedes-benz gls

ஏனெனில், இவரது மனைவி பார்த்தி சிங் இந்தியாவின் காமெடி குயினாக விளங்குகிறார். ஸ்டார் ஒன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்ட தி கிரேட் இந்தியன் லாஃப்ட்டர் சேலஞ்ச் என்கிற பிரபலமான டிவி காமெடி நிகழ்ச்சியில் 2வது இடத்தை பிடித்து கவனத்தை ஈர்த்தவர், பார்த்தி சிங் ஆவார். ஆனால், கணவர் வாங்கியுள்ள புதிய சொகுசு காரை டெலிவிரி எடுக்கும்போது பார்த்தி சிங் உடன் வரவில்லை.

ஹர்ஷ் லிம்பாச்சியா வாங்கியிருப்பது வெள்ளை நிறத்திலான மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் காரை ஆகும். தாய், தந்தை உடன் காரை டெலிவிரி எடுத்ததை ஹர்ஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ உடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது இன்ஸ்டா பதிவில், "எனது புதிய கார் எனது மகிழ்ச்சியான இடம் ஆகும்" என குறிப்பிட்டுள்ளார்.

haarsh limbachiyaa buys mercedes-benz gls

ஹர்ஷ் லிம்பாச்சியா வாங்கியிருக்கும் ஜி.எல்.எஸ் காரை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் கடைசியாக கடந்த ஜனவரி மாத துவக்கத்தில் அப்டேட் செய்து அறிமுகப்படுத்தியது. 450 4மேட்டிக் மற்றும் 450டி 4மேட்டிக் என்கிற 2 விதமான வேரியண்ட்களில் ஜி.எல்.எஸ் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் 450 4மேட்டிக் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.32 கோடியாகவும், டீசல் என்ஜின் உடன் கிடைக்கும் 450டி 4 மேட்டிக் விலை ரூ.1.37 கோடியாகவும் தற்சமயம் உள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் விலையுயர்ந்த லக்சரி எஸ்யூவி காராக விளங்கும் ஜி.எல்.எஸ் மொத்தம் 5 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அப்சிடியன் கருப்பு, சோடாலைட் நீலம், செலெனைட் சில்வர், ஹை-டெக் சில்வர் மற்றும் போலார் வெள்ளை என்பது அந்த 5 பெயிண்ட் ஆப்ஷன்கள் ஆகும். இதில், போலார் வெள்ளை நிறத்தில்தான் ஜி.எல்.எஸ் காரை ஹர்ஷ் லிம்பாச்சியா தற்போது வாங்கியுள்ளார்.

haarsh limbachiyaa buys mercedes-benz gls

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹர்ஷ் லிம்பாச்சியாவுக்கும், பார்த்தி சிங்கிற்கும் 2017இல் திருமணம் நடந்தது. கடந்த 2022இல் இவர்களுக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின், ஹர்ஷ் லிம்பாச்சியாவின் குடும்பத்தில் இணையும் முதல் லக்சரி காராக இந்த மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.எஸ் விளங்குகிறது. இதனால், இந்த காரை ஹர்ஷ் மிகவும் பார்த்து, பார்த்து தேர்வு செய்து இருப்பார் என சொல்லலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, April 1, 2024, 23:11 [IST]
English summary
Indian comedy queen bharti singh husband buys mercedes benz gls
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X