கோப்பையை வென்றால் இந்திய வீரர்களுக்கு வெர்னா கார் பரிசு:ஹூண்டாய் அறிவிப்பு

Hyundai Verna
சென்னை: உலகக்கோப்பையை இந்திய அணி வென்றால், வீரர்கள் ஒவ்வொருவருக்கும் வெர்னா கார் பரிசாக வழங்கப்படும் என ஹூண்டாய் அறிவித்துள்ளது.

மும்பையில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சொந்த மண்ணில் நடைபெறும் போட்டி என்பதால், கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இந்நிலையில், இந்திய அணி உலக்கோப்பையை வெல்லும் பட்சத்தில், வீரர்களுக்கு பரிசு மழை குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில நிறுவனங்கள் தற்போதே வீரர்களுக்கான பரிசுகளை அறிவிக்க துவங்கியுள்ளன.

உலக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் அதிகாரப்பூர்வ கார் பார்ட்னராக செயல்பட்டு வரும் ஹூண்டாய் நிறுவனம் வீரர்களுக்கு அதிரடி பரிசை அறிவித்துள்ளது.

கோப்பையை இந்திய அணி வென்று விட்டால், வீரர்கள் ஒவ்வொருவருக்கும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள வெர்னா ஆர்பி செடான் காரை பரிசாக வழங்குவோம் என ஹூண்டாய் அதிரடியாக அறிவித்துள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள வெர்னா ஆர் கார், வடிவமைப்பிலும், வசதிகளிலும் புதிய தலைமுறைக்கேற்ற அம்சங்களுடன் வரவுள்ளது. டெல்லியில், இந்த கார் ரூ.7 லட்சம் முதல் ரூ.8 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 2, 2011, 11:26 [IST]
English summary
Hyundai India is all set to ride piggyback on the Indian Cricket Team’r probable victory in tomorrow’s 2011 ICC Cricket World Cup Final at the Wankhede Stadium in Mumbai, when India takes on Sri Lanka. Hyundai India has pulled off a coup of sorts by just announcing that the Indian cricket players, will receive a 2011 Hyundai Verna RB each if they win the World
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+