இந்தியாவிலேயே முதல் ஆளாக வாங்கினார்... விராட் கோஹ்லியின் புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவிலேயே முதல் ஆளாக விராட் கோஹ்லி வாங்கியிருக்கும் புதிய காரின் விலை மலைக்க வைக்கும் வகையில் இருக்கிறது.

இந்தியாவில் முதல் ஆளாக வாங்கினார்... விராட் கோஹ்லியின் புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, சர்வதேச அரங்கில் பல்வேறு சாதனைகளை தகர்த்து வருகிறார். விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் ஏறக்குறைய ஏதாவது ஒரு புதிய சாதனையை விராட் கோஹ்லி படைத்து விடுகிறார். இன்றைய சூழலில், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை தகர்ப்பதற்கான சாத்தியமுள்ள ஒரே நபராக விராட் கோஹ்லி கருதப்படுகிறார்.

இந்தியாவில் முதல் ஆளாக வாங்கினார்... விராட் கோஹ்லியின் புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா?

விராட் கோஹ்லிக்கு கிரிக்கெட் எவ்வளவு பிடிக்குமோ? அதே அளவிற்கு கார்களும் பிடிக்கும். கிரிக்கெட்டிற்கு அடுத்தபடியாக விராட் கோஹ்லி நேசிக்கும் பல்வேறு விஷயங்களில் முதன்மையானதாக கார்கள் உள்ளன. கிரிக்கெட் வீரர்கள் என்றாலே வாகனங்களை அதிகமாக நேசிப்பது சகஜம்தான். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி இதற்கு ஒரு உதாரணம்.

இந்தியாவில் முதல் ஆளாக வாங்கினார்... விராட் கோஹ்லியின் புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா?

கார், பைக் என அனைத்து விதமான வாகனங்களையும் டோனி விரும்ப கூடியவர். அதிலும் மிகவும் அரிதான வாகனங்கள் என்றால், எவ்வளவு விலை கொடுத்தேனும் வாங்கி விடுவார். ஆனால் விராட் கோஹ்லி சற்று வித்தியாசமானவர். அவருக்கு மோட்டார்சைக்கிள்களை விட கார்கள் மீதே அதிக ஆர்வம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆடி கார்கள்.

இந்தியாவில் முதல் ஆளாக வாங்கினார்... விராட் கோஹ்லியின் புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா?

விராட் கோஹ்லியிடம் ஏராளமான ஆடி கார்கள் உள்ளன. இதுபோதாதென்று தற்போது புதிதாக ஒரு ஆடி கார் அவரது வீட்டிற்கு வந்துள்ளது. ஆம், மிகவும் விலை உயர்ந்த ஆடி கார் ஒன்றை விராட் கோஹ்லி தற்போது வாங்கியுள்ளார். அதுவும் இந்தியாவிலேயே முதல் ஆளாக இந்த காரை வாங்கியிருப்பது விராட் கோஹ்லிதான் என்பது கூடுதல் சிறப்பு.

இந்தியாவில் முதல் ஆளாக வாங்கினார்... விராட் கோஹ்லியின் புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா?

கடந்த புதன்கிழமையன்றுதான் (ஜனவரி 15ம் தேதி) இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கே அறிமுகம் செய்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆடி க்யூ8 (Audi Q8) காரைப்பற்றிதான் நாம் இங்கே பேசி கொண்டுள்ளோம். இது எஸ்யூவி ரக கார் ஆகும். லக்ஸரி கார் பிரியர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆடி க்யூ8 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்தியாவில் முதல் ஆளாக வாங்கினார்... விராட் கோஹ்லியின் புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா?

ஆடி க்யூ8 காரில், 3.0 லிட்டர் TFSI (Turbo Fuel Stratified Injection) இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 340 எச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை ஆடி க்யூ8 எஸ்யூவி சுமார் 6 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய திறன் வாய்ந்தது.

இந்தியாவில் முதல் ஆளாக வாங்கினார்... விராட் கோஹ்லியின் புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா?

இந்திய மார்க்கெட்டில் 1.33 கோடி ரூபாய் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் ஆடி க்யூ8 எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில், ஆடி க்யூ8 எஸ்யூவி காரை ஓட்டியபோது கேமரா கண்களில் விராட் கோஹ்லி சிக்கியுள்ளார். புதிய ஆடி க்யூ8 எஸ்யூவி காரை விராட் கோஹ்லி பொது வெளியில் ஓட்டி வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் முதல் ஆளாக வாங்கினார்... விராட் கோஹ்லியின் புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது ஒரு நாள் போட்டி ராஜ்கோட்டில் நேற்று (ஜனவரி 17) நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியா வாகை சூடியது. இந்த போட்டியில் கேப்டன் விராட் கோஹ்லி வழக்கம் போல் சிறப்பாக பேட்டிங் செய்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.

இந்தியாவில் முதல் ஆளாக வாங்கினார்... விராட் கோஹ்லியின் புதிய காரின் விலை எவ்வளவு தெரியுமா?

முன்னதாக இந்த போட்டியில் பங்கேற்பதற்காக ராஜ்கோட் செல்வதற்கு விராட் கோஹ்லி விமான நிலையம் வந்தார். அப்போதுதான் அவர் தனது புதிய ஆடி க்யூ8 எஸ்யூவி காரை ஓட்டி கொண்டு வந்தார். ஆடி க்யூ8 எஸ்யூவி காரை விராட் கோஹ்லி ஓட்டி வரும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

சமூக வலை தளங்களில் தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. விராட் கோஹ்லியின் ரசிகர்கள் மற்றும் கார் ஆர்வலர்கள் பலரும் இந்த வீடியோவை ஆர்வமாக பகிர்ந்து வருகின்றனர். விராட் கோஹ்லியை தொடர்ந்து, சினிமா நட்சத்திரங்கள் மற்றும் மற்ற கிரிக்கெட் வீரர்கள் பலரும் வருங்காலங்களில், ஆடி க்யூ8 எஸ்யூவி காரை சொந்தமாக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indian Cricket Team Captain Virat Kohli Spotted Driving His New Audi Q8 SUV - Viral Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X