Just In
- 3 hrs ago
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- 4 hrs ago
இது புதுமுக ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல! சீனர்கள் காப்பியடித்து உருவாக்கிய சொகுசு கார்... இந்த காருல இவ்ளே வசதிகளா
- 5 hrs ago
ஆரம்பமே அதிரடி... 1 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஓலா திட்டம்... கலக்கத்தில் போட்டியாளர்கள்!
- 5 hrs ago
சரவெடி வெடித்த டிஏஓ... ஒரே நேரத்தில் 3 மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்! வியந்து நிற்கும் இந்திய மின்வாகன சந்தை!
Don't Miss!
- News
ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க.. புதிய வழிகளை யோசியுங்கள்.. பதுக்கினால் கடும் நடவடிக்கை.. மோடி பேச்சு
- Finance
இந்தியாவிற்கு உதவிய பைசர் நிறுவனப் பங்குகள் 5% சரிவு.. என்ன நடக்கிறது..?!
- Sports
அதிரடி சிக்ஸ் அடுத்த பந்தில் அவுட்.. கேப்டனுக்கு எதிராக தமிழக வீரர் செய்த செயல்..போட்டியின் ட்விஸ்ட்
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Lifestyle
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விலை உயர்ந்த பிரீமியம் ஹேட்ச்பேக்... ஹூண்டாய் ஐ20 டர்போ காரை பரிசாக வென்ற விராட் கோஹ்லி... எதற்காக தெரியுமா?
ஹூண்டாய் ஐ20 டர்போ காரை விராட் கோஹ்லி பரிசாக வென்றுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் ஹோல்லி தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். இதற்கு பரிசாக ஹூண்டாய் ஐ20 டர்போ கார், விராட் கோஹ்லிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் ஃபயரி ரெட் வண்ணத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

ஹூண்டாய் ஐ20 காரின் டர்போ வேரியண்ட்டை விராட் கோஹ்லி மகிழ்ச்சியுடன் பெற்று கொண்டார். இது ஹூண்டாய் ஐ20 காரின் டாப் வேரியண்ட் ஆகும். தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் விலை உயர்ந்த பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாக ஹூண்டாய் ஐ20 இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் ஐ20 காரின் பேஸ் வேரியண்ட்டின் விலை 6.79 லட்ச ரூபாய் ஆகும். அதே சமயம் டாப் வேரியண்ட்டின் விலை 11.32 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். மேக்னா, ஸ்போர்ட்ஸ், அஸ்டா மற்றும் அஸ்டா (ஆப்ஷனல்) என மொத்தம் 4 வேரியண்ட்களில் ஹூண்டாய் ஐ20 கிடைக்கிறது.

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பலேனோ, டொயோட்டா க்ளான்சா, டாடா அல்ட்ராஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ மற்றும் ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களுடன் ஹுண்டாய் ஐ20 போட்டியிட்டு வருகிறது. ஹூண்டாய் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக் காரில் மொத்தம் 3 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

இதில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆகியவை அடங்கும். அத்துடன் ஹூண்டாய் நிறுவனத்தின் மற்ற கார்களை போல், ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக் காரிலும் ஏராளமான அதிநவீன வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்திய கிரிக்கெட் அணியின் விராட் கோஹ்லிக்கு கார்கள் மீது அளவு கடந்த பிரியம் உள்ளது. அவரது கார் கலெக்ஸனை பார்த்தாலே நாம் இதனை புரிந்து கொள்ளலாம். ஆடி ஆர்8 எல்எம்எக்ஸ், ஆர்எஸ்5, ஏ8எல், எஸ்5 மற்றும் ஆர்எஸ்6 என ஏராளமான ஆடி கார்களை விராட் கோஹ்லி வைத்துள்ளார். அவர் ஆடி இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

விராட் கோஹ்லி நிறைய ஆடி கார்களை வைத்திருப்பதற்கு இதுவும் மிக முக்கியமான காரணமாக உள்ளது. இதுதவிர பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி மற்றும் பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் ஆகிய கார்களுடன் விராட் கோஹ்லியும் இருக்கின்றன. தனியாகவோ அல்லது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடனோ பயணம் செய்யும்போதெல்லாம் விராட் கோஹ்லி இந்த கார்களை பயன்படுத்துகிறார்.

மேலும் லேண்ட் ரோவர் வோக் கார் ஒன்றும் விராட் கோஹ்லியிடம் இருக்கிறது. இந்த கார் டெல்லியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருக்கும் சமயங்களில் எல்லாம் இந்த காரைதான் விராட் கோஹ்லி பயன்படுத்தி வருகிறார். அவரது கார் கலெக்ஸனில் தற்போது ஹூண்டாய் ஐ20 டர்போவும் புதிதாக இணைந்துள்ளது.