கப்பல் மாதிரியான கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்.. இதோட விலை இவ்ளோ அதிகமா!
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் மற்றும் ஐபிஎல் (IPL) மும்பை இந்தியன் அணியின் கேப்டனுமான ஹர்திக் பாண்டியா மிக மிக விலை உயர்ந்த சொகுசு கார் (Luxury Car) மாடலை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் வீடியோவே தற்போது வெளியாகி இருக்கின்றன. சமீபத்தில் மும்பை விமான நிலையத்தை விட்டு வெளியேறியபோது அந்த காரிலேயே அவர் பயணித்திருக்கின்றார். இதன் வாயிலாகவே அவர் இந்த காரை வாங்கி இருப்பது உறுதியாகி இருக்கின்றது.
அவர் பயணித்தது பிராண்ட் நியூ லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Land Rover Range Rover Sport) சொகுசு கார் மாடல் ஆகும். இந்த கார் மாடலின் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 1.6 கோடி ஆகும். இத்தகைய அதிக விலைக் கொண்ட காருக்கே தற்போது ஹர்திக் பாண்டியா உரிமையாளராக மாறி இருக்கின்றார்.

மிக மிக அதிக சொகுசு அம்சங்கள் நிறைந்த ஓர் எஸ்யூவி ரக கார் மாடலே லண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஆகும். இந்த காரில் அதிக ஆடம்பர அம்சங்கள் நிறைந்திருக்கின்ற காரணத்தினாலேயே இதற்கு இந்திய பணக்காரர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இதை உறுதிப்படுத்தும் விதமாகவே தற்போது ஹர்திக் பாண்டியாவும் இந்த வாகனத்தை வாங்கி இருக்கின்றார். ஹர்திக் பாண்டியாவிடம் இந்த ஒரு ஆடம்பர ரக கார் மட்டுமல்ல இன்னும் சில சொகுசு கார்களும் பயன்பாட்டில் இருக்கின்றன. மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி (Mercedes-Benz G63 AMG), லெக்சஸ் எல்எம் 350எச் லக்சூரி எம்பிவி (Lexus LM 350h) கார், லம்போர்கினி ஹூராகேன் ஈவோ (Lamborghini Huracan Evo) ஆகிய கார் மாடல்களையே அவர் பயன்படுத்தி வருகின்றார்.
இதில் லெக்சஸ் எல்எம் 350எச் ஓர் சொகுசு எம்பிவி ரக கார் மாடல் ஆகும். இந்த காரையும் அவர் மிக சமீபத்திலேயே வாங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் மதிப்பு ரூ. 2 கோடிக்கும் அதிகம் என்பது கவனிக்கத்தகுந்தது. இவற்றின் வரிசையிலேயே தற்போது ஹர்திக் பாண்டியா புதிய லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் மாடலை இணைத்திருக்கின்றார்.
இந்த கார் அதிக சொகுசு அம்சங்கள் தாங்கியது மட்டுமல்ல அதிக கவர்ச்சியான கார் மாடலும்கூட. முழுக்க முழுக்க எல்இடி தர லைட்டுகளால் இந்த கார் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அத்துடன், பெரிய 22 அங்குல அலாய் வீல்கள் ஆகியவையே இதில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
இதுமட்டுமில்லைங்க, இந்த காரில் சொகுசான ரைடு அனுபவத்தை வழங்கும் விதமாக முன் பக்கத்தில் வெண்டிலேஷன் மற்றும் ஹீட்டிங் வசதிக் கொண்ட இருக்கைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, 11.4 அங்குல பெரிய பொழுதுபோக்கு திரை மற்றும் மெர்டியன் சவுண்டு சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
மேலும், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஏர் சஸ்பென்ஷன், அடாஸ் (ADAS) மற்றும் அனைத்து விதமான சாலைகளையும் சமாளிக்கும் திறன், பன்முக க்ளைமேட் கன்ட்ரோல், சாஃப்ட்டாக மூடும் வசதிக் கொண்ட டோர்கள் என ஏகப்பட்ட அம்சம் வழங்கப்பட்டு உள்ளன.
எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 3.0 லிட்டர் டர்போசார்ஜட் வி6 பெட்ரோல் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த மோட்டார் அதிகபட்சமாக 394 பிஎச்பி மற்றும் 550 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. டிரான்ஸ்மிஷனை பொருத்த வரை 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிக சிறந்த ஆற்றலை வழங்கும் மற்றும் அதிக ஆடம்பர அம்சங்களைத் தாங்கி இருக்கும் ஆகிய காரணங்களினாலேயே ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் மாடலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் இந்த காரை ஹர்திக் பாண்டியா மட்டுமில்லைங்க இன்னும் பல பிரபலங்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








