ஹர்திக் பாண்டியா வெளியிட்ட போட்டோவிற்கு 28 லட்சம் லைக்ஸ்! அதுல என்ன இருக்குனு தெரிஞ்சா அசந்திருவீங்க!
ஹர்திக் பாண்டியா வெளியிட்ட புகைப்படத்திற்கு 'லைக்ஸ்' குவிந்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர்களில் ஒருவர் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya). இவர் தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பதிவிட்டுள்ளதார். இந்த புகைப்படத்தில் ஹர்திக் பாண்டியா அவரது மெர்சிடிஸ்-பென்ஸ் ஏஎம்ஜி ஜி63 (Mercedes-Benz AMG G63) காருக்கு முன்பாக நின்று கொண்டிருப்பதை நம்மால் காண முடிகிறது.

அதே நேரத்தில் அவரது மகன் தனது மெக்லாரன் பி1 (McLaren P1) காரில் அமர்ந்துள்ளார். இது பொம்மை கார் ஆகும். இந்த புகைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 28 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை இந்த புகைப்படம் பெற்றுள்ளது. சமூக வலை தளங்களில் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

'கார்கள் மீதான காதல் தொடர்கிறது' என இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படத்துடன் ஹர்திக் பாண்டியா எழுதியுள்ளார். ஹர்திக் பாண்டியாவை போலவே அவரது மகனும் கார்கள் மீது காதல் கொண்டவராக வளர்ந்து வருகிறார் என்பதை இதன் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. மற்ற கிரிக்கெட் வீரர்களை போலவே ஹர்திக் பாண்டியாவும் கார் காதலர்தான்.

நிறைய கார்களை ஹர்திக் பாண்டியா சொந்தமாக வைத்துள்ளார். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு செக்மெண்ட்டை சேர்ந்தவை. ஹர்திக் பாண்டியா சொந்தமாக வைத்திருக்கும் கார்களில் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் (Land Rover Range Rover) முக்கியமானது. இது செல்வந்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்றாகும். இது சொகுசு எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

இதுதவிர லம்போர்கினி ஹூராகேன் எவோ (Lamborghini Huracan EVO) காரும் ஹர்திக் பாண்டியாவிடம் இருக்கிறது. லம்போர்கினி ஹூராகேன் எவோ காரில், 5.2 லிட்டர், வி10, நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 638 பிஹெச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை லம்போர்கினி ஹூராகேன் எவோ வெறும் 2.9 வினாடிகளில் எட்டி விடும். இந்த காரின் சிறப்பான செயல்திறனுக்கு இது ஒரு சாட்சி. இவற்றை தவிர, மெர்சிடிஸ்-பென்ஸ் ஏஎம்ஜி ஜி63 (Mercedes-Benz AMG G63) காரும் ஹர்திக் பாண்டியாவிடம் இருக்கிறது.

ஹர்திக் பாண்டியா தனது மகனுடன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இந்த காரின் முன்பாக தான் நின்று கொண்டிருக்கிறார். ஹர்திக் பாண்டியாவின் மெர்சிடிஸ்-பென்ஸ் ஏஎம்ஜி ஜி63 காரில், 4.0 லிட்டர், வி8 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது ட்வின்-டர்போசார்ஜ்டு இன்ஜின் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 585 பிஹெச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த காரில் இன்ஜின் சக்தியானது, ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம், காரின் அனைத்து சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. இவற்றுடன் ஆடி ஏ6 (Audi A6) காரும் ஹர்திக் பாண்டியாவிடம் இருக்கிறது.

இது பிரீமியம் செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இவற்றுடன் டொயோட்டா எட்டியோஸ் (Toyota Etios) காரையும் ஹர்திக் பாண்டியா வைத்துள்ளார். ஹர்திக் பாண்டியா வைத்திருக்கும் சாதாரண கார்களில் ஒன்றாக டொயோட்டா எட்டியோஸை குறிப்பிடலாம். அவரிடம் இருக்கும் மற்ற கார்களுடன் ஒப்பிடும்போது இது சாதாரணமான கார்தான்.

பொதுவாக கிரிக்கெட் வீரர்களும், திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர்களும் சொகுசு கார்களை அதிகம் வாங்க கூடியவர்கள். கிரிக்கெட் உலகை பொறுத்தவரை விராட் கோஹ்லி மற்றும் டோனி போன்றவர்கள் தீவிரமான கார் பிரியர்கள். இதில் டோனி, நடிகர் அஜீத் குமாரை போன்று பைக்குகளையும் அதிகமாக விரும்ப கூடியவராக இருந்து வருகிறார் என்பது வேறு கதை.

நிறைய கார்களை வைத்திருப்பதன் மூலமாக ஹர்திக் பாண்டியாவும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளார். எதிர்காலத்தில் அவர் இன்னும் ஏராளமான கார்களை வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு நாம் நமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம். ஹர்திக் பாண்டியா பொது சாலைகளில் தனது கார்களை ஓட்டி வருவதை காண்பதற்கு அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications








