ஐபிஎல்-இல் எடுக்கா விட்டாலும், 2 வயது பெரிய நடிகை உடன் ஊர் சுற்றும் கிரிக்கெட் வீரர்! அதுவும் பழைய BMW காரில்

சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) அளவிற்கு ஒரு சமயத்தில் தூக்கி வைத்து பேசப்பட்ட கிரிக்கெட் வீரர், பிரித்வி ஷா (Prithvi Shaw). பேட்ஸ்மேனான இவரது சில கிரிக்கெட் ஷாட்களை எல்லாம் பார்த்து இந்தியாவிற்கு அடுத்த சச்சின் கிடைத்து விட்டார் என்றெல்லாம் கூறினர்.

ஆனால், வாழ்க்கை நமக்காக அடுத்து என்ன வைத்துள்ளது என்பது யாருக்குமே தெரியாது அல்லவா... ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடி ஜொலித்தவர், அதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார். ஆனால், அதன்பின் சரியாக விளையாடாததால் விரைவாகவே எல்லாத்தை இழக்க ஆரம்பித்தார்.

prithvi shaw in bmw 6-series

சர்வதேச இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்பட்டவர், ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடும் 11 பேர் அணியில் இடம்பெறவில்லை. இவ்வளவு ஏன், பிரித்வி ஷாவுக்கு உள்நாட்டு கிரிக்கெட்டில் இத்தனை புகழையும் பெற்றுத்தந்த மும்பை கிரிக்கெட் அணியும் ஒரு கட்டத்திற்கு மேல் இவரை அணியில் இருந்து நீக்கியது. இங்கிலாந்தை சேர்ந்த கிரிக்கெட் கிளப் ஒன்றிற்காக விளையாடி பார்த்தும் பிரித்வி ஷாவால் மீண்டும் தனது ஃபார்முக்கு வர முடியவில்லை.

இது எல்லாவற்றையும் விட பெரிய இடியாக, 2025 ஐபிஎல் ஏலத்தில் எந்தவொரு அணியும் பிரித்வி ஷாவை வாங்க முன்வரவில்லை. கடந்த 2024 ஐபிஎல்-இல் டெல்லி அணிக்காக விளையாடினார். அந்த அணியும் 2025ஆம் ஆண்டிற்கான தொடரில் பிரித்வி ஷாவை கழற்றி விட்டது. இவ்வாறு, எந்த பக்கம் பார்த்தாலும் சோகங்கள் கூத்தாடினாலும் பிரித்வி ஷா ஜாலியாக இருப்பது போலவே தெரிகிறது.

prithvi shaw in bmw 6-series

மும்பையில் நேற்று (ஏப்ரல் 23) இரவு தனது காதலியும் நடிகையுமான நித்தி தபாடியா (Nidhhi Tapadiaa) உடன் ஜாலியாக விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ (BMW) காரில் பிரித்வி ஷா பயணம் செய்துள்ளார். இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், தனியார் நிறுவன அலுவலகம் ஒன்றில் இருந்து வெளியே வரும் பிரித்வி ஷா, பின்னர் தனது பிஎம்டபிள்யூ காரில் டிரைவர் இருக்கையில் அமர்வதை காணலாம்.

பிரித்வி ஷா காரினுள் அமர்ந்த சில வினாடிகளில் அவரது காதலி என கூறப்படும் நடிகை நித்தி தபாடியா காரை நோக்கி வருவதை வீடியோவில் காண முடிகிறது. இதனை சுற்றியிருந்தவர்கள் தங்களது மொபைல் போனில் படம் பிடித்ததை கண்டதும், பிரித்வி ஷா அதனை வேண்டாம் என கேட்டுக் கொள்வதையும் வீடியோவில் காண முடிகிறது.

நடிகை நித்தி தபாடியா, காரில் பிரித்வி ஷாவுக்கு அருகே முன் இருக்கையில் அமர்ந்து சென்றுள்ளார். இந்த வீடியோவில், பிரித்வி ஷா ஓட்டுவது பி.எம்.டபிள்யூ 6-சீரிஸ் ஜிடி (BMW 6-Series GT) கார் ஆகும். இந்த பிஎடம்பிள்யூ கார் தற்சமயம் இந்தியாவில் விற்பனையில் இல்லை. ஆக, கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா இந்த காரை வாங்கி குறைந்தது சில வருடங்களாவது ஆகியிருக்கும்.

இந்தியாவில் விற்பனையில் இருந்த போது கடைசியாக இந்த பிஎம்டபிள்யூ காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.73.50 லட்சத்தில் இருந்து ரூ.79.90 லட்சம் வரையில் இருந்தன. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களிலும் கிடைத்தாலும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே 6-சீரிஸ் ஜிடி கார் விற்பனை செய்யப்பட்டது.

எம் ஸ்போர்ட் (M Sport) மற்றும் எம் ஸ்போர்ட் சிக்னெச்சர் (M Sport Signature) என இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்ட 6-சீரிஸ் ஜிடி காரில் 2 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 2 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டன. இவற்றுடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதே மாதிரியான இன்னொரு பிஎம்டபிள்யூ 6-சீரிஸ் ஜிடி காரில்தான் மிக சமீபத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பையில் விநாயகர் கோயில் ஒன்றிற்கு வந்து சென்றார். ஆக, இந்த பிஎம்டபிள்யூ காரை ஒரு சமயத்தில் நிறைய பேர் வாங்கியுள்ளனர். குறிப்பாக, மும்பை கிரிக்கெட் வீரர்களால் அதிகம் வாங்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 24, 2025, 17:24 [IST]
English summary
Indian cricketer prithvi shaw spotted with nidhhi tapadiaa in bmw 6 series gt
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+