கேஸ் சிலிண்டர் டெலிவரி பண்ணிட்டு இருந்தாரு.. இப்ப அவரு ஓட்டிட்டு இருக்க பைக்கோட விலை மட்டுமே 5 லட்ச ரூபா..
கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்துக் கொண்டிருந்த ஒருவர் இப்போது 5 லட்சம் ரூபாய் மதிப்புக் கொண்ட பைக்கில் வலம் வர தொடங்கி இருக்கின்றார். இந்த பைக்கை அவருடைய மகனே அவருக்கு பரிசாக வழங்கி இருக்கின்றார். அந்த பரிசளித்த மகன் வேறு யாருமில்லைங்க பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் ரிங்கு சிங்-தான் அவர் ஆவார். விரைவில் ரிங்கு சிங்-கிற்கும், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த எம்பி பிரியா சரோஜ்-க்கும் விரைவிலேயே திருமணம் நடைபெற இருக்கின்றது. இந்த நிலையிலேயே அவர் பைக்கை தன்னுடைய அப்பாவிற்கு பரிசாக வழங்கி இருக்கின்றார்.
கவாஸாகி நிஞ்சா 400 (Kawasaki Ninja 400) பைக்கையே அவர் பரிசாக வழங்கி இருக்கின்றார். ஒரு காலத்தில் ரிங்கு சிங்-கின் அப்பா கான்சந்த் சிங், வீட்டு சமையல் சிலிண்டரை டெலிவரி செய்யும் தொழிலை மேற்கொண்டார். இத்தகைய ஏழ்மையான குடும்ப பின்புலத்தைக் கொண்டவரே ரிங்கு சிங்.

இவரின் கடின உழைப்பே இப்போது அவரையும், அவருடைய குடும்பத்தையும் முன்னேற்றத்தை நோக்கி நகரச் செய்திருக்கின்றது. அதிக ஆற்றலை வெளியேற்றும் திறன் கொண்ட ஓர் பைக் மாடலே கவாஸாகி நிஞ்சா 400 மாடல் ஆகும். இது ஓர் ஸ்போர்ட்ஸ் பைக் ஆகும். இப்போது இந்த பைக்கிலேயே அவர் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார்.
தன்னுடைய பணிகளுக்கும் அவர் இந்த பைக்கையே பயன்படுத்தி வருகின்றார். அதேவேளையில், கவாஸாகி நிஞ்சா 400 மாடல் இப்போது விற்பனையில் இல்லை. அதற்கு பதிலாக நிஞ்சா 500 மாடலே விற்பனையில் இருக்கின்றது. ஆகையால், தற்போது வாங்கிக் கொடுக்கப்பட்டு இருக்கும் புதிய மாடல்தானா என்பது தெரியவில்லை.
சென்ற ஆண்டு மே மாதத்திலேயே இந்த பைக்கை விற்பனையில் இருந்து கவாஸாகி அகற்றியது. நிஞ்சா 400 பைக்கில் 399 சிசி திறன் கொண்ட பாரல்லல் ட்வின் லிக்யூட் கூல்டு டிஓஎச்சி 8 வால்வு எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 44.8 எச்பி பவரையும், 37 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இத்தகைய திறன் கொண்ட நிஞ்சா 400 பைக்கையே இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்து விற்பனையில் இருந்து அகற்றி அதற்கு பதிலாக நிஞ்சா 500 மாடலை விற்பனைக்குக் கொண்டு கவாஸாகி திட்டமிட்டு இருக்கின்றது. நிஞ்சா 400 விற்கப்பட்ட அதே விலையிலேயே புதிய நிஞ்சா 500 விற்கப்படுகின்றது.

இதற்கு 5 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். நிஞ்சா 500 பைக்கில் 451 சிசி திறனை வெளியேற்றும் வசதிக் கொண்ட லிக்விட் கூல்டு பாரல்லல் ட்வின் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இதே எஞ்சினே எலிமினேட்டர் போன்ற பைக் மாடல்களிலும் கவாஸாகி பயன்படுத்துகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 45 பிஎஸ் பவரையும், 42.6 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸே நிஞ்சா 400 பைக்கில் வழங்கப்பட்டது.
இதுபோன்று இன்னும் பல பிரீமியம் தர அம்சங்களை கவாஸாகி நிருழனவழங்கி இருக்கின்றது. அந்தவகையில், இலகு எடைக் கொண்ட டிரெல்லிஸ் ஃப்ரேம், ஸ்மார்ட்ஃபோன் இணைப்பு வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ப்ளூடூத் இணைப்பு வசதி என ஏகப்பட்ட சிறப்புகளை நிஞ்சா 500 தனக்குள் தாங்கி இருக்கின்றது.
இதுபோன்ற அதிக அம்சங்களை இந்த பைக் தாங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய பைக்கையே வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் அவருடைய அப்பாவிற்கு வாங்கிக் கொடுத்திருக்கின்றார். வருகின்ற பிப்ரவரி 16 ஆம் தேதி அன்றே இவருக்கும், சமாஜ்வாதி கட்சியின் பெண் எம்பிக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சூப்பர் பைக்குகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, ரிங்கு சிங் போன்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் பெரும் செல்வந்தர்கள் மத்தியிலேயே சூப்பர் பைக்குகளுக்கு சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாகவே கவாஸாகி நிறுவனம் தொடர்ச்சியாக தன்னுடைய தயாரிப்புகளை இந்தியாவில் தொடர்ச்சியாக மேம்படுத்திய வண்ணம் இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








