சச்சின் டெண்டுல்கரின் முதல் லம்போர்கினி கார்!! முதல் காரே இவ்வளவு அதிக விலையிலா... வாய் பிளக்கும் ரசிகர்கள்!

கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் விலைமிக்க லம்போர்கினி கார் ஒன்றை புதியதாக வாங்கியுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள படங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகளவில் பிரபலமான லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரையே தற்போது சச்சின் டெண்டுல்கர் வாங்கியுள்ளார். ஆனால் அது சாதாரண உருஸ் கார் கிடையாது. லக்சரி அம்சங்கள் மிகுந்த லம்போர்கினி உருஸ் எஸ் கார் ஆகும். இந்த உருஸ் மாடலை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து கொள்ளவும் முடியும்.

sachin tendulkar owner of lamborghini urus s

லம்போர்கினி உருஸ் எஸ் கார் சமீபத்தில்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குள் இந்த காரை சச்சின் தனது கேரேஜில் இணைத்துள்ளார். நமக்கு கிடைத்துள்ள படங்கள் சச்சின் இந்த காரை டெலிவிரி எடுக்கும்போது எடுக்கப்பட்டவை கிடையாது. ஏனெனில் இந்த படங்களில் காட்சித்தரும் சச்சினின் உருஸ் எஸ் லக்சரி காரில் ஏற்கனவே வெள்ளை நிற பிளேட் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் அர்த்தம் என்னவென்றால், இந்த கார் ஏற்கனவே ஆர்டிஓ-இல் பதிவு செய்யப்பட்டுவிட்டது என்பதாகும். லம்போர்கினி உருஸ் எஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது தற்சமயம் ரூ.4.18 கோடியாக உள்ளது. உருஸ் எஸ் காரை காட்டிலும் விலைமிக்க உருஸ் பெர்ஃபார்மண்டே காரையும் லம்போர்கினி நிறுவனம் விற்பனை செய்கிறது. பெர்ஃபார்மண்டே வெர்சனின் விலை ஆனது உருஸ் எஸ் காரை விட ரூ.4 லட்சம் அதிகம்.

sachin tendulkar owner of lamborghini urus s

உருஸ் எஸ் காரில் காற்று சஸ்பென்ஷன் சிஸ்டம் வழங்கப்படுகிறது. ஆனால் பெர்ஃபார்மண்டே காரில் நிலையாக சுருள் செட்அப் தாழ்வாக பொருத்தப்படுகிறது. இந்த சுருள் செட்அப் ஆனது சிறப்பான ஹேண்ட்லிங்கை வழங்கக்கூடியது. அதேநேரம், உருஸ் எஸ் காரில் வழங்கப்படும் காற்று சஸ்பென்ஷனிலும் உயரத்தை அதிகரித்தும்/ குறைத்தும் கொள்ளலாம். ஆதலால் இதுவும் சவுகரியமான பயண அனுபவத்தை வழங்கக்கூடியதே ஆகும்.

இத்தகைய சஸ்பென்ஷன் செட்அப் உடன் மணல், பனி & சகதி என 3 விதமான ஆஃப்-ரோடு ரைடிங் மோட்களும் உருஸ் எஸ் காரில் வழங்கப்படுகின்றன. இதற்கேற்ப, ஸ்போர்டியரான வடிவ பம்பர் மற்றும் கூலிங் வெண்ட்ஸை கொண்ட பொனெட் உடன் காரின் தோற்றமும் முரட்டுத்தனமானதாக கொடுக்கப்படுகிறது. காரின் உள்ளே லெதர் அலங்கரிப்புகள் நிலையான தேர்வாக வழங்கப்படுகின்றன. கூடுதல் லக்சரி தரத்தில் எதிர்பார்ப்பவர்கள் அல்காண்ட்ரா லெதர் அலங்கரிப்புகளை பெறலாம்.

sachin tendulkar owner of lamborghini urus s

நமக்கு கிடைத்துள்ள படங்களில் காரின் உட்பகுதியை பார்க்க முடியததால், சச்சின் டெண்டுல்கர் எந்த மாதிரியான கேபினை பெற்றுள்ளார் என்பது தெரியவில்லை. லம்போர்கினி உருஸ் எஸ் காரில் 4.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 666 பிஎஸ் மற்றும் 850 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தான் ரூ.4.18 கோடி. ஆன்-ரோடு விலை ஏறக்குறைய ரூ.5 கோடி வந்துவிடும். ரூ.5 கோடியில் கார் எல்லாம் சச்சின் டெண்டுல்கர் போன்ற பிரபலங்களுக்கு சர்வ சாதாரணமான விஷயம். இதுதான் சச்சின் வாங்கியுள்ள முதல் லம்போர்கினி கார் என கூறப்படுகிறது. சச்சினிடம் போர்ஷே கேயென்னே டர்போ என்ற மற்றொரு லக்சரி எஸ்யூவி காரும் உள்ளது.

Source: Team BHP

More from DriveSpark

Article Published On: Friday, June 2, 2023, 15:13 [IST]
English summary
Indian cricketer sachin tendulkar owner of new lamborghini urus s
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X